Natural Disaster Archives - Oruvan.com

பேரிடரால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை – சுற்றறிக்கை வெளியீடு
வெள்ளம், நிலச்சரிவு மற்றும்  வீதித் தடைகள் காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் அனைத்து அமைச்சு செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுகள் காரணமாக தங்கள் வசிப்பிடத்திலிருந்து பணியிடத்திற்கு பொது போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டு பணிக்கு வர மூகமளிக்க முடியாத அதிகாரிகளுக்கு இந்த சிறப்பு விடுப்பு வழங்கப்பட உள்ளது.

அத்தகைய சிறப்பு விடுமுறையைப் பெறுவதற்கு, பணிக்கு சமூகமளிக்க இயலாமைக்கான காரணத்தைக் குறிப்பிட்டு, பிரதேச செயலாளரால் சான்றளிக்கப்பட்ட, அவரது பகுதியின் கிராம அலுவலரின் பரிந்துரையுடன், நிறுவனத் தலைவரிடம் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

பிரதேச செயலாளரால் சான்றுப்படுத்தப்பட்ட உத்தியோகத்தரின் விண்ணப்பத்தை நிறுவனத் தலைவர் பரிசீலித்து, அதன் சரியான தன்மை குறித்து தனிப்பட்ட ரீதியில் திருப்தியடைந்தால் மட்டுமே, சேவைக்கு சமூகமளிக்க முடியாத நாட்களின் எண்ணிக்கைக்கான விசேட விடுமுறையை அங்கீகரிப்பதற்காக திணைக்களத் தலைவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு விடுமுறைகள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post பேரிடரால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை –  சுற்றறிக்கை வெளியீடு appeared first on Oruvan.com.

மல்வத்து, அஸ்கிரி பிரதிப் பதிவாளர்களான இரு தேரர்கள் மற்றும் தியவடன நிலமே ஆகியோர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையையும், நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டம் பாராட்டுக்குரியது என்றும், அதற்காக தங்கள் ஆசிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மல்வத்து மற்றும் அஸ்கிரி பிரதிப் பதிவாளர்களான இரு தேரர்களும் தெரிவித்தனர்.

சியாமோபாலி மகா நிகாயவின் மல்வத்து மகா விகாரை தரப்பின் பிரதிப் பதிவாளர் ராஜகீய பன்டித வண, மஹவெல ரதனபால நாயக தேரர், சியாமோபாலி மகா நிகாயவின் அஸ்கிரி மகா விகாரை தரப்பின் பிரதிப் பதிவாளர் வரலாற்று சிறப்புமிக்க பதுளு முதியங்கன ரஜமகா விகாரையின் பொறுப்பாளர் கலாநிதி வண, முருத்தெனியே ஸ்ரீ தம்மரதன நாயக தேரர் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல ஆகியோர் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் மற்றும் மீள்குடியமர்த்தல் நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.

மக்களை மீள்குடியமர்த்தும் பணிகளில் தலதா மாளிகை வழங்கக்கூடிய பங்களிப்புகள் குறித்து இதன்போது தியவடன நிலமே ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையினால் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நிதி நன்கொடையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.

The post மல்வத்து, அஸ்கிரி பிரதிப் பதிவாளர்களான இரு தேரர்கள் மற்றும் தியவடன நிலமே ஆகியோர் ஜனாதிபதியுடன் சந்திப்பு appeared first on Oruvan.com.

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கியது JICA
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில், ஜப்பான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட அவசர நிவாரணப் பொருட்களை, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மூலம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு (DMC) உத்தியோகபூர்வமாக ஒப்படைத்துள்ளது.

நேற்று (03) நாட்டிற்கு வந்தடைந்த இந்த நிவாரண உதவி, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் Akio ISOMATA மற்றும் JICA இலங்கை தலைமை பிரதிநிதி Kenji KURONUMA ஆகியோரால் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட (ஓய்வு) ஆகியோரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கவும் அவர்களின் அடிப்படை வாழ்க்கை நிலைமைகளை மீட்டெடுப்பதற்கும் தேவையான பல்வேறு அத்தியாவசிய மனிதாபிமான பொருட்கள் இதில் அடங்குவதோடு, 200 கூடாரங்கள், 1,200 போர்வைகள், 1,200 மெத்தைகள், 20 Plastic Sheets (Tarpaulin), 200 சிறிய நீர் கொள்கலன்கள் (ஜெரி கேன்கள்) மற்றும் 10 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இதில் அடங்குகின்றன.

