Mullaitivu News Archives - Oruvan.com

முல்லைத்தீவில் உணவு வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி – மீன்பொரியலுக்குள் புழு
முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான உணவகமொன்றில் நேற்று (11) இடம்பெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அப்பகுதியை சேர்ந்த நபரொருவர் மதிய உணவிற்காக குறித்த உணவகத்தில் இருந்து ஐந்து பார்சல் உணவுகளை வாங்கி சென்றுள்ளார்.

பின்னர் உணவை சாப்பிடும் போது, உணவில் வழங்கப்பட்டிருந்த மீன் பொரியலுக்குள் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் தொடர்பாக உடனடியாக சுகாதார பரிசோதகருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்துக்குச் சென்ற சுகாதார அதிகாரிகள் உணவகத்தை பரிசோதித்து, சுகாதார விதிமுறைகளை மீறியதாக கண்டறிந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த உணவகம் மீது சுகாதார பிரிவினரால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உணவின் தரத்தினை பேணுவதில் அலட்சியம் காட்டும் உணவகங்கள் மீதான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post முல்லைத்தீவில் உணவு வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி – மீன்பொரியலுக்குள் புழு appeared first on Oruvan.com.

உடையார்கட்டில் ஐஸ் போதை பொருளுடன் இளம் குடும்பஸ்தர் கைது
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரை, 108 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் தனது வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் (12.10.2025) உடையார்கட்டு பகுதியில் அமைந்துள்ள குறித்த நபரின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்ட போது விற்பனைக்காக வைத்திருந்த ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர் இதற்கு முன்னரும் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதுக்குடியிருப்பு பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

The post உடையார்கட்டில் ஐஸ் போதை பொருளுடன் இளம் குடும்பஸ்தர் கைது appeared first on Oruvan.com.

குமுழமுனை மகாவித்தியாலய அதிபர் நியமன முறைகேட்டுக்கு எதிராக போராட்டம்
முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலயத்தில் இருந்து முறைகேடான வகையில் இடமாற்றங்கள் மேற்கொண்டமை, ஆசிரியர் ஒருவரை அதிபராக நியமிக்க எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றிருந்ததது.

முல்லைத்தீவு – குமுழமுனை மகாவித்தியாலயத்தில் இருந்து முறைகேடான வகையில் ஆசிரியர்களை இடமாற்றங்கள் மேற்கொண்டமை, அதிபரை ஒரு மாதகாலமாக நியமித்து தராமல் இழுத்தடிப்பு செய்து அதிபர் நேர்முக பரீட்சையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக ஆசிரியர் ஒருவரை குமுழமுனை மாகாவித்தியாலய பாடசாலைக்கு அதிபராக நியமிக்க எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்து குமுழமுனை மகாவித்தியாலத்திற்கு முன்பாக பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (22.09.2025) காலை இடம்பெற்றிருந்தது.

போராட்டத்திற்கான மகஜரினை ஆளுநர், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் முல்லைத்தீவு, வலய கல்வி பணிப்பாளர்களுக்கு அனுப்பப்படவுள்ளதுடன் ஆளுநருக்குரிய மகஜரினையும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கான மகஜரும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் போராட்ட களத்தில் வைத்து கையளிக்கப்பட்டிருந்தது.

பாடசாலைக்கு வருகை தந்திருந்த முல்லை கோட்டக்கல்வி பணிப்பாளர் திருக்குமரன் அவர்களிடம் குறித்த விடயம் தொடர்பில் வினவிய போது தாம் ஊடகங்களுக்கு கருத்து கூற முடியாதெனவும் வலயக்கல்வி பணிப்பாளரே கருத்து கூற முடியும் என தெரிவித்திருந்தார்.

குறித்த போராட்டத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான வீ.கலைச்செல்வன், ஜெ.சிவசாந்தி , பெற்றோர் ஆசிரிய சங்கத்தினர், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

The post குமுழமுனை மகாவித்தியாலய அதிபர் நியமன முறைகேட்டுக்கு எதிராக போராட்டம் appeared first on Oruvan.com.

