Nithyananda Archives - Oruvan.com

நான் உயிருடன் தான் இருக்கின்றேன் – நேரலையில் வந்தார் நித்தியானந்தா
பெரும் சர்ச்சசைகளுக்கு மத்தியில் தலைமறைவாக வாழ்ந்து வரும் நித்தியானந்தா தான் உயிருடனும், நலமாகவும், மிகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நித்தியானந்தா உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்த பின்னணியில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இன்று அதிகாலை பேஸ்புக் நேரலையில் வந்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“இந்து தர்மத்தை காப்பதற்காக நித்தியானந்தா உயிர் தியாகம் செய்துவிட்டார்” என்று நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை இந்திய நேரப்படி 4.30 மணிக்கு நேரலையில் தோன்றிய நித்தியானந்தா, தான் உயிருடனும், நலமாகவும், மிகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“இன்று, ஏப்ரல் மூன்றாம் திகதி, வியாழக்கிழமை இந்திய நேரப்படி 4.39 மணிப்படி நான் உயிரோடு, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன். கடைசியாக வெளியிட்ட காணொளி பழையது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்து சாஸ்திரங்களுக்கான உலகின் முதல் ஆன்மிக ஏஐ செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தேன். அதனால் நேரலையில் வருவதை குறைத்து கொண்டேன்

மற்ற நாடுகளின் உள்நாட்டு பிரச்னைகள் பற்றி கேள்வி கேட்பார்கள் என்பதால் மட்டுமே நேரலையில் பேட்டி கொடுப்பதை தவிர்க்கிறேன். கைலாசா பற்றியும் என்னை பற்றியும் கேட்டால் எப்போதும் பதில் தர காத்திருக்கிறேன்.

பலபேர் கைலாசாவை கட்டுப்படுத்த நினைத்தாலும் அவர்கள் நினைக்கும் போக்கிலே கைலாசாவை நடத்த நினைத்தாலும் அது நடக்காமல் போவதால் அவர்களுக்கு ஏற்படும் கோபம், அவர்கள் நடத்தும் தாக்குதல்களை நான் அறிவேன்.

எவ்வாறாயினும், அண்ணாமலையார் (இறைவன்) சொல்வதைத்தான் செய்வேன்” என்றார். மேலும், இந்த காணொளி நேரலை தான் என்பதை உறுதிப்படுத்த யூடியூப் லைவில் கமென்ட் ஒன்றை அவர் படித்து காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

The post நான் உயிருடன் தான் இருக்கின்றேன் – நேரலையில் வந்தார் நித்தியானந்தா appeared first on Oruvan.com.

நித்தியானந்தா இறந்துவிட்டார் – சகோதரி மகன் தகவல்
பெரும் சர்ச்சைகளுக்கு பெயர் போன நித்தியானந்தா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன் சுந்தரேஸ்வரன் அறிவித்துள்ளார்.

காணொளி ஒன்றின் மூலம் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்து தர்மத்தை காப்பதற்காக நித்தியானந்தா உயிர் தியாகம் செய்துவிட்டதாகவும் அவர் காணொளி பிரசங்கத்தில் தெரிவித்துள்ளார்.

நித்தியானந்தாவுக்கு எதிராக பாலியல் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்து நாடு கடத்த பொலிஸார் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் அவர் இருக்கும் இடம் இதுவரையில் உறுதிசெய்யப்படவில்லை. இந்தியாவில் அவர் தேடப்பட்டு வந்த நிலையில், தலைமறைவான அவர் இந்துக்களுக்கான நாடு என்ற பெயரில் திடீரென கைலாசா எனும் தனித்தீவை உருவாக்கினார்.

இந்த நாட்டுக்கு என தனி நாணயம், கடவுச்சீட்டு, தனிக் கொடி உள்ளிட்டவைகளையும் அவர் நிர்மானித்தார். மேலும் தனது நாட்டில் தொழில் தொடங்குமாறும் அவர் தமிழகத்தில் உள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

எவ்வாறாயினும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே நித்தியானந்தா உயிரிழந்துவிட்டார் என கூறப்பட்ட நிலையில், திடீரென காணொளி ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

நித்தியானந்தா கடந்த இரு நாட்களுக்கு முன்பே உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பில் கைலாசாவில் இருந்து மறுப்பு எதுவும் வரவில்லை.

இந்த நிலையில் நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன், கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட சத்சங்க காணொளியில் இந்து தர்மத்தை காப்பதற்காக சாமி (நித்தியானந்தா) உயிர்த் தியாகம் செய்துவிட்டார் என கூறியிருந்தார்.

The post நித்தியானந்தா இறந்துவிட்டார் – சகோதரி மகன் தகவல் appeared first on Oruvan.com.