Mossad Archives - Oruvan.com

‘மொசாட்’ இலங்கைக்கு வருவது ஆபத்து – இஸ்ரேலிய மதஸ்தலங்களுக்கு அனுமதி வழங்கப்படுவது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
இலங்கையில் உள்ள இஸ்ரேல் நாட்டவரின் மதஸ்தலங்கள் மற்றும் கலாச்சார ஸ்தலங்களுக்கு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்படுவது தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும். மொசாட் இலங்கைக்கு வருவது அவ்வளவு நல்லதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹமான் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் எழுப்பிய கேள்வியின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தமது கேள்வியில்,

”ஜனாதிபதி, பிரதமர் சபாநாயகர், சபை முதல்வர் என அனைவரும் கடந்த காலத்தில் நிபந்தனைகளின்றி பலஸ்தீன விடுதலைக்காக குரல்கொடுத்தவர்களாகும். கடந்த காலத்தில் அமையபெற்ற அரசாங்கங்கள் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல்கொடுப்பதற்கு பதிலாக இஸ்ரேலுடன் உறவுகளை பேணிவந்தன. இதனால் மத்திய கிழக்கு நாடுகளுடனான உறிவில் எமக்கு பின்னடைவுகளும் ஏற்பட்டன. பலஸ்தீனம் தொடர்பில் சர்வதேச ரீதியாக எமக்கு இருந்த கௌரவத்துக்கும் கடந்த அரசாங்கங்கள் பாதிப்பை ஏற்படுத்தின.

இலங்கையின் பல பிரதேசங்களில் இஸ்ரேலியர்களின் மதஸ்தலங்கள் மற்றும் கலாசார மத்தியஸ்தலங்களை அமைத்து வருகின்றனர். இவற்றுக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதுடன், அவை கட்டப்பட்டும் வருகின்றன. மாத்தறை வெலிகம பகுதியில் இவ்வாறான கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ளது. தெஹிவளை அல்விஸ் பகுதியிலும் இவ்வாறான கட்டிடமொன்று கட்டப்படுகிறது. கொழும்பு 07 சிற்றம்பலம் கார்டினல் வீதியிலும் பாரிய கட்டிடமொன்று கட்டப்படுகிறது.

இந்த கட்டிடங்கள் கட்டப்படும் இடங்களுக்கு 24 மணித்தியாலமும் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பின் கீழ் அமைக்கப்படும் கட்டிடங்கள் என்ன என்பது தொடர்பிலேயே எமக்கு பிரச்சினை உள்ளது.

இலங்கையில் யூதர்கள் இருந்தால் அவர்களுக்கு மதஸ்தலங்களை அமைக்க அனுமதிக்கலாம். ஆனால், அவ்வாறு எவரும் இல்லாத சூழலிலேயே இந்த கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன.

தெஹிவளை அல்விஸ் பகுதியில் குறித்த கட்டிடம் கட்டப்படும் பகுதியில் நடந்துச் சென்றுக்கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கொண்டுசென்று தெஹிவளை பொலிஸார் விசாரணை செய்துள்ளனர். நீதிமன்றத்தின் ஊடாகதான் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பலஸ்தீனத்துக்காக நாம் அனைவரும் பாதையில் இறங்கி போராடிய வரலாறு உள்ளது. இந்த கட்டிடங்கள் இது தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக நாம் கருதுகிறோம். “மொசாட்“ இலங்கைக்கு வருவது அவ்வளவு நல்லதல்ல. வெலிகடையில் குறித்த கட்டிடம் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிலேயே அமைக்கப்பட்டுள்ளது. விரைவாக இதுதொடர்பில் அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும்.

