Nadu Archives - Oruvan.com

தமிழகத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம்
தமிழகத்தின் சென்னையில் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திங்கள் கிழமை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை 10,000 ஐ அண்மித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இது நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமண வைபவங்கள், நவராத்திரி, தீபாவளி எனப் பண்டிகை காலம் என்பதாலும் சர்வதேச வர்த்தக நிலவரத்தாலும் தங்கம் விலை குறையும் சாத்தியம் இல்லையென நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே நிர்ணயமாகிறது.

அந்த வகையில், அமெரிக்கா இந்தியா மீது 50% வரி விதித்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்திய வர்த்தக துறையில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, சென்னையில் இன்று 22 கரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 85 ரூபா உயர்ந்து ஒரு கிராம்9,705 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

பவுனுக்கு 680 ரூபா உயர்வடைந்து ஆபரணத் தங்கம் ஒரு பவுன் 77,640 ரூபாவுக்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு 02 ரூபா உயர்வடைந்து 136 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதுடன்

கட்டி வெள்ளி ஒரு கிலோ கிராம் 1,36,000 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம் appeared first on Oruvan.com.

தமிழகத்தில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை
தமிழகத்தில் தங்கம் விலை பவுனுக்கு 680 ரூபா உயர்வடைந்து 76,960 ரூபாவுக்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே நிர்ணயமாகிறது.

அந்த வகையில், அமெரிக்கா இந்தியா மீது 50 வீத வரி விதித்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்திய வர்த்தக துறையில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதன் விளைவாக நேற்றைய தினம் ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை 76,280 ரூபாவுக்கு விற்பனையானது.

கடந்த 2 நாட்களில் மாத்திரம் 1,720 ரூபா உயர்வடைந்து ஒரு பவுன் தங்கம் விலை 77,000 ரூபாவை அண்மித்துள்ளது.

வெள்ளியின் விலை கிராமுக்கு 03 ரூபா உயர்வடைந்து 134 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் கிலோ கிராம் ஒன்றுக்கு 3,000 ரூபா உயர்வடைந்து 1,34,000 ரூபாவுக்கு வெள்ளி விற்பனை செய்யப்படுகிறது.

The post தமிழகத்தில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை appeared first on Oruvan.com.

தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜய் தெரிவு
தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயை தெரிவு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

த.வெ.க. செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பது தொடர்பிலும், கட்சி சார்பில் பிரமாண்டமான அளவில் மாநில மாநாடு நடத்துவது குறித்தும் நிர்வாகிகளுடன் விஜய் கலந்துரையாடினார்.

மேலும் த.வெ.க. செயற்குழு கூட்டத்தில் முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சட்டசபை தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட முடிவுகள் எடுப்பது குறித்து கட்சி தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கல்,

சட்டசபை தேர்தலை சந்திக்கும் விதமாக செப்டம்பர் மாதம் முதல் வாரம் முதல் டிசம்பர் மாதம் வரை விஜய் தீவிர சுற்றுப்பயணம்

மேற்கொள்ளல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒகஸ்ட் மாதத்தில் இரண்டாவது மாநில மாநாடு நடத்தப்படும், சட்டசபை தேர்தலில் விஜய் முதலமைச்சர் வேட்பாளர்,

சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைமையில் கூட்டணி உட்பட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜய் தெரிவு appeared first on Oruvan.com.