Modi Sri Lanka Visit Archives - Oruvan.com

பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கின்றது – தமிழக முதலமைச்சர்
பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றிய போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்சதீவை மீட்க வேண்டும், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்க வேண்டும் என இலங்கை செல்லும் பிரதமர் மோடிக்கு, இது குறித்து அந்நாட்டு அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மான நிறைவேற்றி இருந்தோம்.

ஆனால் இது குறித்து அவர் பேசியதாக பெரிதளவில் செய்தி இல்லை, இது வேதனை அளிக்கிறது.இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசு சில முன்னெடுப்பகளை எடுத்துள்ளது. இலங்கை சிறையில் உள்ள 97 மீனவர்களை விடுவிக்கவும் பெரிய அளவில் நடவடிக்கை இல்லை.

பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது. தமிழர் நலனுக்கு தொடர்பில்லாத பிரதமரின் இலங்கை பயணம். மத்திய அரசு நடவடிக்கை எடுக்க விட்டாலும் தமிழக அரசு மீனவர்களுக்கு துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.

The post பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கின்றது – தமிழக முதலமைச்சர் appeared first on Oruvan.com.

இந்திய மீனவர்கள் 14 பேர் விடுதலை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியப் பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் கடந்த ஐந்தாம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து குறித்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கைது மற்றும் நீண்டகால பிரச்சினைகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாங்கள் மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். இந்த விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் தொடர வேண்டும் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

மீனவர்களை விடுவிப்பது மற்றும் அவர்களின் படகுகளை திருப்பி அனுப்புவது குறித்தும் நாங்கள் வலியுறுத்தினோம்.” என்று இந்தியப் பிரதம் தெரிவித்திருந்தார்.

இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன்பிடிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்து வருகிறது.

இதன்படி, 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து 119 இந்திய மீனவர்களும் 16 மீன்பிடி படகுகளும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி,

இலங்கை அதிகாரிகள் விரைவில் 11 மீனவர்களை விடுவிக்க முடிவு செய்துள்ளதாகவும், வரும் நாட்களில் மேலும் பலரை விடுவிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினை இரு தரப்பினருக்கும் இடையில் கணிசமாக விரிவாக விவாதிக்கப்பட்ட ஒரு விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் இறுதியில் இரு தரப்பினரின் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்பதால், தேவையான ஒத்துழைப்புக்கு மனிதாபிமான மற்றும் பயனுள்ள அணுகுமுறையை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாக அவர் மேலும் கூறினார்.

The post இந்திய மீனவர்கள் 14 பேர் விடுதலை appeared first on Oruvan.com.

மஹவ – ஓமந்தை ரயில் வீதி ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு
மஹவ – ஓமந்தை ரயில் வீதி மற்றும் மஹவ – அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு என்பவற்றை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரால் இன்று (06) திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் இலங்கை விஜயத்துடன் இணைந்ததாக இந்நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் இந்திய பிரதமரும் இந்த திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரால் பெயர் பலகையை திறைநீக்கம் செய்யப்பட்டு ரயில் வீதி மற்றும் சமிக்ஞை கட்டமைப்பு திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் ரயில் புறப்பட்டுச் செல்வதற்கான முதலாவது சமிக்ஞை காண்பிக்கப்பட்டது.

இந்திய Credit Line இன் கீழ் செயற்படுத்தப்படும் மஹவ – ஓமந்தை ரயில் வீதி நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் பெறுமதி 91.27 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

அதேபோல், 14.89 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஸ்தாபிக்கப்பட்ட மஹவ – அநுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயத்தின் பின்னர் இலங்கைக்கு அன்பளிப்பாக கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்,வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிச்ச, வட மத்திய மாகாகண ஆளுநர் வசந்த ஜினதாச ஆகியோரும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்டவர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

The post மஹவ – ஓமந்தை ரயில் வீதி ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு appeared first on Oruvan.com.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அநுராதபுரத்திற்கு வருகை
மூன்று நாள் அரச பயணமாக இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சற்று நேரத்திற்கு முன்னர் அநுராதபுரத்திற்கு சென்றடைந்துள்ளார்.

பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் வருகை தந்துள்ளார். இந்நிலையில் இருவரும்  புனித ஜெய ஸ்ரீ மகா போதியில் வழிபாடுகளில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுஇ

இதைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் அநுராதபுரம் ரயில் நிலையத்தில் புதிய ரயில் சமிக்ஞை அமைப்பையும், புதிதாக மேம்படுத்தப்பட்ட மஹோ-ஓமந்தை ரயில் பாதையையும் திறந்து வைக்கவுள்ளனர்.

இதற்கிடையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோரின் வருகையை முன்னிட்டு இன்று அனுராதபுரத்தில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அநுராதபுரத்திற்கு வருகை appeared first on Oruvan.com.

இலங்கை வருகின்றார் மோடி – நாளை கொழும்பில் விசேட போக்குவரத்து
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை (4ஆம் திகதி) இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரின் வருகையை முன்னிட்டு சிறப்பு போக்குவரத்து திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை மாலை ஆறு மணி முதல் இரவு 10:00 மணி வரை கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் வீதி பல சந்தர்ப்பங்களில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தக் காலகட்டத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருபவர்கள், குறித்த வீதிகள் மூடப்படுவதைக் கருத்தில் கொண்டு தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு மேலும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொடர்ந்து ஐந்தாம் திகதி சுதந்திர சதுக்கம் மற்றும் பத்தரமுல்ல அபேகம பிரதேசம் ஆகிய பகுதிகளில் பல சந்தர்ப்பங்களில் வீதிகள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாரதிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்க, சாரதிகளை மாற்றுப் பாதைகளுக்கு வழிநடத்துமாறு போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகைக்காக இலங்கை பொலிஸாரினால் செயல்படுத்தப்படும் இந்த சிறப்பு போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான ஆதரவை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post இலங்கை வருகின்றார் மோடி – நாளை கொழும்பில் விசேட போக்குவரத்து appeared first on Oruvan.com.

மோடியை பாதுகாப்பது எனது நோக்கம் அல்ல – அமைச்சர் சந்திரசேகர் கருத்து
எமது நோக்கம் இந்தியாவைக் காப்பாற்றுவதோ, மோடியை காப்பாற்றுவதோ அல்ல என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமரின் வருகை குறித்த கேள்விக்கு மேலும் பதிலளித்த அவர்,

மீனவர் பிரச்னை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி இந்தியப் பிரதமருடன்  கலந்துரையாடவுள்ளார்.  இந்தியப் பிரதமரின் வருகை வெறுமனே மீனவப் பிரச்சனைக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல.

இந்தியாவுக்கும் எமக்கும் எந்தவித பகையும் அல்ல. இந்திய மீனவர்களுக்கும் எமக்கும் எந்தவித கோபங்களும் இல்லை.

இந்திய மீனவர்கள் தடைசெய்யப்பட்ட ட்ரோலர்களைப் பயன்படுத்தி உங்களின் கடற்பரப்பில் நுழைய முடியாது. வடக்கில் உள்ள கடற்பரப்பை முற்றாக அளித்து ஒழிக்கும் நடவடிக்கையையே மேற்கொள்கிறார்கள்.

இந்த நடவடிக்கைகள் தொடருமாக இருந்தால் இன்னும் பத்து பதினைந்து வருடங்களில் கடல் பாலைவனமாக மாறுவதை தவிர்க்க முடியாது. இதனை யாரும் அனுமதிக்க முடியாது.

எனது வேலை இந்திய அரசாங்கத்தை பாதுகாப்பதோ, இந்தியத் தூதுவரைப் பாதுகாப்பதோ, இந்தியப் பிரதமரைப் பாதுகாப்பதோ அல்ல. எமது மீனவர்களைப் பாதுகாப்பதே.

அந்த வேலையை சரிவர செய்கின்றேன் என்று நான் நம்புகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

The post மோடியை பாதுகாப்பது எனது நோக்கம் அல்ல – அமைச்சர் சந்திரசேகர் கருத்து appeared first on Oruvan.com.