இஸ்ரேல் இராணுவ வீரர்கள் பலர் எமது நாட்டுக்கு வருகின்றனர். ஆனால், அவர்கள் இராணுவ வீரர்களா என்பதை அடையாளம் காண்பது கடினம். மனரீதியான நிம்மதியை தேடி அவர்கள் இங்கு வருகின்றனர். ஆனால், பல நாடுகள் இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகள் வருகையை நிறுத்தியுள்ளன. மாலைத்தீவு, லத்தின் அமெரிக்க நாடுகள், தென் ஆப்ரிக்க நாடுகள் என பல நாடுகள் நிறுத்தியுள்ளன. இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளால் ஐரோப்பிய பயணிகள் வருவதில்லை என்பதாலேயே நிறுத்தியுள்ளன. எதிர்காலத்தில் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் வருகை தடுப்பது தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன.” என்றார்.

The post ‘மொசாட்’ இலங்கைக்கு வருவது ஆபத்து – இஸ்ரேலிய மதஸ்தலங்களுக்கு அனுமதி வழங்கப்படுவது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் appeared first on Oruvan.com.

பேஜர் தாக்குதல்கள் எவ்வாறு நடத்தப்பட்டன? – மொசாட்டின் திட்டம் அம்பலமானது
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவை குறிவைக்கும் பேஜர், மற்றும் வாக்கி – டாக்கி குண்டுவெடிப்பு திட்டத்திற்கு பின்னால், இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் பற்றிய தகவல்களை முன்னாள் உளவாளிகள் வெளிப்படுத்தினர். சமீபத்தில் மொசாட்டில் இருந்து ஓய்வு பெற்ற இரண்டு மூத்த அதிகாரிகள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில், பல ஹிஸ்புல்லா போராளிகள் பேஜர் மற்றும் வாக்கி – டாக்கி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர்.

ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயிரக்கணக்கான வாக்கி-டாக்கிகள் மற்றும் பேஜர்களை இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டது என்பதை உணராமல் எப்படி ஏமாற்றினார் என்று இரண்டு முன்னாள் மொசாட் முகவர்கள் கூறினார்கள்.

இந்த தாக்குதல்களில் டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இது ஹிஸ்புல்லா உறுப்பினர்களை மட்டுமே குறிவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாக இஸ்ரேல் கூறியது, ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் பொதுமக்களும் இருப்பதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இஸ்ரேலும், ஹிஸ்புல்லாவும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியிருந்தது.

இதனையடுத்து இரு தரப்பினர்களும் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக இந்த கடந்த செப்டம்பர் 17ஆம் திகதி லெபனான் முழுவதும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பேஜர்கள் வெடித்தன.

முக்கியமாக ஹிஸ்புல்லாக்கல் இருக்கும் பகுதிகளில் இந்த குண்டுவெடிப்புகள் நடந்ததுடன், இதனால் பெரும் பரபரப்பும் ஏற்பட்டிருந்தது. மறு நாள் வாக்கி-டாக்கிகள் வெடித்து, நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் நடந்து இரண்டு மாதங்களுக்கு பின்னர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருந்தார். இந்நிலையில், இந்த தாக்குதலின் விபரங்களை சமீபத்தில் மொசாட்டில் இருந்து ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

மைக்கேல் என்று பெயரிடப்பட்ட முகவர்களில் ஒருவர், மொசாட் வாக்கி-டாக்கிகளை இயக்கும் பேட்டரிகளுக்குள் ஒரு வெடிக்கும் சாதனத்தை மறைத்து வைத்திருந்ததாகக் கூறினார்.

இது பொதுவாக அணிந்தவரின் இதயத்திற்கு அருகில் ஒரு ஆடையில் கொண்டு செல்லப்படும் என்று அவர் கூறினார்.

10 வருடங்களுக்கு முன்னர் ஒரு போலி நிறுவனத்திடம் இருந்து 16,000 வாக்கி-டாக்கிகளை “நல்ல விலைக்கு” ஹிஸ்புல்லா அறியாமல் வாங்கியதாக அவர் கூறினார்.

“இஸ்ரேலுக்கு எந்த தொடர்பும் இல்லாத வெளிநாட்டு நிறுவனங்களை உருவாக்குவதற்கான நம்பமுடியாத சாத்தியக்கூறுகள் எங்களிடம் உள்ளன” என்று மைக்கேல் கூறினார்.

