Not everything can be done in one budget - Deputy Minister of Economic Development Archives - Oruvan.com

ஒரே வரவு செலவு திட்டத்தில் எல்லாவற்றையும் செய்து முடிக்க முடியாது – பொருளாதார மேம்பாட்டுத் பிரதி அமைச்சர்
முதலாவது வரவு செலவு திட்டம் என்பது, இந்த பயணத்தில் ஒரே ஒரு குறிப்பிட்ட பாத்திரம் என பொருளாதார மேம்பாட்டுத் பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குவது தனது அரசாங்கத்தின் கொள்கையாக இருந்தாலும், இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும் போது இதில் சில கட்டுப்பாடுகள் இருந்தன என்றும் பேராசிரியர் அனில் ஜயந்த சுட்டிக்காட்டினார்.

பிரதான சிங்கள ஊடகமொன்றில் நேற்று (17) இரவு ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே பேராசிரியர் அனில் ஜயந்த இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ஒரே வரவு செலவு திட்டத்தில் எல்லாவற்றையும் செய்து முடிக்க முடியாது என்பது நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனினும், இந்த முதல் வரவு செலவு திட்டத்தில் நாங்கள் என்ன செய்வோம் என்பதை கொள்கை அறிக்கையில் கூறவில்லை.

முதலாவது வரவு செலவு திட்டம் என்பது, இந்த பயணத்தில் ஒரே ஒரு குறிப்பிட்ட பாத்திரமாகும். கொள்கைகள் என்பது பரந்த விடயங்கள். ஆனால் செயல்களுக்கு ஒரு காலக்கெடு இருக்க வேண்டும். “காட்சிக்கு காலக்கெடு இல்லை.”

“வற் வரி என்பது ஒரு மறைமுக வரியாகும். நாங்கள் அதை அன்றும் சொன்னோம், இன்றும் சொல்கிறோம், நாளையும் சொல்வோம். இந்த 18 வீத வற் வரி மிக அதிகம். அதைக் குறைக்க வேண்டும்.” ஆனால் அதைக் குறைப்பதற்கு எல்லைகள் உள்ளன. பொருளாதாரத்தின் தேக்க நிலைக்கும் உள்ளார்ந்த எல்லை உள்ளது.

சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் கீழ் கூட, நாம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிக்கிக் கொள்கிறோம். எதிர்காலத்தில் இந்த வற் வரியை நீக்குவதற்கு நாங்கள் பாடுபடுவோம். முதல் வரவு செலவு திட்டத்திலேயே எல்லாவற்றையும் ஒரேயடியாகத் தலைகீழாக மாற்ற முடியாது.

அத்தியாவசியப் பொருட்கள் மீதான வற் வரியை நீக்குவதே எங்கள் தற்போதைய விருப்பம். “சர்வதேச நாணய நிதிய திட்டம் இல்லாமல் போனால், முதல் வரவு செலவு திட்டத்திலேயே அதைச் செய்யலாம்.” எனத் தெரிவித்தார்.

The post ஒரே வரவு செலவு திட்டத்தில் எல்லாவற்றையும் செய்து முடிக்க முடியாது – பொருளாதார மேம்பாட்டுத் பிரதி அமைச்சர் appeared first on Oruvan.com.