order Archives - Oruvan.com

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
369 இலட்சம் ரூபா மேலதிக வருமான வரி செலுத்தாமைக்கான காரணங்கள் இருப்பின் நீதிமன்றில் எழுத்துமூலம் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு கொழும்பு மேலதிக நீதவான் ஓஷத மிகர மஹராச்சி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது எதிர்வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி  நீதிமன்றில் எழுத்துமூலம் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சஜின் வாஸ் குணவர்தனவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

2010, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில்  தனிநபர் வருமான வரியை செலுத்தாமைக்காக  சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக உள்நாட்டு இறைவரி திணைக்களம் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

The post சஜின் வாஸ் குணவர்தனவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு appeared first on Oruvan.com.

ரணிலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை விமர்சிப்பது குறித்து எச்சரிக்கை
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை விமர்சிப்பது தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த அமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (24) விசேட ஊடக சந்திப்பை நடத்தி இதனை அறிவித்தது.

நாடாளுமன்றத்துக்கு வெளியே இந்த உத்தரவை விமர்சிக்கும் வகையில் அறிக்கைகள் வெளியிடப்பட்டால், அது நீதிமன்ற அவமதிப்புக்கு சமமாகிவிடும் என்று சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

மேலும் இவ்வாறான அறிக்கைகள் பொதுமக்களிடையே அமையின்மையை ஏற்படுத்தினால், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கப்படாமல் இருப்பதற்கு அது ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post ரணிலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை விமர்சிப்பது குறித்து எச்சரிக்கை appeared first on Oruvan.com.

ரணிலின் பிணைக் கோரிக்கை உத்தரவு ஒத்திவைப்பு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணைக் கோரிக்கை தொடர்பான உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரை மணித்தியாலயத்திற்கு குறித்த உத்தரவு தொடர்பான அறிவிப்பை ஒத்திவைப்பதாக கொழும்பு கோட்டை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

The post ரணிலின் பிணைக் கோரிக்கை உத்தரவு ஒத்திவைப்பு appeared first on Oruvan.com.

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை சம்பவங்களை தடுக்க உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பல்கலைக்கழகங்களில் பகிடிவதை செய்வதைத் தடுக்க தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களை அவசியம் அமுல்படுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பகிடிவதையைத் தடுப்பதற்காக ஏற்கனவே வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் தொகுப்பை செயற்படுத்துவது அவசியம் என பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (09) உத்தரவிட்டது.

கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் இந்த வழிகாட்டுதல்களை செயற்படுத்த தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி மற்றும் வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

2020 ஆம் ஆண்டில் பகிடிவதை காரணமாக ஏற்பட்ட காயங்களால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொடர்ந்து பாதிக்கப்பட்ட முதலாம் ஆண்டு பல்கலைக்கழக மாணவரான பசிந்து ஹிருஷான் டி சில்வா தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு மீதான தீர்ப்பை வழங்கும் போது, ​​நீதியரசர்கள் ஷிரான் குணரத்ன, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

இந்த உத்தரவுகள் எவ்வாறு செயற்படுத்தப்படுகின்றன என்பதற்கான முன்னேற்றத்தை மீளாய்வு செய்ய அடுத்த வருடம் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வழக்கை மீண்டும் அழைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

The post பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை சம்பவங்களை தடுக்க உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு appeared first on Oruvan.com.

டேன் பிரியசாத் கொலை – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
சமூக செயற்ப்பாட்டாளர் டேன் பிரியசாத் கொலை செய்யப்பட்ட வழக்கின் பிரதான சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அனுமதியளித்தது.

சந்தேக நபர் இன்றைய தினம் மிரிஹான சிறப்பு புலனாய்வுப் பிரிவினரால் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.

கடந்த 22 ஆம் திகதி இரவு வெல்லம்பிட்டியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் டேன் பிரியசாத் உயிரிழந்தார்.

வெல்லம்பிட்டியவில் உள்ள ‘லக்சந்த செவன’ தொடர்மாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் அன்றிரவு 9.10 மணியளவில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் பிஸ்டல் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post டேன் பிரியசாத் கொலை –  நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு appeared first on Oruvan.com.