Nobel Prize in Economics awarded to three Archives - Oruvan.com

பொருளா​தார நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு
இந்த ஆண்​டுக்​கான பொருளா​தார நோபல் பரிசுக்கு ஜோயல் மோக்​கிர், பிலிப் அகி​யான் மற்​றும் பீட்​டர் ஹோவிட் ஆகிய 3 பேர் தெரிவு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இந்த ஆண்​டுக்​கான நோபல் பரிசு கடந்த 6ஆம் திகதி முதல் அறிவிக்​கப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில் கடைசி​யாக பொருளாதா​ரத்​துக்​கான நோபல் பரிசுக்கு ஜோயல் மோக்​கிர் (அமெரிக்கா), பிலிப் அகி​யான் (பிரான்ஸ்) மற்​றும் பீட்​டர் ஹோவிட் (இங்கிலாந்து) ஆகிய 3 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ள​தாக ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்​சஸ் தெரி​வித்​துள்​ளது.

புதுமை சார்ந்த பொருளா​தார வளர்ச்​சியை விளக்​கியதற்​காக இவர்​களுக்கு இந்த விருது வழங்​கப்பட உள்​ளது. தொழில்​நுட்ப முன்​னேற்​றத்​தின் மூலம் நீடித்த வளர்ச்​சிக்​கான முன் நிபந்​தனை​களை அடை​யாளம் கண்​டதற்​காக, பரிசுத் தொகை​யில் 50% ஜோயலுக்கு வழங்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. மீதம் உள்ள 50% பரிசுத் தொகை, படைப்​பூக்க அழிப்பு மூலம் நீடித்த வளர்ச்​சிக்​கான கோட்​பாட்டை உரு​வாக்​கியதற்​காக, பிலிப் அகி​யான் மற்​றும் பீட்​டர் ஹோவிட் ஆகியோ​ருக்கு வழங்​கப்பட உள்​ளது.

இதுகுறித்து ராயல் ஸ்வீடிஷ் அகாடமி எக்ஸ் பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “கடந்த இரண்டு நூற்​றாண்​டு​களில், வரலாற்​றில் முதல் முறை​யாக உலகம் தொடர்ந்து பொருளா​தார வளர்ச்​சியை கண்​டுள்​ளது. இதன் மூலம் அதி​கப்​படி​யான மக்​கள் வறுமையி​லிருந்து மீண்​டுள்​ளனர். இந்த ஆண்​டின் பொருளா​தார அறி​வியலுக்​கான நோபல் பரிசு பெற்​றவர்​கள், தொடர்ச்​சி​யான முன்​னேற்​றத்​துக்கு புதுமை எப்​படி ஊக்​க​மாக செயல்​படு​கிறது என்​பதை விளக்கி உள்​ளனர்.

மனித வரலாற்​றின் பெரும்​பாலான காலத்​தில் வளர்ச்​சி​யை​விட, பொருளா​தார மந்​தநிலையே வழக்​க​மாக இருந்து வந்​துள்​ளது. தொடர்ச்​சி​யான வளர்ச்​சிக்கு எதி​ரான அச்​சுறுத்​தல்​களை நாம் உணர்ந்​து, அவற்றை எதிர்​கொள்ள வேண்​டும் என்​பதை அவர்​களின் ஆய்​வு​கள் வெளிப்​படுத்​துகின்​றன“ என கூறப்பட்டுள்ளது.

The post பொருளா​தார நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு appeared first on Oruvan.com.