Mullaitivu Archives - Oruvan.com

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் குடும்பஸ்தர் அடித்து கொலை – சந்தேக நபர் கைது
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் கரடிப்புலவு கிராமத்தில் கடந்த 27ம் திகதி இரவு இடம்பெற்ற கொடூர கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர், இனந்தெரியாத நபரால் தாக்கப்பட்டதில் சம்பவ இடத்திலேயே குறித்த நபர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் வசித்து வந்த குறித்த நபர் கடந்த 27ஆம் திகதி இரவு, கடைக்கு சென்று உணவு வாங்கிக் கொண்டு வீடு நோக்கி திரும்பிய வேளையில், அவரது தலையின் பின்பகுதியில் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் அதிக இரத்தகசிவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போது, அப்பகுதியை சேர்ந்த 30 வயதுடைய மரணமடைந்த நபரின் மச்சான் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தியபோது குறித்த சந்தேகநபர் கொலை செய்ததை பொலிஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளதால் நேற்றையதினம் (29) கைது செய்யப்பட்டுள்ளார்.

மரணமடைந்தவரின் மகளை கொலை செய்வதாக அவர் மிரட்டியதாகக் கூறப்படுவதால் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக, கோடரி பிடியினால் தலையில் தாக்கியதாக சந்தேக நபர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் பழம்பாசி, கரடிப்புலவு பகுதியைச் சேர்ந்த நாகையா நாகராஜா (வயது 41) என்பவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

The post முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் குடும்பஸ்தர் அடித்து கொலை – சந்தேக நபர் கைது appeared first on Oruvan.com.

புதுக்குடியிருப்பில் T56 ரவைகளுடன் ஒருவர் கைது
முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் பகுதியில் T56 ரக துப்பாக்கிக்குரிய ரவைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேராவில் இளங்கோபுரம் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், நேற்றையதினம் மாலை மோட்டார் சைக்கிளில் புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு விஷேட அதிரடி படையினரால் வழிமறித்து சோதனை செய்யப்பட்டுள்ளார்.

சோதனையின் போது குறித்த நபரின் உடமையில் T56 ரக துப்பாக்கிக்குரிய 8 ரவைகள் வைத்திருந்தமை கண்டறியப்பட்டதையடுத்து, மோட்டார் சைக்கிளுடன் அந்த 8 ரவைகளும் கைப்பற்றப்பட்டதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் விசாரணைகளின் பின்னர் இன்றையதினம் (12) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

The post புதுக்குடியிருப்பில் T56 ரவைகளுடன் ஒருவர் கைது appeared first on Oruvan.com.

சீரற்ற வானிலை – முல்லைத்தீவில் 39,193 பேர் பாதிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழைகாரணமாக 12691குடும்பங்களை சேர்ந்த 39193 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், இதனால் தாழ் நிலப்பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

இதன் காரணமாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 656 குடும்பங்களை சேர்ந்த 2062 நபரும், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 4400 குடும்பங்களை சேர்ந்த 13559 நபரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 5443 குடும்பங்களை சேர்ந்த 17132 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 1408 குடும்பங்களை சேர்ந்த 4041 பேரும், துணுக்காய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 520 குடும்பங்களை சேர்ந்த 1811 பேரும், வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 264 குடும்பங்களை சேர்ந்த 588 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்றையதினம் (02.12.2025) காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மக்கள் மீட்கப்பட்டு ஆறு பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள 40 இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதில் உறவினர் வீடுகளில் 3620 குடும்பங்களை சேர்ந்த 9913 நபர்களும், இடைத்தங்கல் முகாம்களில் 1186 குடும்பங்களை சேர்ந்த 3178 நபர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

The post சீரற்ற வானிலை – முல்லைத்தீவில் 39,193 பேர் பாதிப்பு appeared first on Oruvan.com.

