Northern Province Archives - Oruvan.com

சட்டவிரோத கட்டடங்களை இடியுங்கள் – வடக்கு ஆளூநர் உத்தரவு
பருவகால மழை ஆரம்பமாவதற்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட வெள்ளவாய்க்கால்கள் மற்றும் மதகுகளை துப்புரவு செய்யும் பணிகளை ஆரம்பிக்கவேண்டும் எனவும் அதேபோல கடந்த ஆண்டு வெள்ள இடர் பாதிப்புக்களை கவனத்திலெடுத்து அவற்றை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான மாதாந்தக் கலந்துரையாடல் என்பன வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினமும் புதன்கிழமை நடைபெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

அமைக்கப்படும் வீதிகளின் தரம் தொடர்பில் திணைக்களத் தலைவர்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். அது தொடர்பில் திணைக்களத் தலைவர்கள் நேரடியாகச் சென்று வேலைத் திட்டங்களை நேரடியாகப் பார்வையிட வேண்டும். மக்களின் தேவைகளின் அடிப்படையில் வீதித் திருத்தங்களை முன்னுரிமைப்படுத்த வேண்டும்.

அதேபோன்று, திணைக்களங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்களுக்கு பதிலளிக்க ஒரு மாத காலங்கள் எடுத்துக்கொள்ளும் நிலை காணப்படுகிறது. அது தவறான செயற்பாடு. அன்றன்றே கடிதங்களுக்கு பதிலளிக்க வேண்டும்.

அத்துடன் திணைக்களத் தலைவர்கள் தங்கள் திணைக்களங்களின் கீழான விவரங்கள் தொடர்பில் விரல் நுனியில் தரவுகளை வைத்திருக்க வேண்டும். திணைக்களத் தலைவர்கள் மக்களின் மனங்களை வெல்லும் வகையில் தங்கள் சேவைகளை ஆற்ற வேண்டும்.

எமது மாகாணத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தியின் எதிர்பார்ப்பும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும் என்பதே, அதனை விடுத்து கட்டடங்கள் கட்டுவதாலோ அல்லது வீதிகள் அமைப்பதாலோ மாத்திரம் பயனில்லை.

உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் செயற்பட வேண்டும். அத்துடன் சோலை வரி மீளாய்வை அனைத்துச் சபைகளும் செய்து முடிக்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து, உள்ளூராட்சி அமைச்சு, உள்ளூராட்சித் திணைக்களம், ஒவ்வொரு மாவட்டத்தினதும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் அலுவலகம், மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களம், வீதி அபிவிருத்தித் திணைக்களம், சுற்றுலா அதிகார சபை, வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை என ஒவ்வொரு திணைக்களங்களினதும் ஒவ்வொரு திட்டங்களினதும் முன்னேற்றங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டன.

The post சட்டவிரோத கட்டடங்களை இடியுங்கள் – வடக்கு ஆளூநர் உத்தரவு appeared first on Oruvan.com.

வடக்கில் பொலிஸாரின் டிப்பர்களில் மணல் கடத்தல் – கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சட்டவிரோத மணல் கடத்தலில் ஒரு சில பொலிஸாருக்குச் சொந்தமான டிப்பர் வாகனங்களும் ஈடுபடுவதாக வடமாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் மணல் விநியோகத்தை சீராக்குவது, சுண்ணாம்புக்கல் அகழ்வு மற்றும் விநியோகத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன் போதே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டங்கள் மற்றும் அரசாங்க திணைக்களங்களால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களுக்கே மணலை அதிக விலையில் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை இருப்பது தொடர்பில் குறிப்பிட்ட ஆளுநர், இது தொடர்பில் மீண்டும் மீண்டும் ஆராய்ந்து கொண்டிருக்காமல் முடிவு எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு அமைவாக, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் சில ஆற்றுப்படுக்கைகள், குளங்களிலிருந்து மணலை கழுவி எடுத்துப் பயன்படுத்த முடியும் என்பதுடன் அதற்கான இடங்களை விரைவாக அடையாளப்படுத்துமாறும், உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பில் ‘யாட்’ அமைத்து அங்கிருந்து நியாய விலையில் விநியோகம் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் பொறிமுறையை உடனடியாக ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கல்மடுக் குளத்தில் ஏற்கனவே கழுவி எடுக்கப்பட்ட மணல் கரைச்சிப் பிரதேச சபை ஊடாக விநியோகிக்கப்படவுள்ளமை தொடர்பிலும் கலந்துரையாடலில் தெரியப்படுத்தப்பட்டது.

