Mullivaikkal Archives - Oruvan.com

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி பிரித்தானியாவில் பேரணி
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் 16ஆவது ஆண்டு நிறைவுதினம் ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்நாளையொட்டி தமிழர் பரப்பிலும் உலகலாவிய ரீதியிலும் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், பிரித்தானியாவிலும் 18.05.2025 அன்று முள்ளிவாய்க்கால் மற்றும் யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக நீதி கோரி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது இலங்கையில் இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வையும் வலியுறுத்திய கோரிக்கைகளை பேரணியில் கலந்துகொண்டவர்கள் முன்வைத்தனர்.

பிரித்தானியா, கனடா, ஐரோப்பிய நாடுகள் உட்பட சர்வதேச நாடுகள் ஈழத் தமிழர்கள் விவகார்தில் நீதியை பெற்றுக்கொடுக்கும் செயல்பாட்டில் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்றும் பேரணியில் கலந்துகொண்ட உலகத் தமிழர்கள் வலியுறுத்தினர்.

இதேவேளை, கடந்த சில நாட்களாக இனவழிப்பை மறைத்து நீதியை மழுங்கச் செய்யும் செயல்பாடுகளை முன்னெடுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கு தமது கண்டனத்தையும் தெரிவித்தனர்.

The post முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி பிரித்தானியாவில் பேரணி appeared first on Oruvan.com.

உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்கள் நீதியை எதிர்பார்க்கின்றனர் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை புதிய அரசாங்கம் நிரூபிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிரிவின் துணை பணிப்பாளர் மீனாட்சி கங்குலி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கடந்த வார இறுதியில், இலங்கையில் உள்ள தமிழர்கள் 1983 முதல் 2009 வரை நீடித்த உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை அல்லது காணாமல் போனவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்த ஒன்றுகூடினர்.

கடந்த 16 ஆண்டுகளாக அவர்கள் செய்து வருவது போலவே, நீதிக்காகவும் அவர்கள் குரல் கொடுத்தனர்.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் குழுக்களால் போர்க்குற்றங்கள் மற்றும் அரசு பாதுகாப்புப் படைகளால் மனித உரிமை மீறல்கள் குறித்து ஏராளமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்ட போதிலும், அடுத்தடுத்த அரசாங்கங்கள் எந்தவொரு நம்பகமான பொறுப்புக்கூறல் செயல்முறையையும் தொடங்கத் தவறிவிட்டன.

இதற்கிடையில், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்கள் தொடர்ந்து அடக்குமுறை மற்றும் பிற மீறல்களை எதிர்கொள்கின்றன.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (LTTE) இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான போர் இரு தரப்பினராலும் பரவலாக அத்துமீறல்களால் குறிக்கப்பட்டது.

இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை நெருங்கி வந்து, இறுதியில் மே 18, 2009 அன்று அவர்களை தோற்கடித்தபோது, ​​சரணடைந்த நூற்றுக்கணக்கான போராளிகள் படுகொலை செய்யப்பட்டனர். பாலியல் வன்கொடுமை செய்தனர் மற்றும் பலவந்தமாக காணாமல் போகச் செய்தனர்.

புலிகளால் போர் மண்டலத்தில் சிக்கியிருந்த பொதுமக்களை இராணுவம் கண்மூடித்தனமாக ஷெல்களால் தாக்கியது, அவர்கள் அவர்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தினர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில், முந்தைய நிர்வாகங்களிலிருந்து விலகி, அடக்குமுறை மற்றும் பாகுபாட்டின் மரபை நிவர்த்தி செய்வார் என்று நம்பி, பல தமிழர்கள் அநுர குமார திசாநாயக்கவுக்கு ஜனாதிபதி பதவிக்காக வாக்களித்தனர்.

அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளிட்ட முந்தைய அரசாங்கங்களின் தோல்வியுற்ற முயற்சிகளை திசாநாயக்க அரசாங்கம் ஆதரித்துள்ளது, ஆனால் அவை எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை.

இந்த நிறுவனங்கள் பல பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன, அவர்கள் அவற்றை தோல்வியுற்ற வாக்குறுதிகளின் ஒரு பகுதியாகவே பார்க்கிறார்கள்.

இதற்கிடையில், தமிழர்களை குறிவைத்து நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

(GSP+ திட்டங்களின் கீழ் ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கு வரி இல்லாத அணுகலைப் பேணுவதற்கான நிபந்தனையாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இந்த கொடூரமான சட்டத்தை இரத்து செய்வதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது.

பொறுப்புக்கூறல் தொடர்பான முன்னேற்றத்தை ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் அறிக்கையிட்டு கண்காணிக்க வேண்டும் என்றும், எதிர்கால வழக்குகளில் பயன்படுத்த சர்வதேச குற்றங்களுக்கான ஆதாரங்களை சேகரிக்க இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை நிறுவ வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.

இலங்கையில் முன்னேற்றம் இல்லாததால், சர்வதேச குற்றங்களைச் செய்பவர்களை பொறுப்புக்கூற வைப்பதற்கு புதுப்பித்தல் மிக முக்கியம்.