முல்லைத்தீவில் மாணவர்களை துரத்திய காட்டு யானையால் பெரும் பரபரப்பு
முல்லைத்தீவு – குமுழமுனை ஆறுமுகத்தான்குளம் கிராமத்திற்குள் இன்று காலை புகுந்த காட்டு யானையினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

குமுழமுனை ஆறுமுகத்தான்குளம் கிராமத்திற்குள் நுழைந்த காட்டுயானை ஆறுமுகத்தான் அ.த.க பாடசாலை அருகாமை மாணவர்களை இன்று (15.09.2025) காலை துரத்தியுள்ளது.

பின்னர் பாடசாலைக்கு மாணவர்கள் வராமையினால் பாடசாலை நிர்வாகத்தினரால் வலயகல்வி பணிமனைக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த வலயகல்வி பணிமனையினர் பாடசாலைக்குள் இருந்த 10 மாணவர்களையும் பெற்றோரை அழைத்து பாதுகாப்பாக அனுப்புமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர்.

பாடசலைக்கு அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து யானை பொருட்களை சேதப்படுத்தியுள்ளது.

ஊர்மக்கள் இணைந்து யானையை விரட்ட முடியாதமையினால் வன ஜீவராசிகள் திணைகளத்தினருக்கு தகவல் வழங்கினர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையை விரட்டிவிட்டுள்ளனர்.

குறித்த யானை கிராமத்திற்குள் மூன்று மணித்தியாலயங்களுக்கு மேலாக நின்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடதக்கது.

The post முல்லைத்தீவில் மாணவர்களை துரத்திய காட்டு யானையால் பெரும் பரபரப்பு appeared first on Oruvan.com.

உடையார்கட்டில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் – இரு இளைஞர்கள் கைது
உடையார்கட்டு தெற்கு குரவில் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.

கடந்த ஒன்பதாம் திகதி உடையார் கட்டு தெற்கு குரவில் பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமி ஒருவரை சுதந்திரபுரம் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞன் ஒருவன் வீடொன்றிற்கு இரவு வேளை அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளான்.

சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியமையை அறிந்த உறவினர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்பாடு வழங்கியதற்கமைவாக குறித்த சிறுமியை துஷ்பிரயோகபடுத்திய குற்றச்சாட்டில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளரான 23 வயதுடைய இன்னுமொரு இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் புதுக்குடியிருப்பு பொலிஸாரின் விசாரணையின் பின்னர் தடயவியல் பொலிஸாரின் அறிக்கையோடு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடவுள்ளனர்.

The post உடையார்கட்டில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் – இரு இளைஞர்கள் கைது appeared first on Oruvan.com.

முன்னாள் அரசியல் கைதி அரவிந்தன் பிணையில் விடுவிப்பு
முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவருமான ஆனந்தவர்மன் எனப்படும் அரவிந்தன், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றையதினம் (02.09.2025) பிணையில் விடுவிக்கப்பட்டார்.

2024 மார்ச் மாதம், விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் முகநூலில் பதிவுகள் இட்டதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் முகநூல் பதிவு தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

முன்னதாக, அவர் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக அரசியல் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அதன்பின்னர், வவுனியாவில் வசித்து வந்த அவர், போராளிகள் நலன்புரிச் சங்கம் என்ற அமைப்பின் மூலம் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் முன்னாள் அரசியல் கைதி அரவிந்தன், இன்று ஐந்து இலட்சம் ரூபா இரு சரீர பிணையில் பயணதடை விதிக்கப்பட்டு பல நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

The post முன்னாள் அரசியல் கைதி அரவிந்தன் பிணையில் விடுவிப்பு appeared first on Oruvan.com.

பிசுபிசுத்துப் போன ஹர்த்தால் – முல்லைத்தீவு, அம்பாறையிலும் வழமைப் போன்று செயற்பாடுகள்
வடக்கு மற்றும் கிழக்கில் இன்று முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், முல்லைத்தீவு மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளும் வழமைப் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக இன்றையதினம் (18) கடையடைப்பு போராட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வழமை போல் அனைத்து செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றது.

வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் அதிகரித்த இராணுவ பிரசன்னம் உள்ளிட்டவற்றிற்கு எதிராக இன்றையதினம் வடக்கு – கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் முதல் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், அதற்கு இணையாக பலரும் எதிர்ப்பும் வெளியிட்டிருந்தனர்.

இதனையடுத்து, கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளும் நேரத்தை மட்டுப்படுத்தி தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் நேற்றையதினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தும் அனைத்து செயற்பாடுகளும் வழமைபோல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் கல்முனை , சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக்கடைகள் வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கியது.