முல்லைத்தீவு பகுதியில் பிடிபட்ட இராட்சத மலைப்பாம்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் பகுதியில் தோட்டக்காணியில் மலைப்பாம்பு ஒன்று எதனையோ விழுங்கிய நிலையில் பிடிபட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (22.10.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது

அப்பகுதியில் உள்ள தோட்டக்காணியினை அதன் உரிமையாளர் துப்பரவு செய்து கொண்டிருந்தபோது, மலைப்பாம்பு ஒன்று எதனையோ விழுங்கிய நிலையில் அசைய முடியாது தடுமாறிக் கிடந்தது.

இதனை அவதானித்த உரிமையாளர் உடனடியாக முல்லைத்தீவு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதையடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் பாம்பினை பாதுகாப்பாக மீட்டு வேறு பகுதியில் விடுவித்துள்ளனர்.

தற்போது மழைக்காலம் நிலவி வருவதால் பாம்புகள் அடிக்கடி வெளிப்புற பகுதிகளுக்கு வரக்கூடிய வாய்ப்பு உள்ளதால், மக்கள் தங்கள் வீடுகளிலும் தோட்டங்களிலும் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post முல்லைத்தீவு பகுதியில் பிடிபட்ட இராட்சத மலைப்பாம்பு appeared first on Oruvan.com.

விபத்தில் காயமடைந்த மற்றுமொரு முல்லைத்தீவு இளைஞனும் உயிரிழப்பு
குருணாகல் – அனுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்ஆடைத் தொழிற்சாலை வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று கடந்த 25.09.2025 அன்று இடம்பெற்றிருந்தது.

இந்த விபத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, செம்மலை பகுதிகளை சேர்ந்த (புதுக்குடியிருப்பு தனியார் ஆடைத்தொழில்சாலை) ஊழியர்கள் நான்கு பேர் உயிரிழந்திருந்தனர்.

குறித்த விபத்தில் காயமடைந்து அனுரபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பினை சேர்ந்த இளைஞன் 29.09.2025 நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் ஒன்பதாம் வட்டாரம் மல்லிகைத்தீவு புதுக்குடியிருப்பினை சேர்ந்த நடராசா விஸ்னுயன் என்ற (வயது-21) இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடதக்கது.

The post விபத்தில் காயமடைந்த மற்றுமொரு முல்லைத்தீவு இளைஞனும் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

முல்லைத்தீவு மாணவன் சுகயீனத்தால் உயிரிழப்பு
உயர்தர தொழிநுட்ப துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு மாணவன் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு கற்சிலைமடுவைச்சேர்ந்த செல்வன் பாணுசன் என்பவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

சிறுநீரக மாற்று சிகிச்சை பயனளிக்காமல் நேற்றையதினம் (29.09.2025) இரவு மரணமாகியமை முல்லைத்தீவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

உயர்தர தொழிநுட்ப துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற இம்மாணவன், குடும்பத்திற்கு ஒரேயொரு பிள்ளை என்பது மேலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

The post முல்லைத்தீவு மாணவன் சுகயீனத்தால் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

குமுழமுனை மகாவித்தியாலய அதிபர் நியமன முறைகேட்டுக்கு எதிராக போராட்டம்
முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலயத்தில் இருந்து முறைகேடான வகையில் இடமாற்றங்கள் மேற்கொண்டமை, ஆசிரியர் ஒருவரை அதிபராக நியமிக்க எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றிருந்ததது.

முல்லைத்தீவு – குமுழமுனை மகாவித்தியாலயத்தில் இருந்து முறைகேடான வகையில் ஆசிரியர்களை இடமாற்றங்கள் மேற்கொண்டமை, அதிபரை ஒரு மாதகாலமாக நியமித்து தராமல் இழுத்தடிப்பு செய்து அதிபர் நேர்முக பரீட்சையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக ஆசிரியர் ஒருவரை குமுழமுனை மாகாவித்தியாலய பாடசாலைக்கு அதிபராக நியமிக்க எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்து குமுழமுனை மகாவித்தியாலத்திற்கு முன்பாக பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (22.09.2025) காலை இடம்பெற்றிருந்தது.

போராட்டத்திற்கான மகஜரினை ஆளுநர், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் முல்லைத்தீவு, வலய கல்வி பணிப்பாளர்களுக்கு அனுப்பப்படவுள்ளதுடன் ஆளுநருக்குரிய மகஜரினையும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கான மகஜரும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் போராட்ட களத்தில் வைத்து கையளிக்கப்பட்டிருந்தது.