சபையின் தலையீடு நாட்டை “பிளவுபடுத்தும் மற்றும் ஊடுருவும்” என்று திசாநாயக்க அரசாங்கம் எதிர்த்துள்ளது.

எனவே, மதிப்பிழந்த உள்நாட்டு முயற்சிகள் செயல்படுவதாக பாசாங்கு செய்வதற்குப் பதிலாக, பொறுப்புக்கூறல் திட்டத்தை புதுப்பிப்பதற்கான தீர்மானத்தை ஆதரிப்பதன் மூலம் பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை அரசாங்கம் நிரூபிக்க வேண்டும்.

மேலும் இறுதியில் நீதியை வழங்குவதற்காக பாடுபட வேண்டும்” என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

The post உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்கள் நீதியை எதிர்பார்க்கின்றனர் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் appeared first on Oruvan.com.

பாலச்சந்திரனின் மரணத்திற்கு யார் பொறுப்பு? தென்னிலங்கை சட்டத்தரணி, ஜனாதிபதி அநுரவிடம் கேள்வி
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணத்திற்கு யார் பொறுப்பு? என தென்னிலங்கை சிங்கள இளம் சட்டத்தரணி ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

நேற்றைய தினம் வடக்கு கிழக்கு உள்ளிட்ட புலம்பெயர் தேசங்களில் 16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், தென்னிலங்கையைச் சேர்ந்த சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு சென்றிருந்தார்.

“முள்ளிவாய்க்கால் மண்ணை புண்ணிய பூமி என சுட்டிக்காட்டியிருந்த அவர், இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து அவர்களது உறவினர்கள் சுடர் ஏற்றி வழிபடுகின்றனர்” எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அவர் பேசிய இந்த காணொளி முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அது மிகவும் வைரலானது. மேலும் அவரின் கருத்திற்கு பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது தனது முகநூல் பக்கத்தில் பாலச்சந்திரனின் புகைப்படத்தை பதிவிட்டுள்ள இளம் சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே, பாலச்சந்திரனின் மரணத்திற்கு யார்? பொறுப்பு எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

போரைப் பற்றி எதுவும் தெரியாத, 12 வயது குழந்தையைக் கைது செய்து, பின்னர் இராணுவ காவலரன் ஒன்றில் சாப்பிட பிஸ்கட் கொடுத்த பின்னர் சுட்டுக் கொன்றதற்கு யார் பொறுப்பு? தோழர் ஜனாதிபதி அவர்களே? என பதிவிட்டுள்ளார்.

https://oruvan.com/wp-content/uploads/2025/05/ja-online-video-cutter.com-3.mp4

The post பாலச்சந்திரனின் மரணத்திற்கு யார் பொறுப்பு? தென்னிலங்கை சட்டத்தரணி, ஜனாதிபதி அநுரவிடம் கேள்வி appeared first on Oruvan.com.

கொழும்பு – வெள்ளவத்தையில் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது கொல்லப்பட்ட தமிழ் பொதுமக்களை நினைவுகூரும் வகையில் கொழும்பு – வெள்ளவத்தையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தின் போது பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது.

தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்றைய தினம் வடக்கு கிழக்கு உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதன்படி, இன்று காலை கொழும்பு – வெள்ளவத்தை கடற்கரையிலும் நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மோதலின் இறுதிக் கட்டத்தின் போது உயிரிழந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்களை நினைவுகூரும் வகையில் அலெக்ஸாண்ட்ரா வீதிக்கு எதிரே உள்ள கடற்கரைக்கு அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன், மலர் தூவி மரியாதை செலுத்தியிருந்தனர்.

எவ்வாறாயினும், மற்றொரு குழு கூட்டத்தை சீர்குலைக்க முயன்றதாகக் கூறப்படுகின்றது. இதனால் அந்தப் பகுதியில் ஒருவித பதற்றம் நிலவியிருந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன், போராட்டத்தில் ஈடுபட்ட குழுவை கலைக்க முயற்சி செய்யப்பட்டது.

எவ்வாறாயினும், பொலிஸ் பாதுகாப்புடன் நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கொழும்பு – வெள்ளவத்தையில் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு appeared first on Oruvan.com.

முள்ளிவாய்க்காலில் மிகவும் உண்ர்வுப்பூர்வமாக நடந்த தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு
தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் இடம்பெற்றிருந்தது.

2009ஆம் ஆண்டு யுத்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களை ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி நினைவு கூர்ந்து உணர்வெழுச்சியுடன் உறவுகள் அஞ்சலி செலுத்தி வருவது வழக்கமாகும்.

