oil Archives - Oruvan.com

எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி
உலக சந்தையில் கடந்த சில நாட்களாக அதிகரிப்பை பதிவு செய்த மசகு எண்ணெய் விலை தற்போது குறைவடைந்துள்ளது.

இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் விலை இன்று காலை சுமார் 87.88 அமெரிக்க டொலர்களாக பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் விலை சுமார் 83.35 டொலர்களாக பதிவாகியுள்ளது.

2022 ஜூலைக்குப் பிறகு முதன்முறையாக திங்கட்கிழமை பீப்பாயொன்றின் மசகு எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியது, மேலும் அதிகபட்ச விலை 119 அமெரிக்க டொலர்களாகப் பதிவானது.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாகவே மசகு எண்ணெய் விலை இவ்வாறு அதிகரிப்பை பதிவு செய்தது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போர் விரைவில் நிறைவடையும் என அறிவித்ததையடுத்து மசகு எண்ணெய் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்தது.

The post எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி appeared first on Oruvan.com.

மத்திய கிழக்கு மோதல் : ஹார்முஸ் அச்சம் முதல் பங்கு சரிவு வரை – உலக பொருளாதாரம் அழுத்தத்தில்
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் பிராந்திய பாதுகாப்பை தாண்டி, உலகளாவிய பொருளாதாரத்தில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க நோக்கங்கள் நிறைவேறும் வரை ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இஸ்ரேல் தெஹ்ரானை இலக்கு வைத்து புதிய வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா தளங்களும் தாக்கப்பட்டுள்ளன. பெய்ரூட் நகரின் தெற்கு பகுதிகளில் பல வெடிப்புகள் பதிவாகியுள்ளன.

ஹார்முஸ் தடைகள் எண்ணெய் சந்தையை அச்சுறுத்துகின்றன

உலக எண்ணெய் போக்குவரத்திற்கான முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணை  ஊடான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்து பதற்றத்தில் உள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த கப்பலில் 15 இந்திய ஊழியர்கள் இருந்த சூழலில், இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

உலகில் கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் திரவ இயற்கை எரிவாயுவுக்கு சுமார் 20% முதல் 25% வீதம் வரை இந்த பாதையே பயன்படுத்துகிறது.

நீர்வழி அதிகாரப்பூர்வமாக மூடப்படவில்லை என்றாலும், டேங்கர் கப்பல்கள் அச்சத்தால் நிறுத்தப்படுகின்றன. காப்பீட்டு கட்டண உயர்வு மற்றும் தாக்குதல் அச்சம் காரணமாக போக்குவரத்து தாமதமடைகிறது.

இந்த வழியாக தினமும் சுமார் 15 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் அனுப்படுகிறது. இந்த நீரிணையில் போக்குவரத்து தடை ஏற்பட்டால், உலகளாவிய எண்ணெய் விலை மேலும் வேகமாக உயரக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போதைய போர் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் விலை (Brent Crude) 09 வீதம் உயர்ந்து பீப்பாயொன்று 79.30 அமெரிக்க டொலராக உயர்ந்தது. ஒரு கட்டத்தில் அது 82 டொலரையும் எட்டியது.

அதேபோன்று, அமெரிக்க அளவுகோலான WTI ரக கச்சா எண்ணெய் 6.2% உயர்ந்து 71.17 டொலராக பதிவாகியுள்ளது.

அதிரும் பங்குச் சந்தைகள்

முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துகளுக்கு நகரும், உலக பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டுள்ளன.

மோதல் நீடிக்கும் சாத்தியம் அதிகரித்ததால் ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ஜப்பான் குறியீடுகள் வீழ்ச்சி கண்டதுடன் விமான நிறுவன பங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைட் தற்காலிகமாக பங்குச் சந்தைகளை மூடின. முதலீட்டாளர்கள் டொலர் மற்றும் தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துகளுக்கு நகர்ந்ததால் யூரோ மதிப்பு சரிந்தது டொலர் யென் எதிராக உயர்ந்தது.

சந்தை பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் விலையும் 1.6% உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு

5,360 அமெரிக்க டொலராக உயர்ந்தது.

பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் – புதிய சவால்

எண்ணெய் விலை உயர்வு, மத்திய வங்கிகளுக்கு புதிய சவாலாக உள்ளது. எண்ணெய் விலை உயர்வால், உலகளாவிய பணவீக்கம் அதிகரிக்கும். இது ஏற்கனவே தளர்வு அறிகுறைகளை வழங்கியிருந்த மத்திய வங்கிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

அமெரிக்கா ஜூன் மாதத்தில் வட்டி விகிதக் குறைப்புக்கான சுமார் 50% வாய்ப்பை மதிப்படுகிறது. ஆனால் எண்ணெய் சந்தையில் அதிர்ச்சி நீடித்தால், வட்டி குறைப்புகள் தாமதமடையக்கூடும்.

சர்வதேச வர்த்தகச் சங்கிலி நெருக்கடியில்

வளைகுடா நகரங்கள் மீது தாக்குதல்கள் நடைபெறுவதாலும் பல சர்வதேச விமான நிறுவனங்கள் சேவைகளை நிறுத்தியுள்ளன. டேங்கர் கப்பல்கள் ஹார்முஸ் வழியாக செல்லத் தயங்குகின்றன. இதனால் சர்வதேச வர்த்தகச் சங்கிலி பாதிப்பு, காப்பீட்டு செலவுகள் மற்றும் இறக்குமதி-ஏற்றுமதி விலைகளில் உயர்வு ஏற்பட்டுள்ளது.