பாடசாலைக்கு வருகை தந்திருந்த முல்லை கோட்டக்கல்வி பணிப்பாளர் திருக்குமரன் அவர்களிடம் குறித்த விடயம் தொடர்பில் வினவிய போது தாம் ஊடகங்களுக்கு கருத்து கூற முடியாதெனவும் வலயக்கல்வி பணிப்பாளரே கருத்து கூற முடியும் என தெரிவித்திருந்தார்.

குறித்த போராட்டத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான வீ.கலைச்செல்வன், ஜெ.சிவசாந்தி , பெற்றோர் ஆசிரிய சங்கத்தினர், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

The post குமுழமுனை மகாவித்தியாலய அதிபர் நியமன முறைகேட்டுக்கு எதிராக போராட்டம் appeared first on Oruvan.com.

முல்லைத்தீவில் மாணவர்களை துரத்திய காட்டு யானையால் பெரும் பரபரப்பு
முல்லைத்தீவு – குமுழமுனை ஆறுமுகத்தான்குளம் கிராமத்திற்குள் இன்று காலை புகுந்த காட்டு யானையினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

குமுழமுனை ஆறுமுகத்தான்குளம் கிராமத்திற்குள் நுழைந்த காட்டுயானை ஆறுமுகத்தான் அ.த.க பாடசாலை அருகாமை மாணவர்களை இன்று (15.09.2025) காலை துரத்தியுள்ளது.

பின்னர் பாடசாலைக்கு மாணவர்கள் வராமையினால் பாடசாலை நிர்வாகத்தினரால் வலயகல்வி பணிமனைக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த வலயகல்வி பணிமனையினர் பாடசாலைக்குள் இருந்த 10 மாணவர்களையும் பெற்றோரை அழைத்து பாதுகாப்பாக அனுப்புமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர்.

பாடசலைக்கு அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து யானை பொருட்களை சேதப்படுத்தியுள்ளது.

ஊர்மக்கள் இணைந்து யானையை விரட்ட முடியாதமையினால் வன ஜீவராசிகள் திணைகளத்தினருக்கு தகவல் வழங்கினர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையை விரட்டிவிட்டுள்ளனர்.

குறித்த யானை கிராமத்திற்குள் மூன்று மணித்தியாலயங்களுக்கு மேலாக நின்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடதக்கது.

The post முல்லைத்தீவில் மாணவர்களை துரத்திய காட்டு யானையால் பெரும் பரபரப்பு appeared first on Oruvan.com.

உடையார்கட்டில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் – இரு இளைஞர்கள் கைது
உடையார்கட்டு தெற்கு குரவில் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.

கடந்த ஒன்பதாம் திகதி உடையார் கட்டு தெற்கு குரவில் பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமி ஒருவரை சுதந்திரபுரம் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞன் ஒருவன் வீடொன்றிற்கு இரவு வேளை அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளான்.

சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியமையை அறிந்த உறவினர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்பாடு வழங்கியதற்கமைவாக குறித்த சிறுமியை துஷ்பிரயோகபடுத்திய குற்றச்சாட்டில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளரான 23 வயதுடைய இன்னுமொரு இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் புதுக்குடியிருப்பு பொலிஸாரின் விசாரணையின் பின்னர் தடயவியல் பொலிஸாரின் அறிக்கையோடு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடவுள்ளனர்.

The post உடையார்கட்டில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் – இரு இளைஞர்கள் கைது appeared first on Oruvan.com.

முல்லைத்தீவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டுப் பகுதியில் இன்று மாலை 7 மணி அளவில் இடம்பெற்ற விபத்தில் வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை குறுக்கறுத்து செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மீது வீதியால் பயணித்த மற்றுமொரு வாகனம் ஏறிச் சென்றதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

புது குடியிருப்பு ஒன்பதாம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சந்திரமோகன் சானுசன் என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மற்றய நபர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

The post முல்லைத்தீவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.