Minister Harshana Nanayakkara Archives - Oruvan.com

சட்டத்தரணி மற்றும் அவரின் மனைவி கொலை – நால்வர் கைது
அண்மையில் சட்டத்தரணி ஒருவர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷனா நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த சட்டத்தரணி மற்றும் அவரின் மனைவிக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது மிகவும் கொடூரமான செயல் என்றும், அரசாங்கம் எந்தவொரு குடிமகனின் உயிரையும் சமமாக மதிக்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொலை குறித்து 12 பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருவதாகவும், ஆயுதங்கள், வாகனங்கள் மற்றும் ஆதரவை வழங்கிய நான்கு பேர் சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சில எதிர்க்கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டுகளை அமைச்சர் கடுமையாக நிராகரித்தார், மேலும் இந்த அரசாங்கம் பாதாள உலகக் கும்பல்களுக்குப் பின்னால் உள்ளது என்ற கூற்றுகளை தோல்வியடைந்த அரசியல் செயற்பாடுகள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டு நாட்களில் யாராலும் மாயாஜாலம் செய்ய முடியாது என்றாலும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அரசாங்கமும் பொலிஸாரும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

The post சட்டத்தரணி மற்றும் அவரின் மனைவி கொலை – நால்வர் கைது appeared first on Oruvan.com.

சிறைச்சாலைகள் 300 வீதம் நிரம்பி வழிகின்றன – நீதி அமைச்சர் தகவல்
நாட்டின் முழு சிறைச்சாலை அமைப்பிலும் 300 வீதம் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நேற்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சிறையில் 37,761 கைதிகள் இருந்தாலும், அவர்களில் 27,000 பேர் சந்தேக நபர்கள் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போதைப்பொருள் குற்றங்களுக்கான தடுப்புக்காவல்கள் அதிகரிப்பதே சிறைச்சாலை நெரிசலுக்கு முக்கிய காரணம் என்றும், அபராதம் செலுத்துவதால் சிறைச்சாலை நெரிசல் குறையாது என்றும் அமைச்சர் கூறினார்.

போதைப்பொருள் தொடர்பான கைதிகள் சுமார் 27,000 பேர் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இதற்கான தீர்வுகள் தனது அமைச்சகத்திடம் இருப்பதாகவும், போதைப்பொருள் தொடர்பான தடயவியல் அறிக்கைகளை வழங்குவது துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

தடயவியல் துறைக்கு 50 பேரை நியமிக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அந்த 50 பேரைத் தவிர, மேலும் 32 பேரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தடயவியல் அறிக்கைகளை வழங்குவதை விரைவுபடுத்தாமல் பிணை வழங்குவதை விரைவுபடுத்துவது சாத்தியமற்றது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவே, அவற்றை விரைவாக வழங்குவதன் மூலம் சிறைசாலைகளில் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்புச் சிறைகளில் உள்ள சுமார் 27 ஆயிரம் பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியாது என்றும், நீதி அமைச்சின் கீழ் இருந்த மறுவாழ்வு பணியகம், பொதுப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இரு அமைச்சகங்களும் தற்போது இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

சில நாட்களில், அரசாங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு திட்டத்தின் கீழ் சுமார் 700 பேர் கைது செய்யப்படுவதாகவும், அவர்களில் பெரும்பாலோர் தன்னார்வ மறுவாழ்வு மையங்களுக்கு பரிந்துரைக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்த்ராணி கிரியெல்ல நேற்று (20) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

The post சிறைச்சாலைகள் 300 வீதம் நிரம்பி வழிகின்றன – நீதி அமைச்சர் தகவல் appeared first on Oruvan.com.

பயங்கரவாத தடைச்சட்டம்: இன்று வெளியான விசேட அறிவிப்பு
பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்டுவிட்டது. அது தற்போது மொழி பெயர்க்கப்பட்டுவருகின்றது.

அப்பணி முடிந்த பின்னர் மக்களிடம் கருத்து பெறப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும்  தெரிவிக்கையில்,

“பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பரிந்துரை அறிக்கை தமிழ் மற்றும் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

வெகுவிரைவில் புதிய சட்டம் தொடர்பில் மக்கள் கருத்துகள் பெறப்படும். அந்த வகையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” – என்றார்.

The post பயங்கரவாத தடைச்சட்டம்: இன்று வெளியான விசேட அறிவிப்பு appeared first on Oruvan.com.

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யும் பரிந்துரை கையளிப்பு
பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்வது தொடர்பான பரிந்துரை அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் இந்த பரிந்துரை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன

இது தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவர் ரியன்சி அர்சகுலரத்ன குறித்த அறிக்கையை நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்காரவிடம் கையளித்துள்ளார்.

