Nugegoda Rally Archives - Oruvan.com

உதித்தவின் கைத்துப்பாக்கி பறிமுதல்!!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த உதித லொக்குபண்டார, நேற்று முன்தினம் (25)

நுகேகொடையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு பேரணியின் போது, ​​ மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு கைப்பற்றியது.

நேற்று முன்தினம் பொலிஸார் உதித லொக்குபண்டாரவிடம் விசாரணை நடத்தி, ஏராளமானோர் கூடியிருந்த இடத்தில் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் வாக்குமூலம் பெற்றனர்.

கொம்பனியவீதிய பகுதியில் உள்ள உதித லொக்குபண்டார என்பவரின் வீட்டிலிருந்து துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட நேரத்தில் அந்த துப்பாக்கிக்கு உரிமம் இல்லை என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.

உதித லொக்குபண்டாரவிடம் பதிவு செய்யப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் ஒரு ரிவால்வர் இருந்தது, இவை இரண்டும் முன்னர் பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

பதிவு செய்யப்பட்ட கைத்துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவின்படி இந்த ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன.

ஒப்படைக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளில் ஒன்று சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு உதித லொக்குபண்டாரவிடம் திருப்பி அனுப்பப்பட்டது.

அந்த நேரத்தில், துப்பாக்கியை ஏற்றுக்கொண்ட பின்னர் தேவையான பதிவு உரிமத்தைப் பெற பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இருப்பினும், தஉதித லொக்குபண்டார நுகேகொட பேரணிக்கு வந்த நேரத்தில், இந்த ஆயுதத்திற்கான வருடாந்திர உரிமம் இன்னும் பெறப்படவில்லை.

இந்த விவகாரம் குறித்து பொலிஸர் விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும், விசாரணைக்குப் பின்னர் உதித லொக்குபண்டாரவுக்கு எதிராக சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நுகேகொடையில் பல எதிர்க்கட்சிகள் நடத்திய எதிர்ப்புக் கூட்டத்தின் போது, ​​நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூட்டத்தினரிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோது, ​​அவருக்கு அருகில் இருந்த உதித லொக்குபண்டார, துபாக்கியை மறைத்து வைத்திருப்பது புகைப்படங்களிலும் வலைத்தளங்களிலும் காணப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்த நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு, உதித லொக்குபண்டார ஒரு துப்பாக்கியை மறைத்து வைத்திருந்ததை வெளிப்படுத்தியிருந்தது.

அதன்படி, இது தொடர்பாக உதித லொக்குபண்டார நுகேகொட பிரிவு குற்றப்பிரிவுக்கு வரவழைக்கப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டு, துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்கு தெற்கு மாகாணத்திற்குப் பொறுப்பான துணைப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி) சமந்த விஜேசேகர மற்றும் மூத்த பொலிஸ் சூப்பிரண்டு மங்கள தெஹிதெனிய ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.

The post உதித்தவின் கைத்துப்பாக்கி பறிமுதல்!! appeared first on Oruvan.com.

மேலும் மூன்று பேரணிகளை நடத்த பொதுஜன பெரமுன திட்டம்
அரசாங்கத்திற்கு எதிராக நுகேகொடையில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியில் வெற்றியை தொடர்ந்து மேலும் மூன்று இடங்களில் பேரணிகளை நடத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது.

அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த பேரணி இரத்தினபுரி, அதைத் தொடர்ந்து மாத்தறை மற்றும் குருநாகல் போன்ற பகுதிகளில் நடைபெறும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜபக்ச ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தப் பேரணி மிகப்பெரிய வெற்றியாகக் கருதுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (22) ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி தெரிவித்திருந்தார்.

“நாங்கள் ஒன்றாக வேலை செய்யப் போகிறோம் என்பதை நேற்று காட்டினோம். யாரும் பின்தங்கப் போவதில்லை. இந்த நாட்டில் மீண்டும் பட்டத்து இளவரசர்கள் பிறக்க மாட்டார்கள்,” என்று பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் மீண்டும் ஒன்றிணைவதற்கு வழிவகுத்தால், தனது அரசியல் வாழ்க்கையை தியாகம் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை காட்டப்பட்ட ஒன்றுபட்ட முயற்சி எனவும், கட்சியின் தலைமையை நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைக்கும் முயற்சி அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாறாக எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்ட சக்தியாக இருப்பதற்கான ஒரு தளத்தை உருவாக்குவதற்கான முயற்சி என்று ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றுபடுவது கட்டாயமாகும். நான் பிரச்சனையாக இருந்தால், நான் ஒதுங்கிக் கொள்கிறேன்” என்று ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

The post மேலும் மூன்று பேரணிகளை நடத்த பொதுஜன பெரமுன திட்டம் appeared first on Oruvan.com.

நுகேகொடை பேரணி – ஒலி பெருக்கிகளை அகற்றிய பொலிஸார்
நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பல ஒலி பெருக்கி அமைப்புகள், பொலிஸாரினால் அகற்றப்பட்டுள்ளன.

உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களை பாதிக்கக்கூடும் என்ற கவலையைத் தொடர்ந்து பொலிஸார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

ஒலி பெருக்கி அகற்றப்பட்ட போதிலும், இன்று (21) பிற்பகல் 2:00 மணிக்கு நுகேகொடையில் நடைபெறவிருக்கும் பொதுப் பேரணிக்கு அதிகாரிகள் சிறப்பு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளனர்.

குறைந்தபட்ச இடையூறுகளை உறுதி செய்வதற்காக ஒலி பெருக்கி அமைப்புகளின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பரீட்சை எழுதும் பரீட்சாத்திகளுக்கு அமைதியான சூழலைப் பராமரிக்க வேண்டிய அவசியத்துடன் பொது ஆர்ப்பாட்டங்களை சமநிலைப்படுத்துவதை இந்த நடவடிக்கைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

The post நுகேகொடை பேரணி – ஒலி பெருக்கிகளை அகற்றிய பொலிஸார் appeared first on Oruvan.com.