murder Archives - Oruvan.com

காதல் போதையும், கஞ்சா போதையும்!! யாழில் பறிபோன விரிவுரையாளரின் உயிர்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவீட விரிவுரையாளர் தயாளினி திலீபன் (54) கொலை செய்யப்பட்ட விவகாரம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி பலத்த விவாதங்கள் தோன்றியுள்ள நிலையில் விடலைக்கால காதல் போதை, கஞ்சா போதை கலந்த ஒரு போதைக்கலவையினால் இந்த கொலை நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விரிவுரையாளரின் மகளும், மருமகனும் திட்டமிட்டு இந்த கொலையை செய்தது இதுவரையான விசாரணையில் வெளிப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் திகதி அதிகாலையில் விரிவுரையாளர் கொலை செய்யப்பட்டு, அன்று காலையிலேயே அரியாலை- தனங்கிளப்பு பற்றைக்காட்டுக்குள் வீசப்பட்டுள்ளார்.

சடலத்தை வீசிவிட்டு, விரிவுரையாளரின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகையை அடகு வைத்து பெற்ற பணத்தில், திருகோணமலையில் வாடகைக்கு வீடு எடுத்து, வீட்டுக்கு பால் காய்ச்சி, குடிபுகுந்து, தம்பதியாக வாழ ஆரம்பித்த மகளும், மருமகனும் 20ஆம் திகதி பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், 21ஆம் திகதி தனங்கிளப்பு பற்றைக்காட்டுக்குள்ளிருந்து விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம்- அராலியை பூர்வீக இடமாக கொண்ட விரிவுரையாளர் தயாளினி, கைதடியில் குடியிருந்து, சில வருடங்களின் முன்னர் சுண்டிக்குளி, பாண்டியன்தாழ்வு பகுதியில் காணி வாங்கி, வீடு கட்டி குடியிருந்துள்ளார்.

அவருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்த மகன், இராஜரட்ட பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ளார். மகளுக்கு 19 வயது. அவருக்கும், நாயன்மார்க்கட்டு, இராஜேஸ்வரி வீதியை சேர்ந்த 21 வயதான இளைஞனுக்கும் பதிவுத் திருமணம் நடந்துள்ளது. இந்த இளைஞன் போதைக்கு அடிமையானவர்.

இந்த பதிவு திருமணம், கடந்த வருடம் நடந்தது. அப்போது விரிவுரையாளரின் மகளுக்கு 18 வயது.

இந்த ஜோடி காதல் வசப்பட்டிருந்த சமயத்தில், போதைப்பொருள் பாவனை, விற்பனை தொடர்பாக 2,3 தடவைகள் அந்த இளைஞன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதை இளைஞனுடன் மகளை திருமணம் செய்து வைக்கமாட்டேன் என தாயார் உறுதியாக கூறிவிட்டதையடுத்து, மகள் வீட்டுக்கு தெரியாமல் காதலனுடன் ஓடிச்சென்று, பதிவுத்திருமணம் செய்துள்ளார்.

இந்த ஜோடிக்கிடையில் அடிக்கடி தகராறு எழுந்துள்ளது. கணவனால் துன்புறுத்தப்பட்டு, அவரை விட்டுவிட்டு தாயாரின் வீட்டுக்கு மகள் அடிக்கடி வந்துள்ளார்.

மருமகன் குறிப்பிடும்படியாக எந்த வேலையும் செய்யாமல், போதைக்கு அடிமையாக, மகளையும் துன்புறுத்தி வந்த நிலைமையில், மகள் தரப்பில் விவாகரத்து வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. விவாகரத்து வழக்கு நடந்து வந்தாலும், அண்மைக்காலமாக, இன்ஸ்டகிராம் மூலம் விரிவுரையாளரின் மகளுடன் தான் தகவல் பரிமாறி வருவதாக கைதான இளைஞன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

விவாகரத்து வழக்கை தாக்கல் செய்தது தாயாரின் அறிவுரையின் பேரிலேயே என்றும், மகளுக்கு தன் மீதான கோபம் தீர்ந்து விட்டது என்பதையும் இன்ஸ்டா அரட்டையில் அறிந்து கொண்டதாக இளைஞன் தெரிவித்துள்ளார்.

