MSD Archives - Oruvan.com

இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால் – தோனியின் கவலை
டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, பனி பொழிவு இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்கும் என தோனி சுட்டிக்காட்டியுள்ளார்.

விளையாட்டு தொகுப்பாளர் ஜதின் சாம்ப்ரு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய தோனி இவ்வாறு கூறியுள்ளார்.

“இந்திய அணி மிகவும் ஆபத்தான அணி. துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் இந்திய அணி மிகவும் ஆபத்தானது.

தற்போதைய அணிக்கு அனுபவம் உள்ளது, குறிப்பாக டி20 வடிவத்தில் மிகுந்த அனுபவம் உள்ளது.

வீரர்கள் அழுத்தத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டுள்ளனர், மேலும் அனைவரும் தங்களின் பாத்திரங்களை சிறப்பாக செய்கிறார்கள்.

ஆனாலும் எனக்கு மிகப்பெரிய கவலை பனி பொழிவு தான்.

எனெனில் பனிப் பொழிவு போட்டியின் போக்கை முற்றிலும் மாற்றிவிடும் என தோனி சுட்டிக்காட்டியுள்ளார்.

“நான் விளையாடும்போது, ​​பனிப் பொழிவை கண்டு மிகவும் பயந்துள்ளேன். இதுபோன்ற சமயங்களில்,  நாணய சுழற்சி உங்களுக்கு மிக முக்கியமானதாகிவிடும்.

சிறந்த அணிகளுக்கு எதிராக 10 போட்டிகளில் விளையாடினால், நாங்கள் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.

எனினும், எங்கள் வீரர்கள் மோசமான நாளையும், எதிர் அணி நல்ல நாளையும் அனுபவிக்கும்போது சந்தரப்பம் எழும், இது டி20 கிரிக்கெட்டில் அடிக்கடி நடக்கும்.

இந்த சந்தர்ப்பம் லீக் கட்டத்திலோ அல்லது நாக் அவுட் கட்டத்திலோ எந்த நேரத்திலும் நிகழலாம்” என்று தோனி மேலும் தெரிவித்துள்ளார்.

The post இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால் – தோனியின் கவலை appeared first on Oruvan.com.

தோனிக்கு முக்கிய பதவி – பி.சி.சி.ஐ எடுத்துள்ள தீர்மானம்
இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து சுமார் ஆறு ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இன்றளவும் அவர் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

அதோடு வளர்ந்து வரும் வீரர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்து வருகிறார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரோடு அவர் ஒட்டுமொத்தமாக ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி தோனி அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்த பிறகு என்ன திட்டங்களை வைத்துள்ளார்? என்பது குறித்து இதுவரை அவர் எந்த ஒரு உறுதியான பதிலையும் அளிக்கவில்லை.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் சபையான பி.சி.சி.ஐ அடுத்த ஆண்டு தோனிக்கு மீண்டும் ஒரு முக்கிய பதவியை வழங்க காத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்ற வேளையில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்பட்டார்.

அப்போதைய தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி அணியில் இருந்தாலும் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கும் ஒரு முக்கிய பொறுப்பினை தோனி சம்பளம் எதுவும் பெறாமல் செய்திருந்தார்.

ஆனால் அந்த தொடரில் இந்திய அணி லீக் சுற்றோடு வெளியேறியிருந்தது.

இந்நிலையில் தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் நடைபெற இருக்கும் 2026 டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக தோனியை நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது தொடர்பாக தோனியை பி.சி.சி.ஐ நிர்வாகம் அணுகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த பதவியை தோனி ஏற்பாரா? இந்திய அணியுடன் இணைந்து செயல்படுவாரா? என்பது அவர் எடுக்கப்போகும் முடிவில் தான் இருக்கிறது.

ஏனெனில் ஏற்கனவே தோனிக்கும் கம்பீருக்கும் செட் ஆகாது என்று பேசப்படும் வரும் வேளையில் தற்போது பயிற்சியாளராக கம்பீர் இந்திய அணியில் இருக்கும் தருவாயில் தோனி எப்படி அணிக்குள் வருவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தோனிக்கு முக்கிய பதவி – பி.சி.சி.ஐ எடுத்துள்ள தீர்மானம் appeared first on Oruvan.com.

கேன் வில்லியம்சனின் 21ஆம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் அணி
நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு கனவு அணியை முன்னாள் மற்றும் இந்தாள் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம்.

இதன்படி, நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான கேன் வில்லியம்சன் 21ஆம் நூற்றாண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய ஆல் டைம் சிறந்த வீரர்களை கொண்டு அணியை அறிவித்துள்ளார்.

அந்த அணியில் பேப் 4 துடுப்பாட்ட வீரர்களான விராட் கோலி, ஜோ ரூட், ஆகியோரை தேர்வு செய்யாத அவர் தன்னையும் சேர்த்துக்கொள்ளவில்லை.