இதேவேளை சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் ஒப்பந்தகாரர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள் சுட்டிக்காட்டினர்.

ஒரு சில பொலிஸாருக்குச் சொந்தமான டிப்பர் வாகனங்களும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்றும் அதன் காரணமாகவே இதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை இருப்பதாகவும் தெரியப்படுத்தப்பட்டது.

மக்களுக்கு நியாயமான விலையில் மணல் தாரளமாக கிடைப்பதை உறுதி செய்வதன் ஊடாக இதனைக் குறைக்க முடியும் என ஆளுநர் குறிப்பிட்டார்.

அதற்கு உடனடியாக பிரதேச சபைகள் ஊடாக ‘யாட்’ அமைத்து விநியோகத்தை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக மாவட்டச் செயலர்கள் தமது மாவட்ட மட்டத்தில் கலந்துரையாடல்களை நடத்துமாறும் ஆளுநர் பணித்தார்.

மணல் அகழ்வுக்குரிய இடத்திலிருந்து குறிப்பிட்டளவு தூரத்தில் ‘யாட்’ அமைக்கப்படுவதுடன் அதற்காகப் பயன்படுத்தப்படும் டிப்பர்களுக்கு ‘ஜி.பி.எஸ்.’ கருவிகள் பொருத்தி கண்காணிக்கவேண்டும்.

மேலும் மணல் அகழ்வுக்கு எத்தனை நாள்கள் என்பது ஒதுக்கப்பட வேண்டும்.

இதன்மூலம் மணல் அகழ்வு நடவடிக்கையை முழுமையாகக் கண்காணித்து கட்டுப்படுத்த முடியும் என யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ம.கபிலன் குறிப்பிட்டார்.

ஆளுநர், மாவட்டச் செயலர்கள், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் இந்த யோசனையை ஏற்றுக்கொண்டனர்.

கொள்கை ரீதியாக நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான இ.சந்திரசேகரன் ஊடாக அமைச்சரவைக்கு இந்த யோசனை சமர்பிக்கப்பட்டு அமைச்சரவைத் தீர்மானமாக இதனை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ம.கபிலன் சுட்டிக்காட்டினார்.

இதேபோன்று சுண்ணக்கல் அகழ்வு தொடர்பிலும் சுற்றறிக்கைகள் தெளிவாக உள்ளபோதும் பொலிஸார் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் குறிப்பிட்டார்.

பொலிஸாருக்கு இறுக்கமான அறிவுறுத்தல் ஒன்றை வழங்குமாறும் ஆளுநரை அவர் கேட்டுக்கொண்டார்.

சுண்ணக்கல் சிறிய துகளாக்கப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்டாலும் அதற்கு புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அனுமதி தேவை என்ற நிலையில் பணியகத்தால் எந்தவொரு அனுமதியும் வழங்கப்பட்டிருக்காத சூழலிலும் அவை கொண்டு செல்லப்படுகின்றன என பணியகத்தின் பிராந்திய சுரங்கப் பொறியியலாளர் சுட்டிக்காட்டினார்.

பொலிஸாரை அழைத்து இது தொடர்பில் அறிவுறுத்தல் விடுத்து நடைமுறைப்படுத்துவதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ம.கபிலன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – பொறியியல், வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டச் செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் பிராந்திய பொறியியலாளர், வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர், ஒப்பந்தகாரர்கள் சங்க நிர்வாகத்தினர் ஆகியோர் பங்கேற்றனர்.

The post வடக்கில் பொலிஸாரின் டிப்பர்களில் மணல் கடத்தல் – கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Oruvan.com.