விரிவுரையாளர் வீட்டில் நடந்தது என்ன?

விவகாரத்து கோரிய மனைவியுடனான இன்ஸ்டா அரட்டைகளில், இருவரும் சேர்ந்து வாழலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டதாக இளைஞன் கூறுகிறார்.

விவகாரத்து வழக்கின் கடந்த தவணையில், இளைஞன் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

அடுத்த தவணை விரைவில் வரவுள்ள நிலையில், அதற்கிடையில் மனைவியை சமரசப்படுத்தி, விவாகரத்து வழக்கை, இல்லாமலாக்க இளைஞன் திட்டமிட்டுள்ளார்.

கடந்த 17ஆம் திகதி இரவு விரிவுரையாளரின் வீட்டுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்த இளைஞன், வீட்டு கூரை பிரித்து இறங்கி, சீற்றுக்குள் ஒளிந்துள்ளார்.

வீட்டுக்குள் நுழையவுள்ள விவகாரத்தை அவர் காதலியிடம் இன்ஸ்டா அரட்டையிலும் சொல்லவில்லை. வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னர் அவர் கஞ்சா அருந்தியுள்ளார்.

நள்ளிரவு 12.30 அளவில் வீட்டுக்குள் இறங்கி, விரிவுரையாளரின் மகள் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்துள்ளார். மகளை தட்டியெழுப்பி, தாம் சேர்ந்து வாழலாம் என கேட்டுள்ளார்.

சேர்ந்து வாழலாம் என அந்த பெண் சம்மதம் தெரிவித்ததாகவும், ஆனால் தாயாரை கொலை செய்தாலே வாழ முடியுமென்றும் கூறியதாக இளைஞன் தற்போது பொலிசாரிடம் வாக்குமூலமளித்துள்ளார்.

அந்த பெண்ணின் யோசனையின்படியே, விரிவுரையாளரை கொல்ல முடிவெடுத்ததாகவும் கைதான இளைஞன் தெரிவித்துள்ளார்.

18ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் விரிவுரையாளர் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்ததாகவும், தனது தாயாரின் கால்களை மகள் அழுத்திப் பிடித்திருக்க, இளைஞன் கழுத்தை நெரித்து கொன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொலையின் பின்னர், வீட்டிலிருந்த சிசிரிவி கமராவின் டிவிஆர் இருந்த அறையை திறந்து, டிவிஆரை எடுத்து சென்றுள்ளனர்.

அதை திருகோணமலை செல்லும் வழியில் நீர்நிலையொன்றில் எறிந்ததாக தெரிவித்துள்ளனர்.

டிவிஆர் இருந்த அறையை திறப்பை மகளே எடுத்து தந்ததாகவும், தாயாரின் நகைகள் இருந்த அறை திறப்பையும் தந்து, நகைகளை எடுக்கும்படி சொன்னதாகவும் இளைஞன் தெரிவித்துள்ளார்.

சடலத்தை புதைக்க முயற்சி

கொலை செய்த பின்னர், சடலத்தை படுக்கை விரிப்பினால் சுற்றி, விரிவுரையாளரின் காருக்குள் வைத்துள்ளனர். இருவரும் இணைந்தே சடலத்தை காருக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர், தான் வந்த மோட்டார் சைக்கிளில் விரிவுரையாளரின் மகளையும் ஏற்றிக்கொண்டு, தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, வாடகை வாகனத்தில், அந்த பெண்ணுடன், விரிவுரையாளரின் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளனர்.

விரிவுரையாளரின் சடலத்தை புதைப்பதற்காக மண்வெட்டி ஒன்றையும் எடுத்துக்கொண்டு, காரில் புறப்பட்டுள்ளனர்.