அந்தவகையில் இன்றையதினம் முள்ளிவாய்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் யுத்தத்தின் போது கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

காலை 10.15 மணிக்கு தவத்திரு அகத்தியர் அடிகளாரால் கொள்கைப்பிரகடனம் வாசிப்புடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் காலை 10.29 க்கு நினைவொளி சத்தம் எழுப்பபட்டு 10.30 க்கு அகவணக்கமும் அதனை தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

இறுதி யுத்தத்தில் மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் இழந்த முள்ளிவாய்க்கால் மேற்கினை சேர்ந்த வீரசிங்கம் இராசேந்திரா அவர்களால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு சமநேரத்திலே ஒற்றைச் சுடரொளி ஏற்றப்பட்டு இறுதியிலே மலர் வணக்கம் செலுத்தப்பட்டிருந்தது.

குறித்த அஞ்சலி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடதக்கது.

The post முள்ளிவாய்க்காலில் மிகவும் உண்ர்வுப்பூர்வமாக நடந்த தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு appeared first on Oruvan.com.

மட்டக்களப்பு கல்லடி பாலம் வாவியில் மிதந்து வந்த தமிழன அழிப்பு நினைவு தூபிகளால் பெரும் பரபரப்பு
மட்டக்களப்பு கல்லடி பாலத்து வாவியில் தமிழின அழிப்பு வாரத்தை நினைவு கூர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தமிழின அழிப்பின அடையாளமான முள்ளிவாய்கால் தூபியினை கொண்ட புகைப்படங்கள் மற்றும் கறுப்பு, சிவப்பு, மஞ்சல் கொடிகள் ஏற்றப்பட்டு மிதக்கும் வகையில் அமைக்கப்பட்ட இரண்டு மிதக்கும் தூபிகள் நேற்று சனிக்கிழமை (17) இரவு ஒன்பது மணியளவில் மிதந்து வந்ததையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இரவு 9.00 மணியளவில் மின் விளக்குகள் ஒளிர்ந்த நிலையில் இரு மிதக்கும் வகையிலான தமிழின அழப்பின் நினைவாக தயாரிக்கப்பட்ட தூபிகள் மிதந்து முகத்து வாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

இரவில் மின்விளக்குகள் ஒளிர்ந்த நிலையில், மனிதர்கள் இன்றி இரு சிறிய படகுகள் போல மர்மான பொருள் வாவியில் ஒரு மணித்தியாலம் மிதப்பதை கண்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இனையடுத்து அங்கு வந்த புலனாய்வு பிரிவினர் அதனை மீட்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

சுமார் நான்கு அடி கொண்ட சதுர வடிவில் முள்ளிவாய்காலில் அமைந்துள்ள நினைவு தூபி புகைப்படம் நிறுத்தப்பட்டு அதில் தலைமகனின் வீர வணக்க நாள், இன அழிப்பு வாரம் 12 வைகாசி முதல் 17 வைகாசி வரை, பொங்கு தமிழ் பேரவை என வாசகம் எழுதப்பட்டிருந்தது.

அதற்கு அருகில் கறுப்பு, சிவப்பு, மஞ்சல் கொடிகள் ஏற்றப்பட்டு அதனை சுற்றி மெழுகுவர்த்தி போன்ற வடிவிலான் மின்விளக்குகள் ஒளிரவிட்டு மிதக்கும் முறையில் தயாரிக்கப்பட்டு வாவியில் விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post மட்டக்களப்பு கல்லடி பாலம் வாவியில் மிதந்து வந்த தமிழன அழிப்பு நினைவு தூபிகளால் பெரும் பரபரப்பு appeared first on Oruvan.com.

நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தினார் ரவிகரன் எம்.பி
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 18.05.2025 இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி பிராத்தனையும் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் உள்ளூர் அதிகாரசபை தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றியீட்டிய இரத்தினம் ஜெகதீசனும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

The post நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தினார் ரவிகரன் எம்.பி appeared first on Oruvan.com.

யாழ் . பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக அஞ்சலி
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் , யாழ் பல்கலை வளாகத்தினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்

நினைவு தூபி முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் , முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தனை செய்ததுடன் , அவர்களுக்கு அகவணக்கம் செலுத்தி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே, முள்ளிவாய்க்கால் வாரத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இரத்த தான நிகழ்வுகள் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post யாழ் . பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக அஞ்சலி appeared first on Oruvan.com.

இலங்கை கடற்பரப்பில் பெருமளவான நபர்களை ஏற்றிச் சென்ற படகு – அகதிகள் என தகவல்
இலங்கை கடற்பரப்பில் பெருமளவான நபர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் இன்று புதன்கிழமை (19.12.2024) கண்டுபிடித்துள்ளனர்.

முல்லைத்தீவு கடற்பரப்பிலேயே படகு கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.

படகில் இருந்தவர்கள் தொடர்பிலான சரியான தகவல்கள் கண்டறியப்படாத நிலையில் படகை ஆய்வு செய்வதற்காக இலங்கை கடற்படை படகுகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்

எவ்வாறாயினும், படகில் மியான்மாரில் இருந்து அகதிகளாக வருகைத்தந்த 103 பேர் இருந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

The post இலங்கை கடற்பரப்பில் பெருமளவான நபர்களை ஏற்றிச் சென்ற படகு – அகதிகள் என தகவல் appeared first on Oruvan.com.