oruvannews Archives - Oruvan.com

கடவுச்சீட்டு மோசடி வழக்கு – வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பெக்கோ சமனின் மனைவி
பெக்கோ சமனனின் மனைவி ஷாதிகா லக்ஷனி கடவுச்சீட்டு மோசடி தொடர்பில் பலத்த பாதுகாப்புடன் வவுனியா நீதிமன்றில் நேற்று (10.11) ஆஜர்படுத்தப்பட்டார்.

பாதாள உலகக் குழுத் தலைவரான பெக்கோ சமன் மற்றும் அவரது மனைவி ஷாதிகா லக்ஷனி உள்ளிட்ட 6 பேர் அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலக அதிகாரி ஒருவர் ஊடாக கடவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்டதாக பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனி மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடும் பொலிஸ் பாதுகாப்புடன் அவர் வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குறித்த வழக்குத எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், அவரது விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

The post கடவுச்சீட்டு மோசடி வழக்கு – வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பெக்கோ சமனின் மனைவி appeared first on Oruvan.com.

அரச வெற்றிடங்களுக்கு புதிய ஆட்சேர்ப்பு
அரச சேவை நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்க பிரதமர் ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சில் 909, பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சில் 109, சுற்றுச்சூழல் அமைச்சில் 144, பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சில் 2,500, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் 22, நிதி மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சில் 185, மீன்வளம், நீர்வாழ் மற்றும் கடல்சார் வள அமைச்சில் 20, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் 1,615, மத்திய மாகாண சபையில் 72, ஊவா மாகாண சபையில் 303 என மொத்தம் 5,882 வெற்றிடங்களுக்கு புதிய ஆட்சேர்ப்புகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

The post அரச வெற்றிடங்களுக்கு புதிய ஆட்சேர்ப்பு appeared first on Oruvan.com.

படலந்த ஆணைக்குழு அறிக்கை இவ்வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்
‘படலந்த ஆணைக்குழு அறிக்கையை’ இவ்வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று (11) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.

The post படலந்த ஆணைக்குழு அறிக்கை இவ்வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் appeared first on Oruvan.com.

மீளப் பெறப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வைப்புத் தொகை
இரத்து செய்யப்பட்ட 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வைப்புத் தொகையிலிருந்து 118 மில்லியன் ரூபாய் மீள பெறப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இரத்து செய்யப்பட்ட தேர்தலின் வைப்புத் தொகையை மீள வழங்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதன்படி, அரசியல் கட்சிகள், சுயாதீன குழுக்கள் 118 மில்லியன் ரூபாயை மீளப் பெற்றுக்கொண்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை, 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அவர் கூறினார்.

தேவையான கலந்துரையாடல்கள் பொலிஸ் மா அதிபர், அரசு அச்சுப்பொறியாளர் மற்றும் தபால் மா அதிபர் ஆகியோருடன் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

The post மீளப் பெறப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வைப்புத் தொகை appeared first on Oruvan.com.

புதிய மறுமலர்ச்சிக்கான பயணத்தில் பெண்கள் தலைமுறையினரின் ஆதரவு அவசியம் – ஜனாதிபதி
பொருளாதார சுபீட்சத்தை அடைவதற்கும், நாட்டின் பெண்களுக்கு பாதுகாப்பான வாழ்வு மற்றும் நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஒரு புதிய மறுமலர்ச்சியை நோக்கிய நமது பயணத்தில் முழுமையான பெண்கள் தலைமுறையினரின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மூலம் வெளியிடப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதியின் மகளிர் தின வாழ்த்துச் செய்தியில்,

“சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும். தொழில் செய்யும் நேரத்தைக் குறைத்தல், மிகச் சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி சுமார் 15,000 பெண்கள் நியூயோர்க் நகரில் நடத்திய பேரணியின் விளைவாக மார்ச் 08 சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் மகளிர் தினத்தைக் கொண்டாடுவதற்காக நம் நாட்டில் பல கலந்துரையாடல்களும் கருத்தாடல்களும் நடத்தப்பட்டிருந்தாலும், மேடைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அந்த கலந்துரையாடல்கள், பூமியில் ஒரு யதார்த்தமாக விதைக்கப்படவில்லை.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கட்டியெழுப்புவதில் இலங்கை பெண்களின் பங்களிப்பு மகத்தானது. அந்த மகத்தான பணிக்காக ஒரு அரசாங்கமென்ற வகையில் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளை, கடந்த குறுகிய காலத்தில் இலங்கைப் பெண்களுக்கு பல வெற்றிகளை அடைய தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளோம் என்பதையும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

பல தசாப்தங்களாக கலந்துரையாடலுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம், பங்கேற்பு மற்றும் வகிபாகத்தை அதிகரித்து, கடந்த பொதுத் தேர்தலில் இருபத்தி இரண்டு பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இந்நாட்டின் அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.