இந்தப் பொருட்கள் பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன.

The post டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கியது JICA appeared first on Oruvan.com.

நெடுஞ்சாலைகளுக்கு 190 பில்லியன் ரூபா சேதத்தை ஏற்படுத்திய டித்வா புயல்!
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக நெடுஞ்சாலை வலையமைப்பில் சுமார் 190 பில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பேரிடர் காரணமாக நெடுஞ்சாலை வலையமைப்பிற்கு ஏற்பட்ட சேதத்தின் தோராயமான மதிப்பீடு தற்போது 190 பில்லியன் ரூபா என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) இயக்குநர் ஜெனரல் விமல் கண்டம்பி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இம்முறை அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு பாரிய சேதம் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பேரிடர் காரணமாக நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பேரழிவின் போது, ​​கண்டி மாவட்டம் முழுவதும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது, நகரத்தை மற்ற பகுதிகளுடன் இணைக்கும் அனைத்து நெடுஞ்சாலைகளும் சேதமடைந்துள்ளன.

இதனிடையே, பேரிடரில் மின்மாற்றிகள் மற்றும் மின் கட்டமைப்பு நிலையங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடும் பணியில் இலங்கை மின்சார சபை ஈடுபட்டுள்ளது.

நாட்டின் நீர்ப்பாசன முறையும் பாரிய சேதங்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பேரிடரினால் ஏற்பட்ட சேதம் மற்றும் மறுகட்டமைப்புக்கான நிதித் தேவைகள் குறித்த விரிவான மதிப்பீட்டைத் தயாரிப்பதற்காக அரசாங்கம் உலக வங்கியுடன் கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

உலக வங்கி பேரிடருக்குப் பிந்தைய விரைவான சேத மதிப்பீட்டை (GRADE) கணக்கிடவுள்ளது. அரசாங்கம் சுமார் இரண்டு வாரங்களுக்குள் மதிப்பீட்டு அறிக்கையை பெறும் என்று எதிர்பார்க்கிறது.

The post நெடுஞ்சாலைகளுக்கு 190 பில்லியன் ரூபா சேதத்தை ஏற்படுத்திய டித்வா புயல்! appeared first on Oruvan.com.

இயற்கை பேரிடர் – இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படும் சாத்தியம்
இலங்கையில் டித்வா சூறாவளி ஏற்படுத்திய பேரிடர் காரணமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் சுமார் 0.5 சதவீதம் முதல் 0.7 சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபர்ஸ்ட் கேபிடல் ரிசர்ச் (FCR) வெளியிட்ட ஃபிளாஷ் நோட் இதனை தெரிவித்துள்ளது.

2016 வெள்ளம் மற்றும் 2004 சுனாமி ஏற்படுத்திய தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த இந்த மதிப்பீடு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நுகர்வு, முதலீடு மற்றும் நிகர ஏற்றுமதிகளில் ஏற்படும் இடையூறுகள் அரசாங்கத்தின் நிவாரண செலவினங்களால் உருவாக்கப்பட்ட தற்காலிக பொருளாதார நடவடிக்கைகளை விட அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய சேதங்கள் மற்றும் பின்னடைவு இருந்தபோதிலும், 2026ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி மதிப்பீட்டை 3.0 சதவீதம் முதல் 4.0 சதவீதமாக காணப்படும் என ஃபர்ஸ்ட் கேபிடல் ரிசர்ச் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 68 சதவீதமாக இருக்கும் தனியார் நுகர்வு மீது பாதகமான வானிலை நிலைமைகள் பெரும் சுமையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாய உற்பத்தி, கிராமப்புற வீடுகளில் வருமான இழப்புகள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்பட்ட சேதம் ஆகியவை நுகர்வோர் தேவையை குறைக்க வாய்ப்புள்ளது.

