North Archives - Oruvan.com

ஜனாதிபதி இன்றும் வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்களில் பங்கேற்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இரண்டாம் நாளாக இன்றும் (02) வடமாகாணத்தின் பல அபிவிருத்தித் திட்டங்களின் பணிகளை ஆரம்பித்து வைத்தல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

உலக தெங்கு தின நிகழ்வுகளுடன் இணைந்த வகையில், “நாடே சுபீட்சம் – ஆக்கும் விருட்சம் – கற்பகத்தரு வளம்” என்ற வடக்கு தெங்கு முக்கோண தொடக்க விழா இன்று (02) முற்பகல் ஜனாதிபதியின் தலைமையில் புதுக்குடியிருப்பு நகரில் நடைபெறும்.

2025 ஆம் ஆண்டு வடமாகாணத்தில்16,000 ஏக்கரில் தென்னைப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் நோக்கில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதோடு, 2027 ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை 50,000 ஏக்கராக அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கு இணையாக, வடக்கில் முதலாவது விதை தேங்காய் உற்பத்தி அலகு ஜனாதிபதியின் தலைமையில் பளை நகரில் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளதோடு, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு எதிரே உள்ள பகுதியில் தென்னை அபிவிருத்தி சபையால் நடத்தப்படும் தெங்கு தொடர்பான கண்காட்சியையும் ஜனாதிபதி திறந்து வைப்பார்.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளும் இன்று (02) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

பரந்தன்-கரச்சி-முல்லைத்தீவு வீதியில் நந்திக்கடல் களப்பிற்கு அருகில் அமைந்துள்ள இந்தப் பாலத்தின் ஊடாக, நாளாந்தம் 3,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிப்பதோடு, இந்தப் பாலம் நீண்ட காலமாக பழுதுபார்க்கப்படாததால் தற்போது மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.

இதன்படி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் அது, 02 வழி புதிய பாலமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதோடு, 1.4 பில்லியன் ரூபா பொதுமக்களின் வரிப்பணத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

The post ஜனாதிபதி இன்றும் வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்களில் பங்கேற்பு appeared first on Oruvan.com.

சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் மாபெரும் எழுச்சிப் பேரணி – அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரில் இன்று திங்கட்கிழமை (25) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் மக்கள் எழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்கில் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவிற்கு முன்பாகவும்,கிழக்கில் மட்டக்களப்பிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.வடக்கில் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்கா விற்கு முன்பு எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 10 மணிக்கு பேரணி ஆரம்பமாகி செம்மணி வரை பேரணி இடம்பெற உள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து உலக நாடுகள் தமது கவனத்தில் கொண்டு சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த 14 வருடங்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் வீதிக்கு இறங்கி எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்து வந்தோம்.

சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் எமக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை.

செம்மணி மனித புதைகுழியில் இருந்து நூற்றுக்கணக்கான உறவுகள் எலும்புக் கூடுகளாக மீட்க படுகின்றனர்.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்று இதுவரை எமக்கு தெரியவில்லை.

எமது பிள்ளைகள்,உறவுகள் எங்கேயோ இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம்.

எனவே எமக்கு சமூக செயற்பாட்டாளர்கள் ,தேசியத்தை நேசிக்கும் அனைவரும் எமக்கு குரல் கொடுக்க அணி திரண்டு வர வேண்டும்.நாங்கள் தனித்து போராடுவதாலே எமக்கு நீதி கிடைக்கவில்லை என்கிற தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையிலே எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் சர்வதேச நீதி கோரிய மக்கள் எழுச்சிப் பேரணி முன்னெடுக்கவுள்ளது.

எனவே அனைத்து உறவுகளும் எமது சர்வதேச நீதி கோரிய போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்

The post சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் மாபெரும் எழுச்சிப் பேரணி – அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு appeared first on Oruvan.com.

வடக்கில் முதலீடு செய்வது தொடர்பாக வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடல்
வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் வடக்கில் முதலீடு செய்வது தொடர்பாக தமது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருவது தொடர்பாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, வைத்தியர் பவானந்தராஜா உள்ளிட்டோர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்த கலந்துரையாடல் நாடாளுமன்ற அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (09.01) நடைபெற்றது.

இதன்போது நீண்ட காலமாக புலம்பெயர்ந்து நாட்டுக்கு வர முடியாமலிருக்கும் தமிழர்கள் நாட்டுக்கு வர விரும்புவது தொடர்பான ஆர்வத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அமைச்சருக்கு தெரியப்படுத்தினார்.

இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் ஐந்து தொழிற்பேட்டை நிலையங்களை அமைப்பதற்காக காணிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆர்வமுள்ளவர்கள் இலங்கை முதலீட்டு சபையின் ஊடாக தங்கள் செயற்திட்டங்களை முன்வைக்க முடியுமென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

The post வடக்கில் முதலீடு செய்வது தொடர்பாக  வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடல் appeared first on Oruvan.com.

வடமத்திய மாகாணத்தில் வினாத்தாள் கசிந்த சம்பவம் – ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம்
வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தவணைப் பரீட்சையின் வினாத்தாள் கசிந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

இதன்படி, 06 மற்றும் 07ஆம் தரங்களுக்கான பரீட்சை வினாத்தாள் கசிந்த சம்பவம் தொடர்பிலேயே குறித்த ஆசிரியர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்தார்.

The post வடமத்திய மாகாணத்தில் வினாத்தாள் கசிந்த சம்பவம் –  ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம் appeared first on Oruvan.com.

வடக்கில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் காணப்படுவதுடன் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் தமிழக கடற்கரையை நெருங்க வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்காரணமாக, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா,மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

The post வடக்கில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு appeared first on Oruvan.com.