அதேபோல், ஆண்- பெண் சமூக சமத்துவத்திற்கான சமூக நீதியை அடைவதற்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையான உற்பத்திப் பொருளாதார செயல்பாட்டில், இந்நாட்டின் சனத்தொகையில் 51.7% ஆக இருக்கும் பெண்களை தீவிரமாகவும் செயற்திறனுடனும் ஈடுபடுத்தும் திட்டத்தை நாம் செயல்படுத்தியுள்ளோம்.

நீதியான சமூகம், சுதந்திரமான நாடு, சுதந்திரமான பெண்கள் என்ற அபிலாஷைகளை அடையும் வகையில் வீடு, போக்குவரத்து, சமூகம், தொழிலிடம் மற்றும் அரசியல் உட்பட அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கும், பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் போன்ற பெண்களின் தனித்துவமான உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அரச கொள்கைகளை வகுப்பதற்கு நாம் முன்னுரிமை அளித்துள்ளோம்.

இதற்கமைய, ” சகல பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கும் சமத்துவம்,உரிமைகள் மற்றும் வலுவூட்டல் எனும் தொனிப்பொருளின் கீழ் ” நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் ” என இந்த ஆண்டு மகளிர் தினத்தை ஏற்பாடு செய்வதிலுள்ள அர்த்தம் மற்றும் நடைமுறைச்சாத்தியம் என்பனவற்றை நினைவூட்ட வேண்டும்.

பொருளாதார சுபீட்சத்தை அடைவதற்கும், நாட்டின் பெண்களுக்கு பாதுகாப்பான வாழ்வு மற்றும் நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஒரு புதிய மறுமலர்ச்சியை நோக்கிய நமது பயணத்தில் முழுமையான பெண்கள் தலைமுறையினரின் ஆதரவை எதிர்பார்த்து சர்வதேச மகளிர் தினத்திற்கு எனது மனார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post புதிய மறுமலர்ச்சிக்கான பயணத்தில் பெண்கள் தலைமுறையினரின் ஆதரவு அவசியம் – ஜனாதிபதி appeared first on Oruvan.com.

தேசபந்து தென்னகோனின் வரப்பிரசாதங்கள் இரத்து?
கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வழங்கப்பட்ட கார் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நிறுத்தி வைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசபந்து தென்னகோனின் பாதுகாப்பு மற்றும் பிற சலுகைகளை நீக்கக் கோரி, பொலிஸ் தலைமையகத்திலிருந்து ஜனாதிபதியின் செயலாளர் சனத் நந்தித குமாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தேசபந்து தென்னகோனுக்கு உத்தியோகபூர்வ இல்லம், உத்தியோகபூர்வ வாகனம், அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஆறு அதிகாரிகள், பொலிஸ் சிறப்புப் படையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் மற்றும் ஊதியச் சலுகைகள் வழங்கப்பட்டன.

வெலிகமவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஒரு சந்தேக நபரை கைது செய்யச் சென்றபோது, ​​வெலிகம பொலிஸ் அதிகாரிகள் நடத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சண்டையில் கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த ஒரு பொலிஸ் சார்ஜன்ட் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, மாத்தறை நீதவான் நீதிமன்றம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தது.

அந்த உத்தரவை மீறி தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தைத் தவிர்த்து வருவதாகவும், அவரைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு அதிகாரிகள் அடங்கிய பல குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேசபந்து தென்னகோனின் கையடக்கத் தொலைபேசித் தகவல்கள் மற்றும் அவர் இருக்கும் இடம் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

The post தேசபந்து தென்னகோனின் வரப்பிரசாதங்கள் இரத்து? appeared first on Oruvan.com.

ஆளும் கட்சிக்கு ஒரு நீதி எனக்கு ஒரு நீதியா? – மீண்டும் ஆக்ரோஷமடைந்த அர்ச்சுனா எம்.பி
ஆளும் கட்சிக்கு ஒரு நீதி எனக்கு ஒரு நீதியா என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபாநாயகரிடம் கேள்வியெழுப்பினார்.

இன்றைய (05) நாடாளுமன்ற அமர்வில் தனது கருத்தை முன்வைக்க நேரம் வழங்கப்படாமை குறித்து கேள்வியெழுப்பும் சந்தர்ப்பத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“ஆளும் கட்சி முன்வைத்த கருத்து தொடர்பில் தனது கருத்தை தெரிவிப்பதாகக் கூறி இராமநாதன் அர்ச்சுனா ஒரு நிமிட நேரத்தை கோரியிருந்தார்.

அவருடைய கோரிக்கைக்கு ஏற்ப அவருக்கான ஒரு நிமிடம் வழங்கப்பட்டது எனினும், அவர் மற்றுமொரு கருத்தை முன்வைத்த காரணத்தினால் சபாநாயகர் அவரை மறுத்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,

“ ஆளும் கட்சிக்கு ஒரு நீதி, எனக்கு ஒரு நீதி. நீங்கள் என்னை இடையூறு செய்கிறீர்கள், மறுபடியும் எனக்கு ஒரு நிமிடம் தாருங்கள்.

ஏன் நீங்கள் எங்களுக்கான நேரத்தை ஒதுக்குவதில்லை. முக்கியமான ஒரு காரணத்தை முன்வைக்க நேரத்தை தாருங்கள்.