எனினும், அவுஸ்திரேலியா அணியின் நடச்த்திர் துடுப்பாட்ட வீரர் ஸ்டீவ் சுமித்தை சேர்வு செய்துள்ளார். அத்துடன் சச்சின், சேவாக், மகேந்திரசிங் தோனி ஆகியோரையும் அணியில் சேர்த்துள்ளார்.

கேன் வில்லியம்சன் தெரிவுசெய்துள்ள அணி……

மேத்யூ ஹெய்டன், சேவாக், ரிக்கி பாண்டிங், சச்சின், ஸ்டீவ் சுமித், ஏபி டி வில்லியர்ஸ், மகேந்திரசிங் தோனி, டேல் ஸ்டெயின், ஷோயப் அக்தர், கிளென் மெக்ராத், முத்தையா முரளிதரன்.

The post கேன் வில்லியம்சனின் 21ஆம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் அணி appeared first on Oruvan.com.

ஐ.பி.எல் தொடரிலிருந்து முதலாவது அணியாக வெளியேறிய சிஎஸ்கே
நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து முதல் அணியாக சென்னை அணி வெளியேறியுள்ளது.

இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்ற நிலையில், பிளே ஓப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை அந்த அணி இழந்துள்ளது.

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிரான நேற்றையப் (30) போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் சாம் கரன் அதிகபட்சமாக 88 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதனையடுத்து 191 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் சார்பில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 72 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். போட்டியின் ஆட்டநாயகனாக ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவு செய்யப்பட்டார்.

இதற்கமைய 2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரிலிருந்து முதலாவது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியுள்ளது.

18 ஆண்டு கால ஐ.பி.எல் வரலாற்றின் முதல் முறையாக சென்னை அணி தொடர்ந்து இரண்டு முறை பிளே ஓப் சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறியுள்ளது.

ஐந்து முறை கிண்ணம் வென்றுள்ள சென்னை அணி, முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேற முதல் சந்தர்ப்பமும் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

The post ஐ.பி.எல் தொடரிலிருந்து முதலாவது அணியாக வெளியேறிய சிஎஸ்கே appeared first on Oruvan.com.

சாஹலுக்கு தோனி வழங்கிய பரிசு – கிண்டலடித்த மேக்ஸ்வெல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி தனது மட்டையை பஞ்சாப் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு பரிசாக வழங்கினார்.

இந்நிலையில், தோனியின் மட்டையைப் பரிசாகப் பெற்ற சாஹல், மகிழ்ச்சியுடன் டிரஸ்ஸிங் அறைக்கு திரும்பினார்.

மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த சாஹலை, அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல், டிரஸ்ஸிங் ரூமில் ட்ரோல் செய்தார்.

பஞ்சாப் கிங்ஸின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிரப்பட்ட இந்த காணொளி, தற்போது கிரிக்கெட் உலகில் டிரெண்டிங்கில் உள்ளது.

மேக்ஸ்வெல் ஏன் இந்த பேட் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது, ​​சாஹல் “அடிக்க” என்று பதிலளித்தார்.

மேலும் மேக்ஸி நகைச்சுவையாக, “இந்த சீசனில் நீங்கள் இன்னும் துடுப்பெடுத்தாடவில்லை, எனவே அணி இன்னும் உங்களை ஒரு இம்பெக்ட் வீரராக விளையாட வைக்கிறது” என்று கூறுகிறார்.

அருகில் இருந்த இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவும் சாஹலை கேலி செய்ய இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். ஹரியானாவைச் சேர்ந்த ஒரு வீரர் நிச்சயமாக அந்த மட்டையை வெல்வார் என்று பிரியான்ஷ் கூறினார்.

பிரியான்ஷ் ஹரியானாவை சேர்ந்த வீரர் ஆவார்.

இந்த சீசனில் ஒவ்வொரு போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக இருந்த சாஹல், இன்னும் துடுப்பெடுத்தாடவில்லை. இந்த சீசனில் ஒன்பது போட்டிகளில் பந்து வீசியுள்ள சாஹல், ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

The post சாஹலுக்கு தோனி வழங்கிய பரிசு – கிண்டலடித்த மேக்ஸ்வெல் appeared first on Oruvan.com.

ரிஷப் பந்த்தை வாங்குவதில் ஆர்வம் காட்டிய சிஎஸ்கே – மெகா ஏலத்தின் இறுதியில் நடந்த ட்விஸ்ட்
நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியின் தலைவர் ரிஷப் பந்த் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சுமார் 27 கோடிக்கு வாங்கப்பட்ட அவர் அணிக்கு ஒரு சுமையாக மாறி வருவதாகக் கருதப்படுகிறது.