The post பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யும் பரிந்துரை கையளிப்பு appeared first on Oruvan.com.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய திட்டம் இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவிப்பு
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய திட்டம் இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும் என அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், யாரும் போதைப்பொருட்களை இறக்குமதி செய்யவோ அல்லது விநியோகிக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கம்பஹா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் “அழகான வாழ்க்கை, போதைப்பொருள் இல்லாத தேசம்” என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த மாத இறுதிக்குள் போதைப்பொருள் இறக்குமதி மற்றும் விநியோகத்தை நிறுத்துவதற்கான ஒரு தேசிய திட்டம் தொடங்கப்படும். இதற்காக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக்க, மறுவாழ்வு பணியகம், தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு சபை, சமூக சேவைகள் துறை மற்றும் பிற நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளின் ஆதரவு தேவையாகவுள்ளது.

போதைப்பொருள் விநியோகத்தை நிறுத்துவதே எங்கள் முதன்மை நோக்கமாகும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், யாரும் போதைப்பொருளை இறக்குமதி செய்யவோ அல்லது விநியோகிக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. இந்த பேரழிவு நாட்டின் பொருளாதாரத்திலும் குடும்ப நிறுவனத்தின் சரிவிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மூலம் பாதாள உலகம் பெருமளவில் பரவியுள்ளது. போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான முயற்சிகள் தற்போது உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாட்டிற்குள் மெத்தம்பேட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இறக்குமதி செய்வதைத் தடுக்கவும், நாட்டில் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசாங்கம் எடுத்து வருகிறது.

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள மறுவாழ்வு பணியகம் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான முறையான திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இதன்படி, போதைக்கு அடிமையானவர்கள் தானாக முன்வந்து மறுவாழ்வு செயல்முறைக்கு உட்படக்கூடிய பத்து மறுவாழ்வு மையங்கள் நிறுவப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

The post போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய திட்டம் இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவிப்பு appeared first on Oruvan.com.

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளை “இதயத்தால்” கேட்கின்றேன் – நீதி அமைச்சர்
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டுச் செல்வதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்துள்ளார்.

மேலும், தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது அமைச்சில் ‘குரலற்றவர்களுக்கான குரல்’ அமைப்பின் பிரதிநிதிகளுடன் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்துப் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தங்கள் அன்புக்குரியவர்களின் நீண்டகால தடுப்புக்காவல்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு குடும்ப உறுப்பினர்கள் அமைச்சரை வலியுறுத்தினர், அவர்களில் சிலர் 30 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த விடயங்களை தன் காதுகளால் கேட்கவில்லை எனவும் அவர் தன் இதயத்தால் கேட்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளை “இதயத்தால்” கேட்கின்றேன் – நீதி அமைச்சர் appeared first on Oruvan.com.

உங்கள் சகோதரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்காது – நீதி அமைச்சர் எச்சரிக்கை
ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று சில ஊடகங்கள் தங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை அடைவதற்கு ஊடக சுதந்திரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாகவும், இதனை தவிர்க்க வேண்டும் எனவும் அமைச்சர் எச்சரித்தார்.டி

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அமைச்சர்,

சில ஊடகங்கள் தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் தங்கள் ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதை அவதானிக்க முடிந்தது என்று அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் சகோதரருக்குச் சொந்தமான ஊடக நிறுவனத்தை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குறிப்பிட்டார்.

“நீங்கள் என்ன சொன்னாலும், உங்கள் சகோதரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்காது. உங்கள் ஊடகங்கள் மூலம் எங்களுக்கு அல்லது தனிநபர்களுக்கு எதிராக தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் ஜனாதிபதி மன்னிப்பு பெற முடியாது,” என்று அவர் கூறினார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறை மருத்துவமனையில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக எந்த நோயும் இல்லாமல் தங்கியிருந்தார் என்பதையும் நீதி அமைச்சர் வெளிப்படுத்தினார்.

“அனைத்து கைதிகளுக்கும் சமமான சிகிச்சை இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

இறுதியில், சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட 14 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எந்த நோயும் இல்லை என்பதைக் கண்டறிந்தது.

இதனையடுத்து துமிந்த சில்வா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்கள் சட்ட ரீதியாக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படுவார்கள் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

The post உங்கள் சகோதரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்காது – நீதி அமைச்சர் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
தன்னை அவதூறு செய்யும் நோக்கில் அல்லது அரசியலில் தனது நம்பிக்கையை உடைக்கும் நோக்கில், நாடாளுமன்ற இணையத்தளத்திலிருந்து யாரோ தவறான தகவல்களைப் பதித்துள்ளதாக தாம் சந்தேகிப்பதாக , நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார இன்று (16) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார என்ற பெயருக்கு முன்னால் கலாநிதி ஹர்ஷன நாணயக்கார என பிரசுரிக்கப்பட்டதுடன், அமைச்சர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அது சரி செய்யப்பட்டது. இது தொடர்பில் அண்மைய தினங்களாகவே அதிகம் விமர்சிக்கப்பட்டது.

இங்கு, நாடாளுமன்ற தலைமைச் செயலகம் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு, பதிவேற்றியதில் தவறு இருப்பதாகத் தெரிவித்திருந்தது.

நாடாளுமன்றத்தின் தலைமைச் செயலகம், அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு appeared first on Oruvan.com.