அவசர நிவாரணம் மற்றும் உள்கட்டமைப்பு பழுதுபார்ப்பு காரணமாக அரசாங்க செலவினம் மிதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், பலவீனமான தனியார் தேவையை முழுமையாக ஈடுசெய்ய இது போதுமானதாக இருக்காது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

தனியார் துறை செயல்பாடுகள் இடையூறுகளை எதிர்கொள்வதால் முதலீட்டு நடவடிக்கைகளும் பலவீனமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குறுகிய காலத்தில் பணவீக்க அழுத்தம் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, முக்கிய பணவீக்கம் சுமார் 40 அடிப்படை புள்ளிகள் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடுமையான வெள்ளம் அறுவடை, சேமிப்பு மற்றும் போக்குவரத்தை சீர்குலைத்துள்ளது, இதனால் காய்கறிகள், தேங்காய் மற்றும் பழங்கள் போன்ற முக்கிய உணவு வகைகளில் விநியோக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக, 2026 ஆம் ஆண்டிற்கான ஆண்டு சராசரி பணவீக்க மதிப்பீடு, முந்தைய கணிப்பான 2.9 சதவீதத்திலிருந்து 3.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

முக்கிய அந்நிய செலாவணி ஈட்டித் தரும் சுற்றுலா, கொழும்பில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கடலோர ஹோட்டல்களுக்கு ஏற்படுத்திய சேதம் காரணமாக,குறுகிய கால பின்னடைவை எதிர்கொள்கிறது.

இதன்படி, 2025 சுற்றுலா வருவாய் கணிப்பை 3.2 பில்லியன் டொரலாக ஃபர்ஸ்ட் கேபிடல் ரிசர்ச் குறைத்துள்ளது. எனினும், 2026 ஆம் ஆண்டின் வருவாய் 3.7 பில்லியன் டொலராக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், அடுத்த ஆறு மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர் பணம் அனுப்புதல் 10-15 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2026 ஆம் ஆண்டில் 8.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

The post இயற்கை பேரிடர் – இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படும் சாத்தியம் appeared first on Oruvan.com.

இலங்கையை தாக்கிய டித்வா புயல் – அதிர்ச்சியூட்டும் சேத விபரங்கள்
அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரிடரினால் இலங்கையின் 1,593 கிலோமீட்டர் ரயில் வலையமைப்பில் 478 கிலோமீட்டர் மட்டுமே தற்போது பயன்படுத்த முடியுமானதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி இதனை தெரிவித்துள்ளார்.

பல மாவட்டங்களில் போக்குவரத்து, விவசாயம், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றை புயல் கடுமையாக பாதித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோயாளிகள் தவறவிட்ட மருத்துவ வருகைகள், சிகிச்சை அமர்வுகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகளை மறுசீரமைக்குமாறும், நிலைமைகள் மேம்பட்டவுடன் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம் வைத்தியசாலைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

விவசாய சேவைகள் திணைக்களத்தின் அறிக்கையின்படி, 1,777 குளங்கள், 483 அணைகள், 1,936 கால்வாய்கள் மற்றும் 328 விவசாய சாலைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 137,265 ஏக்கர் விளைநிலங்கள் மற்றும் 305 சிறு நீர்ப்பாசன கால்வாய்களும் அழிக்கப்பட்டுள்ளன.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை தடைபட்ட 246 வீதிகளை மீளவும் திறந்துள்ளது. எவ்வாறாயினும் நாடு முழுவதும் 22 பாலங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

ஊவா மாகாணத்தில் ஆறு பாலங்கள், வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் தலா நான்கு பாலங்கள், மேற்கு மாகாணத்தில் மூன்று பாலங்கள், மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் தலா இரண்டு பாலங்கள் மற்றும் வடமத்திய மாகாணத்தில் ஒன்று பாலம் சேதமடைந்துள்ளன.

தொலைத்தொடர்பு மீட்பு நடவடிக்கை 91 சதவீதமாக உள்ளது, எனினும் நுவரெலியா மாவட்டத்தில் மறுசீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பாதிக்கப்பட்ட 16,178 மின் துணை மின் நிலையங்களில் 11,315 மீண்டும் இயக்கப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்ட 3,531,841 இணைப்புகளில் 72 சதவீதமான 2,526,264 நுகர்வோருக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post இலங்கையை தாக்கிய டித்வா புயல் – அதிர்ச்சியூட்டும் சேத விபரங்கள் appeared first on Oruvan.com.

