One Archives - Oruvan.com

அம்பலாந்தோட்டையில் 2,200 லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது
அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் உள்ள வீடொன்றில் அனுமதிப்பத்திரமின்றிப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2,200 லீற்றர் டீசலுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹுங்கம பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்ட டீசல் கையிருப்பும் மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த சந்தேகநபர் இன்றைய தினம் (22) ஹம்பாந்தோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

The post அம்பலாந்தோட்டையில் 2,200 லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது appeared first on Oruvan.com.

இலங்கையில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையில்
நாட்டில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் சுமார் 80% ஆனவர்கள்  கிராமப்புறங்களில் வசிப்பதாக  கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல்  அமைச்சர் உபாலி பன்னிலகே குறிப்பிட்டுள்ளார் .

இதன் காரணமாக கிராமிய வறுமையை ஒழிப்பதற்கே முதலிடம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் .

ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் வறுமைக்கான காரணங்களைக் கண்டறிந்து, சமூக அபிவிருத்தி சபையின் அனைத்துப் பிரதிநிதிகளும் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார் .

தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகப் பொருளாதாரத்தில் ஒருவித தாக்கம் ஏற்பட்டுள்ளது  என்றும்   கடந்த 15 மாத காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரம் பலப்படுத்தப்பட்டதன் காரணமாக அந்தத் தாக்கத்தைக் குறைத்துக்கொள்ள முடிந்துள்ளது என்றும்  அமைச்சர் உபாலி பன்னிலகே கூறியுள்ளார் .

அவ்வாறு பொருளாதாரத்தைப் பலப்படுத்தியிருக்காவிட்டால், மீண்டும் ஒரு வரிசை யுகம் உருவாகியிருக்கும் என்றும் அமைச்சர் உபாலி பன்னிலகே மேலும் வலியுறுத்தியுள்ளார் .

The post இலங்கையில்  நான்கில் ஒரு பகுதியினர் வறுமையில் appeared first on Oruvan.com.

வென்னப்புவ பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி
வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அடையாளந் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை இலக்கு வைத்து, காரில் வரகை தந்தவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காரில் வருகை தந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை காரில் மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளனர்.

அதன்பின்னர், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்ளை கூறிய ஆயுதத்தினால் அவர்கள் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்தவர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது.

மற்றைய நபர் மீது காரில் வருகை தந்தவர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மேல்நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றிற்காக வழங்கப்பட்ட உத்தரவின் பேரில், வென்னப்புவ பொலிஸில் முன்னிலையாகி கையொப்பமிட சென்றவர் என்று தெரியவந்துள்ளது.

கையொப்பமிட்டதன் பின்னர், அவரும் மற்றுமொருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போதே, குறித்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் வழக்கு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதி அறிவிக்கப்படவிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

The post வென்னப்புவ பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி appeared first on Oruvan.com.

பேலியகொடையில் ஆயுத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி
பேலியகொடை, வெதமுல்ல பகுதியில் ஆயுத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்

பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (19) மாலை கிடைக்கப்பெற்ற முறைபாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவருக்கும், மற்றும் ஒரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறிய நிலையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் களனி, வெதமுல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பேலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

The post பேலியகொடையில் ஆயுத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி appeared first on Oruvan.com.

நானுஓயாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயம்
நானுஓயா பெரகும்புர வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்து இன்று (19) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெரகும்புர பகுதியில் இருந்து நானுஓயா நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான

பேருந்தும் நானுஓயாவிலிருந்து பெரகும்புர நோக்கி எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரே காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post நானுஓயாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயம் appeared first on Oruvan.com.

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி
அம்பன்பொல பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனது காணிக்குள் நுழைந்த காட்டு யானையை விரட்ட முயன்றபோது, அவர் காட்டு யானையால் தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் காட்டு யானைத் தாக்குதலுக்குப் பின்னர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர் அம்பன்பொல பகுதியைச் சேர்ந்த 53 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி appeared first on Oruvan.com.

மினுவங்கொடையில் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
மினுவங்கொடை – உன்னருவ பகுதியில் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து ஹெரோயின் மற்றும் 308 கிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post மினுவங்கொடையில் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது appeared first on Oruvan.com.

மஸ்கெலியாவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான ஒருவர் பலி
மஸ்கெலியா சாமிமலை பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

குடிநீர் குழாய் செப்பனிடச் சென்ற போது அவர் இன்று பகல் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த நபர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

ஹொரணை பெருந்தோட்டத்துக்குட்பட்ட ஓல்ட்டன் தோட்டம் கிங்கோரா பிரிவைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The post மஸ்கெலியாவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான ஒருவர் பலி appeared first on Oruvan.com.

தொடர்மாடி கட்டிடத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் பலி
கண்டி பொது வைத்தியசாலையில் தொடர்மாடி கட்டிடத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நபர் நேற்று (12) மதியம், ஒப்பந்த அடிப்படையில் வைத்தியசாலை கட்டிடங்களுக்கு வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தபோது மூன்றாவது மாடியில் இருந்து மயங்கி வீழ்ந்துள்ளார் .

கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் .

குறித்த நபர் ஹாரிஸ்பத்து பகுதியில் வசிக்கும் 71 வயதுடையவர் ஆவார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post தொடர்மாடி கட்டிடத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் பலி appeared first on Oruvan.com.

நபர் ஒருவரை கடத்திச் சென்று பணம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது
நபர் ஒருவரை கடத்திச் சென்று 8,478,000 ரூபா பணத்தை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாய் செல்வதற்காக குறித்த நபர் விமான நிலையத்திற்கு இன்று காலை வருகைத் தந்த போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளார்.

The post நபர் ஒருவரை கடத்திச் சென்று பணம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது appeared first on Oruvan.com.