Nanu Oya Archives - Oruvan.com

வளர்ப்பு நாய் மீது கொடூர தாக்குதல் – சிறுவன் கைது
நானுஒயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஒயா எடின்புரோ தோட்டப் பகுதியில், ஒரு சிறுவன் வளர்ப்பு நாய் ஒன்றை கடுமையாகத் தாக்கி, பின்னர் அந்த நாயை ஆற்றில் தூக்கி எறியும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

அயலவர்களுக்கும், குறித்த சிறுவனின் குடும்பத்தாருக்கும் இடையேயான முன்பகை காரணமாக, இந்த வளர்ப்பு நாயைத் தாக்கி ஆற்றில் வீசியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக, 15 வயதுடைய குறித்த சிறுவன் நானுஒயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் வைத்து பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மிருகங்களுக்கு எதிரான சித்திரவதை தடுப்புச் சட்டத்திற்கமைய, இந்த சிறுவனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வளர்ப்பு நாய் மீது கொடூர தாக்குதல் – சிறுவன் கைது appeared first on Oruvan.com.

வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்த வான் – எட்டு பேர் காயம்
மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வான் ஒன்று, வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்ததில், வானில் பயணித்த எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து (10) அதிகாலை 5:00 மணியளவில் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் தோட்ட பகுதியில் நிகழ்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களை டெஸ்போட் பகுதியில் உள்ள மக்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நானுஓயா பொலிஸார், வானின் சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாகவும், விபத்தில் வானுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.

The post வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்த வான் – எட்டு பேர் காயம் appeared first on Oruvan.com.

பொன்னர் சங்கர் நாடகத்தில் கம்ப மரம் ஏறும் போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு
நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா கிளாசோ தோட்டத்தில் தமிழர் வரலாற்றை கூறும் பொன்னர் சங்கர் நாடகத்தில் இன்று அதிகாலை (27) ஞாயிற்றுக்கிழமை 60 அடி உயரம் கொண்ட கம்ப மரத்தில் ஏறும் போது தவறி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் நானுஓயா கிளாசோ தோட்டத்தைச் சேர்ந்த முருகன் சதாசிவம் (வயது 63) என்பவர் எனவும் இவர் பொன்னர் சங்கர் கூத்து நாடகத்தில் பெரிய அண்ணன் என்ற கதாபாத்திரத்தில் வேடமிட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பொன்னர் சங்கர் வரலாற்று நாடக நிகழ்ச்சி நேற்று (26) இரவு ஆரம்பிக்கப்பட்டு இன்று காலை வரை இடம்பெற இருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வி .தீபன்ராஜ்

The post பொன்னர் சங்கர் நாடகத்தில் கம்ப மரம் ஏறும் போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.