இப்பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்துள்ள போதிலும் கற்றல் செயற்பாடு இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.

மாவட்டத்தில் வழமை போன்று அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது.

பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், அட்டப்பளம், சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, சவளக்கடை, மத்தியமுகாம், உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து வழமை போன்று செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று பொலிஸாருடன் இணைந்து கடற்படை இராணுவம் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.

அத்துடன் கல்முனை பொது சந்தை உட்பட அதனை சூழ உள்ள பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம் களைகட்டியது.

மேலும் வியாபார நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள், பாடசாலைகள், மருந்தகங்கள், வங்கிகள், எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கபட்டடு வியாபாரம் இடம்பெற்றது.

எனினும் சில இடங்களில் பொதுமக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post பிசுபிசுத்துப் போன ஹர்த்தால் – முல்லைத்தீவு, அம்பாறையிலும் வழமைப் போன்று செயற்பாடுகள் appeared first on Oruvan.com.

பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு
வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக வருகின்ற 15ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவி முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த பாரிய கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழரசு கட்சியின் பொது செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் கோரியுள்ளார்.

இது குறித்து அந்த சட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்துயன்கட்டு குளத்தில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. குளத்திற்கு அருகில் உள்ள இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினர் , அப்பகுதி இளைஞர்களை இராணுவ முகாமிற்குள் அழைத்து தாக்கியுள்ளனர்.

அவ்வாறு தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரை குளத்தில் இராணுவத்தின் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் தொடர்ந்து நிலை கொண்டு இருப்பதனால் தான் அவ்வாறான அசம்பாவிதங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

எனவே வடக்கு கிழக்கில் காணப்படும் இராணுவ பிரசன்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கு மாகாணம் தழுவி பாரிய கடையடைப்பு போராட்டத்தை 15ஆம் திகதி நடாத்தவுள்ளோம்.

கடையடைப்பு போராட்டத்தினால், வர்த்தகர்களுக்கு பெருமளவான நஷ்டங்கள் ஏற்படும் , மக்களின் இயல்வு வாழ்வு பாதிக்கப்படும்.

இருந்தாலும் நாம் இராணுவ பிரசன்னத்தினால் தொடர்ந்து பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதனால், அதற்கு எதிராக அன்றைய தினம் முன்னெடுப்படும் கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

The post பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு appeared first on Oruvan.com.

பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் முல்லைத்தீவு இளைஞரின் இறுதி சடங்கு
முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடாத்தியபோது தாக்குதலுக்கு முகம்கொடுத்து தப்பியோடி சடலமாக மீட்கப்பட்ட இளம்குடும்பஸ்தரின் இறுதி ஊர்வலம் இன்றையதினம் (11.08.2025) பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றிருந்தது.

முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என குறித்த பகுதி இளைஞர் ஒருவருக்கு ஒரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து 07.08.2025 அன்று இரவு 7.30 மணியளவில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டு ஐவர் முகாமிற்கு சென்ற நிலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் நால்வர் தப்பியோடிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இறந்தவவரின் இறுதி ஊர்வலம் பொலிஸ் பாதுகாப்புடன் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு மத்தியில் இறுதி ஊர்வலம் இடம்பெற்றிருந்தது.

The post பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் முல்லைத்தீவு இளைஞரின் இறுதி சடங்கு appeared first on Oruvan.com.

முல்லைத்தீவில் நடந்த சர்ச்சைக்குரிய மரணம் – உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு
முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன், மாதிரிகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளது.

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துஐயன்கட்டுப்பகுதியில் கடந்த 07.08.2025 அன்று இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த 32வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற குடும்பஸ்தரே நேற்று முன்தினம் சனிக்கிழமை முத்தையன் காட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

நீதவானின் முன்னிலையில் சடலம் குளத்திலிருந்து மீட்கப்பட்டதுடன், தடயவியல் பொலிஸாரால் தடயவியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சடலம் உடல்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். போதனா வைத்திய சாலையில் சட்ட வைத்திய அதிகாரியினால் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மரணத்திற்கான தெளிவான காரணம் குறிப்பிடப்படாமல் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் மேலதிக பகுப்பாய்வுக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட உள்ளது

The post முல்லைத்தீவில் நடந்த சர்ச்சைக்குரிய மரணம் – உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு appeared first on Oruvan.com.