“நாங்கள் ஒரு பாசாங்கு உலகத்தை உருவாக்குகிறோம். நாங்கள் ஒரு உலகளாவிய தயாரிப்பு நிறுவனம். நாங்கள் திரைக்கதை எழுதுகிறோம், நாங்கள் இயக்குனர்கள், நாங்கள் தயாரிப்பாளர்கள், நாங்கள் முக்கிய நடிகர்கள், மற்றும் உலகமே எங்கள் மேடை.”

இந்த செயல்பாடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேஜர்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நேரத்தில் ஹிஸ்புல்லா கோல்ட் அப்பல்லோ என்ற தைவானிய நிறுவனத்திடமிருந்து பேஜர்களை வாங்குவதைக் கண்டறிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஒரு போலி நிறுவனத்தை நிறுவி, தாய் நிறுவனத்திற்கு தெரியாமல் வெடிபொருட்களை கொண்ட பேஜர்களில் கோல்ட் அப்பல்லோ பெயரைப் பயன்படுத்தப்பட்டது.

மொசாட் வெடிமருந்துகளை உள்ளே வைத்ததாகவும், அது பயனரை மட்டுமே காயப்படுத்தும் சக்தி வாய்ந்தது என்றும் மைக்கேல் தெரிவித்துள்ளார்.

“குறைந்தபட்ச சேதம் இருப்பதை உறுதி செய்வதற்காக எல்லாவற்றையும் பலமுறை சோதனை செய்கிறோம்,” என்று கேப்ரியல் என்று அழைக்கப்படும் இரண்டாவது முகவர் தெரிவித்துள்ளார்.

மொசாட் குறிப்பாக ஒரு ரிங்டோனைத் தேர்ந்தெடுத்தது, உள்வரும் செய்தியை யாராவது சரிபார்க்கும் அளவுக்கு அவசரமாக ஒலிக்கும்.

பேஜர்களை வாங்குவதற்கும், விளம்பரப் படங்கள் மற்றும் பிரசுரங்களை உருவாக்குவதற்கும், அவற்றை இணையத்தில் பகிர்வதற்கும் ஹிஸ்புல்லாவை ஏமாற்றியதாக கேப்ரியல் கூறினார்.

“அவர்கள் எங்களிடம் வாங்கும் போது, ​​அவர்கள் மொசாட்டில் இருந்து வாங்குகிறார்கள் என்பதற்கான பூஜ்ஜிய துப்பு இல்லை,” என்று அவர் கூறினார். திரைக்குப் பின்னால் எல்லாம் எங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.”

செப்டெம்பர் 2024க்குள் கண்ணி வெடியில் சிக்கிய 5,000 பேஜர்களை ஹிஸ்புல்லா வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிப்புகள் லெபனான் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது, பல்பொருள் அங்காடிகள் உட்பட பேஜர்கள் கொண்டு செல்லப்படும் எல்லா இடங்களிலும் வெடிப்புகள் நடந்தன.

மருத்துவமனைகள் உயிரிழப்புகளால் நிரம்பியதுடன் தாக்குல் காரணமாக பலர் ஊனமுற்றனர். இதன்போது ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்வின் முன்னால் மக்கள் பலியாகியதாக ஒரு “வலுவான தகவல்” இருப்பதாக கேப்ரியல் கூறினார்.

இந்த தாக்குதலில் இருந்து ஹிஸ்புல்லா இன்னும் மீளாத நிலையில், இஸ்ரேல் ஹிஸ்புல்லாவின் இலக்குகளுக்கு எதிராக தீவிர வான்வழித் தாக்குதல்களை தொடுத்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post பேஜர் தாக்குதல்கள் எவ்வாறு நடத்தப்பட்டன? – மொசாட்டின் திட்டம் அம்பலமானது appeared first on Oruvan.com.