மண்வெட்டியினால் கிடங்கு வெட்ட முனைந்த போது, மண்வெட்டி உடைந்ததால், அந்த முயற்சியை கைவிட்டு, தனங்கிளப்பு பற்றைக்காட்டுக்குள் சடலத்தை வீசிவிட்டு சென்றதாக இளைஞன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும், கொலையில் தனது பங்கை மகள் இதுவரை மறுத்து வருவதாக விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிக்கியது எப்படி?

விரிவுரையாளரான தனது தாயாரையும், தங்கையையும் கடத்திச் சென்றுவிட்டதாக விரிவுரையாளரின் மகன் பொலிசில் முறையிட்டிருந்தார்.

பொலிஸார் இது தொடர்பில் தீவிர விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது, சில தொழில்நுட்ப வசதிகளால்- தம்பதிகள் சிக்கியுள்ளனர்.

அவர்கள் சிக்குவதற்கான தொழில்நுட்ப தகவல்களை விரிவுரையாளரின் மகனே கொடுத்துதவியுள்ளார்.

இந்த ஜோடி தப்பிச்செல்லும் போது, விரிவுரையாளரின் ஏரிஎம் அட்டையை பயன்படுத்தி, கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் பணம் பெற்றுள்ளனர். இதற்கான குறுந்தகவல் விரிவுரையாளரின் தொலைபேசிக்கு சென்றது.

அத்துடன், திருகோணமலையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கியூ.ஆர் குறியீட்டுக்கு எரிபொருளை பெற்றுள்ளனர். இதற்கான குறுந்தகவலும் தொலைபேசிக்கு சென்றது.

இது தவிர, கொலையின் பின்னர் தனது தொலைபேசியை நிறுத்தி வைத்திருந்த மகள், திருகோமணலையில் வீடொன்றை வாடகைக்கு பெற்று, குடிபுகுந்த பின்னர், தனது தொலைபேசியை இயக்கியுள்ளார்.

இதன்போது, அவரது புவியியல் இருப்பிடத்தை சகோதரன் அறிந்து கொண்டார். இந்த தகவல்களின் அடிப்படையின் பொலிஸார் துரிதமாக செயற்பட்டு,

திருகோணமலையில் வைத்து இந்த ஜோடியை கைது செய்தனர்.

விரிவுரையாளரை கொன்ற பின்னர், அந்த வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட நகையை அடகு வைத்து பெற்ற பணத்திலேயே, திருகோணமலையில் வீடு வாடகைக்கு எடுத்துள்ளனர்.

திருகோணமலையிலிருந்து இந்த ஜோடி யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டு, துருவித்துருவி நடத்தப்பட்ட விசாரணையில் விரிவுரையாளர் கொலை செய்யப்பட்டு, சடலமாக வீசப்பட்டது தெரிய வந்தது.

இளைஞனின் தகவலின் அடிப்படையில் தனங்கிளப்பு பற்றைக்காட்டுக்குள் விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்டது.

அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.

யாழ் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் மேற்கொண்ட பரிசோதனையில், கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

The post காதல் போதையும், கஞ்சா போதையும்!! யாழில் பறிபோன விரிவுரையாளரின் உயிர் appeared first on Oruvan.com.

யாழ். விரிவுரையாளர் படுகொலை சம்பவம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட பெண் விரிவுரையாளரின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நகர்த்தல் பத்திரம் ஊடாக யாழ்ப்பாண பதில் நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சந்தேகநபர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்த பெண் விரிவுரையாளரின் இறுதிச் சடங்கு இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.பிரணவன், விரிவுரையாளரின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனையை மேற்கொண்டு சட்ட மருத்துவ அறிக்கை சமர்பித்துள்ளார்.

அதில் பெண் விரிவுரையாளர் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

The post யாழ். விரிவுரையாளர் படுகொலை சம்பவம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் appeared first on Oruvan.com.