உலக சந்தைகளில் எரிபொருள் மற்றும் முக்கிய பொருட்கள் தொடர்பான தகவல்கள் சில நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் மறைத்து வைக்கப்பட்டு, பொதுமக்களின் அச்சத்தையும் பயன்படுத்தி சேமிக்கப்பட்ட எரிபொருள் மற்றும் எரிவாயுவை அதிக விலையில் விற்பனை செய்யும் முயற்சிகள் நடக்கின்றன.

சில சந்தைகள் நேரடி விலை உயர்வை தடுக்கும் வகையில் தகவலை மறைத்து வைக்கின்றன. இதனால் பணவீக்கம், சர்வதேச வர்த்தக செலவுகள் மற்றும் முதலீட்டு நிலைமை மீதான அழுத்தம் அதிகரிக்கிறது.

உலகளாவிய அபாயம்

மத்திய கிழக்கு மோதல், உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு முக்கிய அச்சமாக மாறியுள்ளது. மோதல் முதலில் பிராந்திய அபாயமாகக் கருதப்பட்டாலும், தற்போது எண்ணெய் விநியோக தடைகள், பங்குச் சந்தை சரிவு, பணவீக்கம், அரசியல் நிலைத்தன்மை குறைவு அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்துள்ளன.

அடுத்த சில வாரங்களில் ஹார்முஸ் திறந்தே இருக்கும் திசையா அல்லது தடைகள் உருவாகுமா என்பது உலக பொருளாதார பாதையை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அமையும்.

சில ஆய்வாளர்கள், மோதல் விரிவடைந்தால் 1970 களில் ஏற்பட்ட எண்ணெய் அதிர்ச்சியை மீண்டும் நினைவூட்டும் தாக்கம் ஏற்படும் என எச்சரிக்கின்றனர்.

உலக சந்தைகள் இப்போது அரசியல் தீர்மானங்களை கவனித்து, ஒரு பிராந்திய மோதல் உலக பொருளாதார சமநிலையை மாற்றுமா என்பதில் கண்காணிப்பில் உள்ளது.

The post மத்திய கிழக்கு மோதல் : ஹார்முஸ் அச்சம் முதல் பங்கு சரிவு வரை – உலக பொருளாதாரம் அழுத்தத்தில் appeared first on Oruvan.com.

மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 63.07 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.10 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.792 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம் appeared first on Oruvan.com.

வரிகளைக் குறைக்க அமெரிக்காவிலிருந்து எரிபொருளை வாங்க இலங்கை யோசனை
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர வரி கட்டணங்களை மேலும் குறைப்பதற்கும் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து இலங்கை பரிசீலித்து வருகின்றது.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மாதாந்திர கச்சா எண்ணெய் கட்டணம் சுமார் 300-400 மில்லியன் டொலர்கள் என்றும், இதை விட செலவு குறைந்ததாக இருந்தால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வதைப் பரிசீலிக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், அரசாங்க பரிவர்த்தனைகளின் கீழ் கச்சா எண்ணெய் வாங்குவதற்குதடை இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏனெனில் அமெரிக்காவில் எரிபொருள் வர்த்தகத்தில் எந்த அரசு நிறுவனமும் ஈடுபடவில்லை என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த ஆண்டு இலங்கையின் மொத்த எரிபொருள் இறக்குமதி செலவு 4.3 பில்லியன் டொலர்கள் ஆகும்.

இந்நிலையில், அமெரிக்கா தனது சந்தையில் நுழையும் இலங்கைப் பொருட்கள் மீது 30 சதவீத வரியை விதித்துள்ளது. இருப்பினும், இந்த கட்டண விகிதத்தை மேலும் குறைக்க எதிர்வரும் முதலாம் திகதி வரை பேச்சுவார்த்தை நடத்த இலங்கைக்கு வாய்ப்பு உள்ளது.

2024 ஆம் ஆண்டில், மூன்று பில்லியன் டொலர்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் இலங்கைக்கு வருமானம் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதிக்காக 368.2 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா உள்ளது, இது இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 27 வீதம் ஆகும். அமெரிக்காவிற்கு இலங்கை அதிகளவான ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post வரிகளைக் குறைக்க அமெரிக்காவிலிருந்து எரிபொருளை வாங்க இலங்கை யோசனை appeared first on Oruvan.com.

மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.74 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.74 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.72 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

The post மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி appeared first on Oruvan.com.

தேங்காய் எண்ணெய் மோசடி
பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு சந்தையில் வெளியிடப்படும் தேங்காய் எண்ணெய் மோசடி தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மிளகாய்த்துள் மஞ்சள் உள்ளிட்ட கலப்பட மசாலாப் பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் சமீரா முத்துக்குடா தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் சுகாதாரத் தரங்கள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் டிசம்பர் முதலாம் திகதி முதல் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

5000 இற்கும் மேற்பட்ட கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் 450 கடைகள் நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுகளை

விற்பனை செய்தமைக்காக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தேங்காய் எண்ணெய் மோசடி appeared first on Oruvan.com.