metric tons Archives - Oruvan.com

167,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அரிசி நெருக்கடிக்கு தீர்வாக நேற்று நள்ளிரவு நிலவரப்படி  167,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 66,000 மெட்ரிக் தொன் பச்சையரிசி மற்றும் 101,000 மெட்ரிக் தொன் புழுங்கல் அரிசி ஆகியவை உள்ளடங்குகின்றன.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 8,000 மெட்ரிக் தொன் அரிசி இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பதாகவும் சுங்கம் தெரிவித்துள்ளது.

அரிசி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் நேற்று (10) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளமையால் குறித்த அரிசியை விடுவிக்க, அரசாங்கம் அரிசி இறக்குமதிக்கான காலத்தை நீட்டிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட வேண்டியுள்ளது.

உள்நாட்டு சந்தையில் நாட்டரிசி மற்றும் பச்சையரிசி தட்டுப்பாடு ஏற்பட்ட சூழலில், இறக்குமதியாளர்கள் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post 167,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி appeared first on Oruvan.com.

115,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி
இறக்குமதி அனுமதிப்பத்திரமின்றி அரிசி இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கியதன் பின்னர் இன்று (8) மாலை வரையில் 115,000 மெட்றிக் தொன் அரிசி துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

குறித்த 115,000 மெட்றிக் தொன் இறக்குமதி அரிசித் தொகையில் 45,000 மெட்றிக் தொன் பச்சை அரிசி மற்றும் 70,000 மெட்றிக் தொன் நாட்டு அரிசியும் உள்ளடங்குவதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சுங்கத்திற்கு அனுப்பப்படும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியானது விரைவில் விடுவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடு எதிர்நோக்கும் அரிசி நெருக்கடிக்கு தீர்வாக, இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பத்தை தனியார் துறையினருக்கு தற்போதைய அரசாங்கம் டிசம்பர் 4 ஆம் திகதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post 115,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி appeared first on Oruvan.com.

மூன்று இலட்சம் மெட்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பு
எதிர்வரும் காலங்களில் விவசாயிகளிடமிருந்து மூன்று இலட்சம் மெட்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார்.

அரிசி சந்தைப்படுத்தல் சபையானது சுமார் 02 இலட்சம் மெட்றிக் தொன் அரிசியை சேமித்து வைக்கக்கூடிய சேமிப்புத் திறனைக் கொண்டுள்ளதாகவும், உணவுத் திணைக்களம், ச.தொ.ச ஆகிய நிறுவனங்களில் நிலவும் நெல் களஞ்சியங்களையும் பயன்படுத்தி மூன்று இலட்சம் மெட்றிக் தொன் நெல் இலக்கை எட்ட முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் வாரத்தினுள் நெல் கிலோ ஒன்றின் உறுதியான விலையை அறிவிக்க எதிர்ப்பார்ப்பதாக கூறிய நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர், உலர் அரிசி மற்றும் ஈர அரிசியை உரிய தரத்திற்கு ஏற்ப கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

நெல் சந்தைப்படுத்தல் சபையில் ஈரநெல் உலர்த்துவதற்கு தேவையான வசதிகள் இல்லாததால் சிறு மற்றும் நடுத்தர ஆலைகளின் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு ஈரநெல்லை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்தார் .

The post மூன்று இலட்சம் மெட்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பு appeared first on Oruvan.com.

85,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி
இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசி இறக்குமதி செய்ய அனுமதியளித்து இன்று (02) வரையில் 85,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்ட அரிசி துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

குறித்த இறக்குமதி செய்யப்பட்ட 85,000 மெட்றிக் தொன் அரிசியில் 33,000 மெட்றிக் தொன் பச்சை அரிசியும் 52,000 மெட்றிக் தொன் புழுங்கல் அரிசியும் உள்ளடங்குவதாகவும், மேலும் சுங்கத்திற்கு அனுப்பப்பட்ட இறக்குமதி அரிசி விரைவில் விடுவிக்கப்படும் என்றும் அருக்கொட குறிப்பிட்டார்.

இந்த 85,000 மெட்றிக் தொன் அரிசியில் அரச நிறுவனமான அரச வர்த்தக பல்வேறு சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 780 மெற்றிக் தொன் அரிசியும் உள்ளடங்குவதாகவும் அவர் கூறினார்.

நாடு எதிர்நோக்கும் அரிசி நெருக்கடிக்கு தீர்வாக, இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பத்தை தனியார் துறையினருக்கு தற்போதைய அரசாங்கம் கடந்த 4ஆம் திகதி முதல் வழங்கியுள்ளது.

The post 85,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி appeared first on Oruvan.com.

இதுவரை 9,500 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி
இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி இம்மாதம் 4 ஆம் திகதியிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் தனியார் துறைக்கு அனுமதி வழங்கியதை அடுத்து, இன்று செவ்வாய்க்கிழமை (17) பிற்பகல் வரை தனியார் அரிசி இறக்குமதியாளர்கள் 9,500 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், சுங்கப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

9,500 மெற்றிக் தொன் அரிசியில் 3,300 மெற்றிக் தொன் பச்சை அரிசியும் 6,200 மெற்றிக் தொன் நாட்டு அரிசியும் உள்ளடங்குவதாக அருக்கொட தெரிவித்துள்ளார்.

இறக்குமதி உரிமம் இன்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கான காலம் எதிர்வரும் 20ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

The post இதுவரை 9,500 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி appeared first on Oruvan.com.