பக்க சார்பாக நடந்துக் கொள்ள வேண்டாம். ” எனத் தெரிவித்தார்.

The post ஆளும் கட்சிக்கு ஒரு நீதி எனக்கு ஒரு நீதியா? – மீண்டும் ஆக்ரோஷமடைந்த அர்ச்சுனா எம்.பி appeared first on Oruvan.com.

அமைச்சரவையின் அளவைக் குறைப்பதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது – விஜேதாச ராஜபக்ச
வரப்பிரசாதங்களை குறைப்பதன் மூலமோ அல்லது அமைச்சரவையின் அளவைக் குறைப்பதன் மூலமோ நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஊடகமொன்றுக்கு வழங்கிய கலந்துரையாடலேயே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“வரப்பிரசாதங்களை குறைப்பதன் மூலமோ அல்லது அமைச்சரவையின் அளவைக் குறைப்பதன் மூலமோ நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

நாட்டில் நிலவும் சிக்கலான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அமைச்சரவையில் குறைந்தது முப்பது உறுப்பினர்களாவது இருக்க வேண்டும்.

அத்தகைய அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுக்கு வரப்பிரசாதங்கள் வழங்கப்படுவதால் நாடு வீழ்ச்சியடையாது.

நாட்டை அபிவிருத்தி செய்ய ஒரு திட்டம் இருக்க வேண்டும்.

கடந்த அரசாங்கங்களின் ஆட்சியாளர்களும் தலைவர்களும் ஊழல் நிறைந்தவர்கள் என்ற கூற்றை எதிர்த்து எந்த வாதமும் இல்லை. அவர்கள் நாட்டை மட்டுமல்ல, அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் கட்சியையும் கூட அழித்துவிட்டனர்.

இதுபோன்ற தவறான ஆட்சியாளர்கள் சட்டத்தின்படி கையாளப்பட வேண்டும்.

தவறுகள் அல்லது குற்றவாளிகளைப் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு, தவறுகளையும் குற்றவாளிகளையும் அடையாளம் கண்டு, சட்டத்தை அமல்படுத்தி, நாட்டை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைத் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் அந்த வழியில் செயல்படுமா என்று மக்கள் காத்திருக்கிறார்கள்.” எனத் தெரிவித்தார்.

The post அமைச்சரவையின் அளவைக் குறைப்பதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது – விஜேதாச ராஜபக்ச appeared first on Oruvan.com.

தாதியர்கள் நாளை மூன்று மணித்தியால பணிப்புறக்கணிப்பு
2025 வரவு செலவு திட்டத்தில், மேலதிக நேரக் கொடுப்பனவு குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (06) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, நாளை (06) காலை 10 மணி முதல் 3 மணித்தியாலங்களுக்கு இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளனர்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய இதனைத் தெரிவித்தார்.

குறித்த காலப்பகுதியினுள் சகல வைத்தியசாலைகளுக்கும் முன்பாக தங்களது சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த சமன் ரத்னப்பிரிய,

“வைத்தியர்களுடனான கலந்துரையாடலிலும் கூட அவர்கள் கோரிய கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக அறியமுடிகிறது.

எனவே, தங்களுக்கு நியாயமான கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி, நாளைய தினம் 3 மணிநேர பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளோம்” என சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

The post தாதியர்கள் நாளை மூன்று மணித்தியால பணிப்புறக்கணிப்பு appeared first on Oruvan.com.

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் – வலியுறுத்தும் IMF
இலங்கை மின்சார சபை, கடந்த ஜனவரி மாதம் நாட்டின் மின்சார கட்டணத்தை திருத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த திருத்தத்துடன் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான செலவு, புதிய கட்டணத்தால் ஈடுகட்டப்படாது என்று சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளதாக இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி பீட்டர் பிரூவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தைப் பார்க்கும்போது, புதிய கட்டணத்தின் கீழ் இலங்கை மின்சார சபை எதிர்கொள்ளும் இழப்புகளைத் தடுக்க முடியாது என்பது தெளிவாகிறது என்றும் அவர் கூறினார்.

இதன் விளைவாக, இலங்கை மின்சார சபையின் கடன்கள் மீண்டும் குவியும் அபாயம் இருப்பதாகவும், அதனால் இலங்கை மின்சார சபை மீண்டும் அரசாங்கத்திற்கு சுமையாக மாறும் என்றும் அவர் கூறினார்.

இலங்கை மின்சார சபை அரசாங்கத்திற்கு எவ்வளவு சுமையாக இருக்கும் என்பது அனைவருக்கும் அனுபவம் உள்ளதால், வரவிருக்கும் மின்சார கட்டண திருத்தத்தில் செலவு ஈடுகட்டும் மின்சார விலையை மீண்டும் நிர்ணயிப்பது அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இழப்புகளை ஏற்படுத்தாத வகையில் விலைகளை நிர்ணயிப்பதற்கான தானியங்கி வழிமுறைகள் ஏற்கனவே உள்ளதாகவும், அவை செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

The post மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் – வலியுறுத்தும் IMF appeared first on Oruvan.com.