டெல்லி அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியிலும் அவர் ஓட்டங்கள் எடுக்க தவறியிருந்தார். இந்த தொடரில் இதுவரை அவர் ஒரேயொரு அரைச் சதத்தை மட்டுமே அடித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தின் போது, ரிஷப் பந்த் வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்வம் கொண்டிருந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியள்ளன.

தி இந்து பத்திரிகையின் செய்தியாளர் ஒருவர் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அவரின் கூற்றுப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனி ஆகியோர் ரிஷப் பந்த்தை அணிக்குள் கொண்டு வருவதில் மிகவும் ஆர்வம் காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ரிஷப் பந்த் தலைவர் பதிவியை கோரியதாக அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தோனி ரிஷப் பந்த்தை தொடர்புகொண்டு பேசியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெகா ஏலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை, சென்னை அணி இரண்டு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடிவுசெய்திருந்தது. பந்த்தை ஏலத்தில் வாக்குவதே அவர்களின் முடிவு என்பதை இது தெளிவுப்படுத்துகின்றது.

எவ்வாறாயினும், சென்னை அணியில் முதலில் ஒரு வீரராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விரும்பினாலும், தலைவர் பதவியை விரும்புவதில் பந்த் பிடிவாதமாக இருந்தார்.

ஆனால் சென்னை அணி அந்த கோரிக்கை ஏற்கவில்லை எனவும், இறுதியில் மீதமுள்ள மூன்று வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டதாகவும் அவரின் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரிஷப் பந்த்தை வாங்குவதில் ஆர்வம் காட்டிய சிஎஸ்கே – மெகா ஏலத்தின் இறுதியில் நடந்த ட்விஸ்ட் appeared first on Oruvan.com.

ஐபிஎல் தொடரில் எடை குறைந்த மட்டைகளை பயன்படுத்த தோனி முடிவு
பிரம்மாண்டமான சிக்ஸர்களை அடிக்க எடைக் கூடிய மட்டைகளைப் பயன்படுத்துவதில் பெயர் பெற்ற எம்.எஸ். தோனி, வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் இலகுவான வில்லோ மட்டைகளைப் பயன்படுத்த விரும்புவதாகக் கூறப்படுகிறது.

ஒரு அறிக்கையின்படி, மீரட்டைச் சேர்ந்த கிரிக்கெட் உபகரண நிறுவனம் இந்த பருவத்தில் 10-20 கிராம் எடை குறைவான மட்டைகளை தோனிக்கு வழங்கியுள்ளது.

“ஒவ்வொரு மட்டையின் எடையும் சுமார் 1230 கிராமுடன் முன்பு இருந்த அதே வடிவத்தைக் கொண்டுள்ளது” என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக தோனி ​​1250 முதல் 1300 கிராம் வரை எடையுள்ள மட்டைகளைப் பயன்படுத்தினார். தோனி எப்போதும் கனமான மட்டைகளுடன் விளையாடியதாக அவரது முன்னாள் அணி வீரர் ஒருவர் கூறியுள்ளார்.

தற்போது 43 வயதாகும் தோனி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதான வளாகத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஐபிஎல் தவிர அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் தோனி ஓய்வு பெற்றுவிட்டார். ஐபிஎல் 2024க்கு முன்னதாக, அவர் சிஎஸ்கே அணியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகினார்.

ருதுராஜ் கெய்க்வாட் தோனிக்கு பின்னர் தலைவர் பதவிக்கு வந்தார். இருப்பினும், கடந்த ஆண்டு புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்த சிஎஸ்கே அணி பிளேஆஃப்களுக்கு தகுதி பெறவில்லை.

ஐபிஎல் வரலாற்றில் ஐந்து முறை பட்டத்தை வென்ற தோனி மிகவும் வெற்றிகரமான தலைவர்களில் ஒருவராவார்.

The post ஐபிஎல் தொடரில் எடை குறைந்த மட்டைகளை பயன்படுத்த தோனி முடிவு appeared first on Oruvan.com.

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடர் – இந்திய அணியின் ஆலோசகராகின்றார் தோனி?
எதிர்வரும் பெப்ரவரி இடம்பெறவுள்ள ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் தலைவர் எம்.எஸ்.தோனி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து சமூக ஊடகங்கள் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒன்பதாவது, ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் அடுத்த மாதம் (பெப்ரவரி) 16ஆம் திகதி முதல் மார்ச் ஒன்பதாம் திகதி வரை பாகிஸ்தானில் இடம்பெறவுள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளன.

இந்த தொடருக்கான அணிகளை வருகிற எதிர்வரும் 12ஆம் திகதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி அறிவித்துள்ளது. மேலும், இந்த வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்ய பெப்ரவரி 12ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் தலைவர் எம்.எஸ்.தோனி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக 2021ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கிண்ண தொடரின் போது இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டிருந்தார். எனினும், அந்த தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடர் – இந்திய அணியின் ஆலோசகராகின்றார் தோனி? appeared first on Oruvan.com.