ODI Archives - Oruvan.com

இலங்கை அணி அறிவிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றுப் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் தலைவரான சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த தொடரின் முதல் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதனத்தில் நாளை இடம்பெறவுள்ளது.

இரண்டாவது போட்டி 24ஆம் திகதியும், மூன்றாவது போட்டி 27ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.

அணி விபரம்

சரித் அசலங்க (தலைவர்)

பெதும் நிசங்க

கமில் மிஷாரா

குசால் மெண்டிஸ்

சதீர சமரவிக்ரம

பவன் ரத்நாயக்க

தனஞ்சய டி சில்வா

ஜனித் லியனகே

கமிந்து மெண்டிஸ்

துனித் வெல்லாலகே

வனிந்து ஹசரங்கா

ஜெஃப்ரி வாண்டேஸ்

மகீஷ் தீக்ஷனா

மிலன் ரத்நாயக்க

அசிதா பெர்னாண்டோ

பிரமோத் மதுஷன்

ஈஷான் மலிங்கா

The post இலங்கை அணி அறிவிப்பு appeared first on Oruvan.com.

ஒருநாள் போட்டிக்கான முக்கியத்துவம் குறைந்து வருகின்றது
ஒருநாள் போட்டிக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற வீரர்களின் ஓய்வுக்கு பின்னர் ஒருநாள் போட்டியின் இருப்பு ஆபத்தாக மாறிவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில், ஒருநாள் போட்டிக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதாகவும் அஸ்வின் கூறியுள்ளார்.

“2027 உலகக் கிண்ண தொடருக்கு பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி நான் கொஞ்சம் கவலைப்படுகிறேன்.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்தும் இருக்கின்றது. ஆனால் உண்மையில் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அப்படியில்லை என்று ரவிச்சந்திரன் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

பார்வையாளர்கள் என்ன பார்க்க விரும்புகிறார்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

விராட் மற்றும் ரோஹித்தின் ஓய்வுக்குப் பிறகு ஒருநாள் வடிவம் மேலும் பலவீனமடையும் எனவும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

50 ஓவர் கிரிக்கெட் ஒரு காலத்தில் ஒரு சிறந்த வடிவமாக இருந்தது, மகேந்திர சிங் தோனி போன்ற ஜாம்வான் வீரர்களை உருவாக்கியது எனவும் அஸ்விக் கூறியுள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா அணி சார்பில் அனைத்து வடிவங்களிலும் 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஒருநாள் போட்டி குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post ஒருநாள் போட்டிக்கான முக்கியத்துவம் குறைந்து வருகின்றது appeared first on Oruvan.com.

விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு?
அவுஸ்திரேலிய தொடருக்கு பின்னர் மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஓய்வு பெறுவதாக வெளியான வதந்திகளை இந்திய கிரிக்கெட் சபையின் துணை தலைவர் ராஜீவ் சுக்லா நிராகரித்துள்ளார்.

ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரை வெற்றிகொண்ட இந்திய அணிக்கு அவர் பாராட்டையும் இதன்போது தெரிவித்திருந்தார்.

அத்துடன், ஒருநாள் அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

அவர்கள் இருவரும் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியில் அவர்களின் இருப்பு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்

இந்த தொடர் அவர்கள் இருவரின் கடைசி தொடர் என்ற வதந்திகளையும் ராஜீவ் சுக்லா நிராகரித்தார், இதுபோன்ற கூற்றுக்களை சொல்வது முற்றிலும் தவறு என்று வலியுறுத்தினார்.

ஓய்வு முடிவுகள் வீரர்களை மட்டுமே சார்ந்தது என்றும் அவர் கூறினார். கோலி மற்றும் சர்மா இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு? appeared first on Oruvan.com.

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி மேற்கிந்திய தீவுகள் சாதனை
34 ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணி சாதனையுடன் கூடிய கிரிக்கெட் வெற்றியை பதிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதன் மூலம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, 1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் தொடரை வெல்வது இதுவே முதல் முறை ஆகும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. இதில் டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றிருந்தது.

தொடர்ந்து இரு அணிகளும் மூன்றுக் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடின. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது.

இரண்டாவது போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வென்றது. இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று இடம்பெற்றிருந்தது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த பாகிஸ்தான் அணி பந்து வீசியிருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 294 ஓட்டங்களை குவித்திருந்தது.

எனினும், 295 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 92 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்படி, மேற்கிந்தியத் தீவுகள் அணி 202 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது.

ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் பெற்ற மிகப்பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது.

The post பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி மேற்கிந்திய தீவுகள் சாதனை appeared first on Oruvan.com.

மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் தரவரிசை பட்​டியல் – ஸ்மிருதி மந்​த​னா பின்னடைவு
சர்வதேச கிரிக்கெட் பேரவை மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் தரவரிசை பட்​டியலை வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

இதில் துடுப்பாட்டத்தில் இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கன ஸ்மிருதி மந்​த​னாவை பின்​னுக்​குத் தள்ளி இங்​கிலாந்து மகளிர் அணி​யின் தலைவி நாட் ஸ்கைவர் பிரண்ட் முதலிடம் பித்துள்ளார்.

தரவரிசை​யில் நாட் ஸ்கைவர் பிரண்ட் கடைசி​யாக 2023ஆம் ஆண்டு முதலிடம் வகித்​திருந்​தார்.

அண்மையில் இந்​தி​யா​வுக்கு எதி​ராக நடை​பெற்ற ஒரு​நாள் போட்டி தொடரில் 32 வயதான நாட் ஸ்கைவர் பிரண்ட் 160 ஓட்டங்கள் எடுத்​திருந்​தார். இதன் மூலம் 731 புள்​ளி​களு​டன் அவர், முதலிடத்தை பிடித்​துள்​ளார்.

ஸ்மிருதி மந்​தனா 728 புள்​ளி​களு​டன் இரண்டாவது இடத்​துக்கு தள்​ளப்​பட்​டுள்​ளார். இதனிடையே, இந்திய அணியின் தலைவி ஹர்​மன் பிரீத் மற்றும் ஜெமிமா ரோட்​ரிக்ஸ் ஆகியோரும் தரவரிசையில் முன்​னேற்​றம் அடைந்​துள்​ளனர்.

இதன்படி, ஹர்​மன்​பிரீத் கவுர் 21வது இடத்​தில் இருந்து 11வது இடத்​துக்​கும், ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 15வது இடத்​தில் இருந்து 13வது இடத்​துக்​கும் முன்னேரியுள்ளனர்.

பந்து வீச்சில் இங்​கிலாந்​து அணியின் சோஃபி எக்​லெஸ்​டோன், அவுஸ்​திரேலி​யா​வின் ஆஷ் கார்ட்​னர், மேகன் ஸ்கட் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்​தி​யா​வின் தீப்தி சர்மா 4வது இடத்​தில் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் தரவரிசை பட்​டியல் – ஸ்மிருதி மந்​த​னா பின்னடைவு appeared first on Oruvan.com.