Montha Archives - Oruvan.com

மோந்தா புயல் தாக்கியதில் இரு பெண்கள் உயிரிழப்பு
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் மோந்தா புயல் தாக்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

வங்கக் கடலில் உருவாகியிருந்த தாழமுக்கம் நேற்று இரவு சூறாவளியாக கரையைக் கடந்தது.

மோந்தா புயல் ஆந்திராவின் காக்கிநாடா – மசூலிப்பட்டினம் இடையே அந்தர்வேதிபாளையம் என்னும் இடத்தில் கரையைக் கடந்தது.

கரையை கடந்தபோது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது.

இதில் இரண்டு பெண்கள் உயிரிழந்ததுடன், ஐம்பதுக்கு மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சூறாவளி காரணமாக 107 ரயில்கள், 18 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஆயிரத்து இருநூற்றி நான்கிற்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வங்க கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழமுக்கம் வலுப்பெற்று நேற்று காலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மோந்தா’ என பெயரிடப்பட்டிருந்தது.

நேற்று இரவு 8.40 மணியளவில் காக்கிநாடா அருகே அந்தர்வேதிப்பாளையம் என்னும் இடத்தில் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுமார் 8.40 மணிக்கு கரையைக் கடக்கத் தொடங்கிய புயல், கரையை முழுமையாக கடந்து முடிக்க நள்ளிரவு 1.30 மணி வரை எடுத்துக் கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மோந்தா புயல் தாக்கியதில் இரு பெண்கள் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

“மோந்தா” சூறாவளி – இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
நாட்டின் வடகிழக்கில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவான “மோந்தா” சூறாவளி, வடக்கு நோக்கி நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து, வடமேற்கு திசையில் நகரும் என்று வலிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள ஆழமற்ற கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சிலாபம் முதல் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள ஆழமற்ற கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்து சமூகத்தினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் வடகிழக்கில் வங்காள விரிகுடாவில் தற்போது உருவாகி வரும் புயல், இன்று (28) மாலை/இரவு நேரத்தில் கடுமையான சூறாவளி புயலாக வலுவடைந்து இந்தியாவின் ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post “மோந்தா” சூறாவளி – இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை appeared first on Oruvan.com.

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம்!! சூறாவளி குறித்து அவசர எச்சரிக்கை
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக காணப்பட்ட தாழமுக்கமானது (Depression), கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 08km/h எனும் வேகத்தில் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து, இன்றும் அதே பிரதேசத்தில் காணப்படுகிறது.

இது, மட்டக்களப்பில் இருந்து வடகிழக்காக கிட்டத்தட்ட 750km தூரத்திலும், திருகோணமலையில் இருந்து வடகிழக்காக 760km தூரத்திலும்,

யாழ்ப்பாணத்தில் இருந்து கிழக்கு-வடகிழக்காக 830km தூரத்திலும் காணப்படுகின்றது.

இதேபோல், Port Blair (Andaman & Nicobar) இலிருந்து மேற்காக 550km தூரத்திலும், சென்னையில் (Tamil Nadu) இருந்து கிழக்கு-தென்கிழக்காக 850km தூரத்திலும், விசாகப்பட்டிணத்தில் (Andhra Pradesh) இருந்து தெற்கு-தென்கிழக்காக 880km தூரத்திலும்,

காக்கிநாடாவில் (Andhra Pradesh) இருந்து தென்மேற்காக 880km தூரத்திலும், கோபால்புர் (Odisha) இருந்து தெற்கு-தென் கிழக்காக 960km தூரத்திலும் தற்போது காணப்படுகின்றது.

இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (26.10.2025) காலை ஆழ்ந்த தாழமுக்கமாக (Deep Depression)வலுவடைந்து,

அதன் பின்னர் இன்று மாலை தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் அதனை சூழ உள்ள மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக இன்று ஒரு சூறாவளி புயலாக (Cyclonic Storm) வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் பின்னர் இது நாளை மறுதினம் அதாவது எதிர்வரும் 28ஆம் திகதி காலை ஒரு ஆழ்ந்த சூறாவளி புயலாக (Severe Cyclonic Storm) மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(இது ஒரு சூறாவளியாவாக வலுவடையும் பொழுது இதற்கு தாய்லாந்து நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட Montha எனும் பெயர் இதற்கு வழங்கப்படும்.) (Pronounce as Mon-Tha)

அதனைத் தொடர்ந்து இது வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ச்சியாக நகர்ந்து, எதிர்வரும் 28ஆம் திகதி மாலை அல்லது இரவு ஆந்திர பிரதேசம் கரையோரத்தில் Machilipatnam இற்கும் Kalingapatnam இற்கும் இடையில் ஒரு புயலாக ( Severe Cyclonic Storm) ஊடறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் வீசும் காற்றின் வேகமானது 90km முதல் 100km வரையான வேகத்தில் காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

The post வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம்!! சூறாவளி குறித்து அவசர எச்சரிக்கை appeared first on Oruvan.com.

வங்காள விரிகுடா கடல் உருவாகும் மொன்தா சூறாவளி
எதிர் வருகின்ற தீபாவளி தினத்துக்கு அண்மையாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் அந்தமான் தீவு பகுதி அருகில் உருவாக இருக்கின்ற காற்று சுழற்சியானது, எதிர்வரும் 25, 26, 27, 28ஆம் திகதிகளில் (சில சந்தர்ப்பங்களில் சூறா வழியாக) வலுவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது சூறாவளியாக வலுவடையும் சந்தர்ப்பத்தில் இதற்கு Thailand நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட மொன்தா (Montha – Pronounce as Mon-Tha) எனும் பெயர் இதற்கு வழங்கப்படும்.

இது வட தமிழ்நாட்டிற்கும் தெற்கு ஆந்திராவில் பிரதேசத்திற்கு இடையில் ஊடறுத்து செல்லும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதே வேளை இது நகர்ந்து செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற பாதையானது நமது பிரதேசத்தில் இருந்து சற்று தூரமாக காணப்படுவதனால் இந்த சூறாவளியின் காற்று தாக்கங்கள் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது

The post வங்காள விரிகுடா கடல் உருவாகும் மொன்தா சூறாவளி appeared first on Oruvan.com.