Nugegoda Archives - Oruvan.com

நுகேகொடை துப்பாக்கிச் சூடு – கொழும்பில் பாதுகாப்பு அதிகரிப்பு
நுகேகொடை – கொஹூவல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து கொழும்பு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு 8:30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 25 வயதுடைய ஒருவர் காயமடைந்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுகேகொடை சந்தியில் இருந்து கொஹூவல நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்தே, இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்பு நகரம் முழுவதும் கூடுதல் பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக நம்பப்படும் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க சிறப்புத் தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பொது மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, அம்பலாங்கொட பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

The post நுகேகொடை  துப்பாக்கிச் சூடு – கொழும்பில் பாதுகாப்பு அதிகரிப்பு appeared first on Oruvan.com.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்டவே நுகேகொட பேரணி – நாமல் ராஜபக்ச
எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற உள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கத்திற்கு நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இந்தப் பேரணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, பிவித்துரு ஹெல உறுமய உள்ளிட்ட பல கட்சிகள்இணைய ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஏனைய கட்சிகளின் பங்கேற்பு குறித்து அந்தந்த கட்சிகளின் உள் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான கலந்துரையாடல்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருடன் கட்சித் தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்றன.

மேலும், கொழும்பு மலர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கட்சி அலுவலகத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினருடன் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

பல எதிர்க்கட்சிகள் ஏற்கனவே இந்த கலந்துரையாடலில் இணைந்துள்ளன, மேலும் பல கட்சிகள் பேரணியில் சேர இணக்கம் வெளியிட்டுள்ளன.

மற்ற கட்சிகளின் பங்கேற்பு அவர்களின் உள்ளக கலந்துரையடல் முடிந்த பிறகு அறிவிக்கப்படும்.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தும் நோக்கில் நடைபெறும் இந்தப் பேரணியில், அரசாங்கக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட பலர் இணைவார்கள் என்றும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

The post மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்டவே நுகேகொட பேரணி – நாமல் ராஜபக்ச appeared first on Oruvan.com.

நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளப் போவதில்லை – காரணம் கூறும் மகிந்த
இரு வேறு காரணங்களுக்கான எதிர்வரும் 21ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலுமிருந்து தங்காலைக்கு தன்னைப் பார்க்க வரும் மக்களைத் தவறவிட முடியாது எனவும், தங்காலையிலிருந்து நுகேகொடைக்கு பயணிக்க கூடுதல் நேரத்தை செலவிட வேண்டியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள போராட்டப் பேரணியில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிகழ்வில் நான் பங்கேற்காததை சிலர் தவறாகப் புரிந்து கொள்ளலாம்.

ஆனால், இரண்டு காரணங்களுக்காக அந்தப் பேரணியில் கலந்துகொள்ள முடியாது.

இதேவேளை, அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டம் தண்ணீர் போத்தல் போன்றது. போதைப்பொருள் சோதனைகளை நடத்தும்போது அரசாங்கம் எங்களை நோக்கி விரல் நீட்டியது.

ஆனால் இப்போது நாங்கள் சொல்வது சரி என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளப் போவதில்லை – காரணம் கூறும் மகிந்த appeared first on Oruvan.com.

அரசாங்கத்திற்கு எதிராக 21ஆம் திகதி நுகேகொடையில் பாரிய பேரணி – நாமல் எம்.பி அழைப்பு
ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திற்குள் பொதுமக்களின் அதிருப்தியைப் பெற்ற ஒரே அரசாங்கம் தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக நுகேகொடையில் பாரிய பொதுப் பேரணி ஒன்று  ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படும் எவரும் 21ஆம் திகதி நுகேகொடை பேரணியில் இணைந்துகொள்ள முடிவும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“அரசாங்கம் தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முடியவில்லை. விவசாயிகளுக்கு உரம் வழங்குவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.

அரசாங்கத்தின் திறமையின்மை எல்லா கோணங்களிலிருந்தும் தெரிகிறது. மக்களின் துன்பங்களைப் பார்க்கும்போது, ​​நேர்மறையாக இருக்க எங்களுக்கு எந்த வழியும் இல்லை.

எனவே, முதல் பாரிய அரசாங்க எதிர்ப்பு பேரணியை நடத்த நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படும் எந்தவொரு சக்தியும் எங்களுடன் இணையலாம்.

அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் பொய்களுக்கு எதிராக அரசாங்கத்தின் திறமையின்மையை உலகுக்குக் காட்ட நாங்கள் பேரணியை நடத்துகிறோம். அதில் அனைவரும் எங்களுடன் இணையலாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post அரசாங்கத்திற்கு எதிராக 21ஆம் திகதி நுகேகொடையில் பாரிய பேரணி – நாமல் எம்.பி அழைப்பு appeared first on Oruvan.com.

மீகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
மீகொட, நாகஹவத்த பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காரில் பயணித்த நபர் ஒருவர் இனந்தெரியாத இருவரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சகோதரரின் வீட்டில் இருந்து மீகொட நாகஹவத்த பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர் ஒருவர் காரை நிறுத்தியதாகவும், மேலும் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நபர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற போது உயிரிழந்தவரின் ஒன்றரை வயதுடைய மகளும் மனைவியும் காரில் இருந்துள்ளனர்.

உயிரிழந்த நபர் பத்தரமுல்லை செத்சிரிபாயவில் உள்ள சம்ருதி மானிய அலுவலகத்தில் அலுவலக உதவி அதிகாரியாக பணியாற்றியவர்.

இந்த சம்பவம் தொடர்பில் நுகேகொட குற்றப்பிரிவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதுடன், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post மீகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.