Nations League final Archives - Oruvan.com

UEFA நேஷன்ஸ் லீக் – இறுதிப் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி போர்த்துகல் வாகை சூடியது
போர்த்துகல் அணி ஸ்பெயினை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி UEFA நேஷன்ஸ் லீக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

இறுதி நிமிடம் வரை நீடித்த போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் போர்ச்சுகல் 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இரு அணிகளும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தலா இரண்டு கோல்கள் அடித்து சமநிலையில் இருந்ததால் போட்டி ஷூட் அவுட் முறைக்குச் சென்றது.

போட்டியின் 21வது நிமிடத்தில் மார்ட்டின் ஜூபிமெண்டி அடித்த கோல் மூலம் ஸ்பெயின் அணி முன்னிலை பெற்றது. எனினும், அடுத்த ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, நுனோ மென்டிஸ் போர்த்துகல் அணிக்காக கோல் அடித்து சமநிலையை படுத்தினார்.

முதல் பாதி முடியும் தருவாயில் 45வது நிமிடத்தில் மைக்கேல் ஓயர்சபால் கோல் அடித்து ஸ்பெயினை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டு வந்தார்.

இதனால் போட்டியின் முதல் பாதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி முன்னிலைப் பெற்றது. எனினும், இரண்டாம் பாதியில் 61வது நிமிடத்தில் போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து அசத்தினார்.

இதனால் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலைபெற்றது. பின்னர், இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றன, ஆனால் பயனில்லை. இறுதியில் ஷூட் அவுட் முறையில் போர்த்துகல் அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றிருந்தது.

ஷூட் அவுட்டில் போர்த்துகல் சார்பாக கோன்சாலோ ராமோஸ், விடின்ஹா, புருனோ பெர்னாண்டஸ், நுனோ மென்டிஸ் மற்றும் ரூபன் டயஸ் ஆகியோர் கோல் அடித்தனர்.

ஸ்பெயின் சார்பாக மைக்கேல் மெரினோ, அலெக்ஸ் பேனா மற்றும் இஸ்கோ ஆகியோரும் கோல் அடித்திருந்தனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் முறையாக போர்த்துகல் அணி UEFA நேஷன்ஸ் லீக் கிண்ணத்தை கைபற்றியிருந்தது.

இந்நிலையில், இரண்டாவது முறையாக அந்த அணி UEFA நேஷன்ஸ் லீக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post UEFA நேஷன்ஸ் லீக் – இறுதிப் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி போர்த்துகல் வாகை சூடியது appeared first on Oruvan.com.

UEFA நேஷன்ஸ் லீக் – பிரான்ஸை வீழ்த்தி ஸ்பெயின் இறுதிப் போட்டிக்கு தகுதி
பரபரப்பான UEFA நேஷன்ஸ் லீக் அரையிறுதியில் ஸ்பெயின் 5-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இரண்டு கோல்கள் அடித்த சூப்பர் ஸ்டார் லாமின் யமல் தலைமையில், ஸ்பெயின் அணி மூன்றாவது முறையாக நேஷன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

போட்டியின் 22வது நிமிடத்தில் நிக்கோ வில்லியம்ஸ் மூலம் ஸ்பெயின் முதல் போலைப் பெற்று முன்னிலை பெற்றது. அடுத்த மூன்று நிமிடங்களுக்குள், மைக்கேல் மெரினோ மீண்டும் கோல் அடிக்க ஸ்பெயின் அணி முன்னிலைப்பெற்றது.

இரண்டாவது பாதியின் தொடக்கத்தில், ஸ்பெயின் அணி 54வது நிமிடத்தில் பெனால்டியை எளிதாக கோலாக மாற்றியது, அதை லாமின் யமல் கோல் அடித்து முன்னிலையை மூன்றாக (3-0) உயர்த்தினார்.

அடுத்த நிமிடத்தில் பெட்ரி மூலம் ஸ்பெயின் மீண்டும் கோல் அடித்து, 4-0 என்ற தெளிவான முன்னிலையை ஸ்பெயின் பெற்றது.

59வது நிமிடத்தில் பிரெஞ்சு சூப்பர் ஸ்டார் கைலியன் எம்பாப்பேவின் பெனால்டி கோலுடன் பிரான்ஸ் பதிலளித்தது (3-1). 67வது நிமிடத்தில் லாமின் யமல் தனது இரண்டாவது கோலை அடித்தபோது ஸ்பெயின் 5-1 என முன்னிலை பெற்றது.

நான்கு கோல்கள் பின்தங்கிய நிலையில் பிரான்ஸ் அணி மீண்டது. அடுத்த முப்பது நிமிடங்களில் 79வது நிமிடத்தில் ரியான் செர்கி (5-2) மூலம் பிரான்ஸ் தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்தது.

84வது நிமிடத்தில், டேனி விவியன் ஒரு சொந்த கோலை அடித்து 5-3 என முன்னிலை பெற்றது.

போட்டியின் இறுதியில் கோலோ முவானி மூலம் கோல் அடிக்க பிரான்ஸ் அணி 5-4 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் போர்ச்சுகலை எதிர்கொள்ளும்.

The post UEFA நேஷன்ஸ் லீக் – பிரான்ஸை வீழ்த்தி ஸ்பெயின் இறுதிப் போட்டிக்கு தகுதி appeared first on Oruvan.com.