அக்குரேகொட இரட்டைக் கொலை – மேலும் இருவர் கைது
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (06) அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரை பேருந்து மூலம் மொனராகலை பகுதிக்கு அழைத்துச் சென்றமை மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 39 மற்றும் 53 வயதுடைய இப்பாகமுவ மற்றும் மாகொல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது வெளிநாட்டில் வசிக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவரினால் வழங்கப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட பேருந்து ஒன்றின் மூலமே சந்தேக நபர் ஒருவரால் துப்பாக்கிதாரி அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

The post அக்குரேகொட  இரட்டைக் கொலை – மேலும் இருவர் கைது appeared first on Oruvan.com.

முச்சக்கர வண்டியில் இருந்து மீட்கப்பட்ட சடலம்
மொரட்டுவ பேருந்து நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் கத்திக்குத்து காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மொரட்டுமுல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு 7.30 மணியளவில் 119 அவசர எண்ணுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் குழு ஒன்று சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் சடலத்தை மீட்டுள்ளனர்.

அவரது உடலில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வேறு எங்காவது வெட்டிக் கொல்லப்பட்டு பின்னர் இந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவர் மொரட்டுவ முல்ல பகுதியைச் சேர்ந்த ‘சுரா’ என்று அழைக்கப்படும் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை வழக்கில் சந்தேக நபர் என்றும், தற்போது மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

The post முச்சக்கர வண்டியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் appeared first on Oruvan.com.

அக்குரேகொடை கொலை விசாரணை 80 வீதம் நிறைவு
அக்குரேகொடை கொலை தொடர்பிலான விசாரணைகள் 80 வீதம் நிறைவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அக்குரேகொடை துப்பாக்கிச் சூடு இடம்பெற்று 03 நாட்களுக்குள் பிரதான துப்பாக்கிதாரி உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களில் மூவர் 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவிற்கமைய விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏனைய சந்தேக நபர்கள் விளக்கமறியலில் உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.

The post அக்குரேகொடை கொலை விசாரணை 80 வீதம் நிறைவு appeared first on Oruvan.com.

முச்சக்கர வண்டிக்கான புத்தளத்தில் அரங்கேறிய கொலை – 16 வயது சிறுவன் கைது
புத்தளம் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை கொலை செய்து, அவரது முச்சக்கர வண்டியை திருடிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம், ரத்மல்யாய பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம், அடப்பனவில்லுவ பகுதியில் உள்ள வடிகாலில் இருந்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று (22) கிடைத்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர்.

விசாரணையில் இறந்தவர் அப்துல் லத்தீப் என்ற 75 வயதுடைய நபர் என்பது தெரியவந்துள்ளது, அவர் பெப்ரவரி 21 ஆம் திகதி தனது முச்சக்கர வண்டியில் வாடகை பயணம் ஒன்றுக்காக வீட்டை விட்டு வெளியேறினார்.

பொலிஸ் விசாரணைகளின்படி, சந்தேக நபர் அன்று இரவு 9.30 மணியளவில் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு வந்துள்ளார், அதன் பிறகு பாதிக்கப்பட்டவர் அவருடன் வாடகைக்கு முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.

முச்சக்கர வண்டியைத் திருடுவதற்காக சந்தேக நபர் கூர்மையான ஆயுதத்தைப் பயன்படுத்தி சாரதியின் கழுத்தில் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் சடலத்தை கைவிட்டு, சந்தேக நபர் வாகனத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருடப்பட்ட முச்சக்கர வண்டி பின்னர் புத்தளம் முல்லை வீட்டுவசதி வளாகத்தில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

அதன்படி, பொலிஸார் வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, சந்தேக நபர் நேற்று அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும், பணத்தையும் முச்சக்கர வண்டியையும் திருடும் நோக்கத்துடன் இந்தக் கொலை செய்யப்பட்டதாக அவர் ஒப்புக்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post முச்சக்கர வண்டிக்கான புத்தளத்தில் அரங்கேறிய கொலை – 16 வயது சிறுவன் கைது appeared first on Oruvan.com.