பேரிடரால் கண்டி மாவட்டத்தில் அதிக உயிரிழப்பு
நாடு முழுவதும் ஏற்பட்ட பேரிடர் காரணமாக கண்டி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் மற்றும் காணாமல் போனோர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (04) வரை கிடைத்த தகவல்களின்படி, கண்டி மாவட்டத்தில் 185 பேர் உயிரிழந்துள்ளதுடன், 229 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கண்டி மாவட்ட உதவி இயக்குநர் இந்திக ரணவீர இதனை தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் இன்று (04) 32,987 குடும்பங்களைச் சேர்ந்த 1,05,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக, 20,000 குடும்பங்களைச் சேர்ந்த 67,921 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 8,471 குடும்பங்களைச் சேர்ந்த 29,257 பேர் 319 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரிடர் காரணமாக கண்டி மாவட்டத்தில், 1259 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, மேலும் 10,014 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலகங்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post பேரிடரால் கண்டி மாவட்டத்தில் அதிக உயிரிழப்பு appeared first on Oruvan.com.

பேரிடர் உயிரிழப்பு 474ஆக அதிகரிப்பு – 356 பேரை காணவில்லை
நாட்டில் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று (03) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 356 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

448,817 குடும்பங்களைச் சேர்ந்த 1,586,329 பேர் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கண்டி மாவட்டத்தில் அதிகபட்சமாக 118  உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் 89 பேரும், பதுளை மாவட்டத்தில் 83 பேரும், குருநாகலையில் 53 பேரும், கேகாலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் 29 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 28 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 171 பேரும், நுவரெலியாவைச் சேர்ந்த 73 பேரும், கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 43 பேரும், பதுளையைச் சேர்ந்த 28 பேரும், குருநாகலைச் சேர்ந்த 27 பேரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பேரிடர் உயிரிழப்பு 474ஆக அதிகரிப்பு – 356 பேரை காணவில்லை appeared first on Oruvan.com.

ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை விசேட கலந்துரையாடல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்றும் இன்று மாலை கொழும்பில் நடைபெறவுள்ளது.

இயற்கை அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள  நாட்டையும் மக்களையும்  இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான வேலைத்திட்டம் மற்றும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு எவ்வாறு ஒத்துழைப்பது, எதிரணிகளால் எப்படியான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பன பற்றி ஆராயவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட பேரிடரால் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவு பாதிப்பும் உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

அதனால் கடந்த காலங்களில் இவ்வாறான அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்த அனுபவமுள்ள தலைவர் என்றவகையில், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, இந்த அனர்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் உடனடி நிவாரணங்கள் கிடைக்கச் செய்யும் நோக்கில் 16 அம்சங்கள் அடங்கிய கோரிக்கை ஒன்றை அரசாங்கத்துக்கு வழங்கி இருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களை மீள இயல்பு நிலைக்கு கொண்டுவர எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என ஆராயவே இன்று அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்படும் ஆலோசனைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

The post ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை விசேட கலந்துரையாடல் appeared first on Oruvan.com.

இலங்கைக்கு உதவ ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு உதவ ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது.

இது குறித்த அறிவிப்பை நிறுனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் வெளியிட்டுள்ளார்.

இதன்படி, பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிய நாடுகளான இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் நிவாரணப் பணிகளுக்கு ஆப்பிள் நிறுவனம் நன்கொடை வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது சமூக ஊடக பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இயற்பை பேரிடர் காரணமாக  பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் நிர்மாண முயற்சிகளுக்கு நிதி உதவியை வழங்கவுள்ளதாக டிம் குக்  தெரிவித்துள்ளார்.

இயற்கை பேரிடர் காரணமாக இந்த நாடுகளில் 1300க்கும் மேற்பட்டவர்கள் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். இலங்கையில் மட்டும் 450க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மண்சரிவுகள் மற்றும் அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக பலர் உணவு அல்லது தங்குமிடம் இல்லாமல் தவிக்கின்றனர். எண்ணற்ற வீதிகளும், பாலங்களும் சேதடைந்துள்ளன.

2021ஆம் ஆண்டுக்கு பின்னர் இயற்கை பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ஆப்பிள் நிறுவனம் நிவாரண நடவடிக்கைகளுக்கு பெருமளவில் நன்கொடை வழங்கி வருகின்றது.

கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மியான்மர் மற்றும் தாய்லாந்திற்கும் ஆப்பிள் நிறுவனம் நன்கொடை வழங்கியிருந்தது.

அதேபோல், கடந்த ஒக்டோபர் மாதம் மெலிசா புயல் ஏற்படுத்திய சேதம் காரணமாக ஜமைக்கா உள்ளிட்ட கரீபியன் தீவு நாடுகளுக்கும் ஆப்பிள் நிறுவனம் நன்கொடை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post இலங்கைக்கு உதவ ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது appeared first on Oruvan.com.