சட்டத்தரணி மற்றும் அவரின் மனைவி கொலை – நால்வர் கைது
அண்மையில் சட்டத்தரணி ஒருவர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷனா நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த சட்டத்தரணி மற்றும் அவரின் மனைவிக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது மிகவும் கொடூரமான செயல் என்றும், அரசாங்கம் எந்தவொரு குடிமகனின் உயிரையும் சமமாக மதிக்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொலை குறித்து 12 பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருவதாகவும், ஆயுதங்கள், வாகனங்கள் மற்றும் ஆதரவை வழங்கிய நான்கு பேர் சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சில எதிர்க்கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டுகளை அமைச்சர் கடுமையாக நிராகரித்தார், மேலும் இந்த அரசாங்கம் பாதாள உலகக் கும்பல்களுக்குப் பின்னால் உள்ளது என்ற கூற்றுகளை தோல்வியடைந்த அரசியல் செயற்பாடுகள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டு நாட்களில் யாராலும் மாயாஜாலம் செய்ய முடியாது என்றாலும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அரசாங்கமும் பொலிஸாரும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

The post சட்டத்தரணி மற்றும் அவரின் மனைவி கொலை – நால்வர் கைது appeared first on Oruvan.com.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் குடும்பஸ்தர் அடித்து கொலை – சந்தேக நபர் கைது
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் கரடிப்புலவு கிராமத்தில் கடந்த 27ம் திகதி இரவு இடம்பெற்ற கொடூர கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர், இனந்தெரியாத நபரால் தாக்கப்பட்டதில் சம்பவ இடத்திலேயே குறித்த நபர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் வசித்து வந்த குறித்த நபர் கடந்த 27ஆம் திகதி இரவு, கடைக்கு சென்று உணவு வாங்கிக் கொண்டு வீடு நோக்கி திரும்பிய வேளையில், அவரது தலையின் பின்பகுதியில் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் அதிக இரத்தகசிவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போது, அப்பகுதியை சேர்ந்த 30 வயதுடைய மரணமடைந்த நபரின் மச்சான் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தியபோது குறித்த சந்தேகநபர் கொலை செய்ததை பொலிஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளதால் நேற்றையதினம் (29) கைது செய்யப்பட்டுள்ளார்.

மரணமடைந்தவரின் மகளை கொலை செய்வதாக அவர் மிரட்டியதாகக் கூறப்படுவதால் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக, கோடரி பிடியினால் தலையில் தாக்கியதாக சந்தேக நபர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் பழம்பாசி, கரடிப்புலவு பகுதியைச் சேர்ந்த நாகையா நாகராஜா (வயது 41) என்பவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

The post முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் குடும்பஸ்தர் அடித்து கொலை – சந்தேக நபர் கைது appeared first on Oruvan.com.

பிள்ளைகளின் கண் முன்னால் தாயார் கொலை!
அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் குடும்பப் பெண் ஒருவர், தன் பிள்ளைகளின் கண் முன்னால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (4) இடம்பெற்றுள்ளது.

மாலை 5 மணியளவில் கத்தியுடன் வீட்டுக்கு வந்த உறவினரான ஆண் ஒருவர், வட்டிப் பணம் தொடர்பில் அந்தப் பெண்ணுடன் முரண்பட்டுள்ளார்.

இறுதியில் அவர் தான் கொண்டு வந்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணின் நெஞ்சில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையாளியான 42 வயது நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பெண்ணின் கொலை அரங்கேறிய போது வேலை நிமித்தம் வெளியில் சென்றிருந்த கணவரிடமும், பிள்ளைகளிடமும் வாக்குமூலங்களைப் பெற்று மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

The post பிள்ளைகளின் கண் முன்னால் தாயார் கொலை! appeared first on Oruvan.com.

கொந்தெனிய பகுதியில் மூவர் படுகொலை!
மாவெனெல்ல – கொந்தெனிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பெண்களும், ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 52, 57 மற்றும் 66 வயதுடையவர்கள் எனவும் அவர் கொந்தெனிய பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் வெவ்வேறு வீடுகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 35 வயதான பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 33 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், முதற்கட்ட விசாரணையில் சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மாவனெல்ல பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post கொந்தெனிய பகுதியில் மூவர் படுகொலை! appeared first on Oruvan.com.