Merry Christmas Archives - Oruvan.com

கிறிஸ்துமஸ் தினத்தன்று சிறைக் கைதிகளுக்கு சிறப்பு அனுமதி
கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடும் வகையில், கைதிகளுக்கு உணவு மற்றும் இனிப்புகளை கொண்டு வர பார்வையாளர்களை அனுமதிக்க சிறை அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

கைதிகளின் மன உறுதியை உயர்த்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறை ஆணையருமான ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.

இந்த ஏற்பாட்டின் கீழ், தற்போதுள்ள சிறை விதிமுறைகளுக்கு இணங்க, ஒரு கைதிக்கு போதுமான அளவு உணவு அல்லது இனிப்புகளை பார்வையாளர்கள் கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த சிறப்பு நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளுக்கும் பொருந்தும்.

மேலும் கைதிகள் தங்கள் குடும்பத்தினருடனும் நலம் விரும்பிகளுடனும் கிறிஸ்துமஸ் பருவத்தின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள உதவும் நோக்கம் கொண்டது.

வருகைகளின் போது பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு சிறை அதிகாரிகள் பார்வையாளர்களுக்கு நினைவூட்டியுள்ளனர்.

The post கிறிஸ்துமஸ் தினத்தன்று சிறைக் கைதிகளுக்கு சிறப்பு அனுமதி appeared first on Oruvan.com.

பிரதமரின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி!
அன்பு, பரிவு மற்றும் பொறுப்புடன் ஒன்றிணைந்து செயற்பட நாம் அனைவரும் இந்த நத்தார் தினத்தில் உறுதிபூணுவோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“டிசம்பர் மாத பிறப்புடன், கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடத் தயாராவார்கள்.

அமைதியின் செய்தியை ஏந்தியவராக பாலகர் இயேசுவின் பிறப்புச் செய்தி பெத்லகேம் நகரில் இருந்து உலகை வந்தடைந்த அந்த நத்தார் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதே கிறிஸ்தவ மக்களின் எதர்பார்ப்பாகும்.

ஆனால் இந்தக் குளிர் கால டிசம்பர் மாதம் வழக்கமான மகிழ்ச்சி அல்லது உற்சாகத்துடன் விடியவில்லை.

முழு நாட்டையும் உலுக்கிய இயற்கைப் பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான எமது சகோதர சகோதரிகளின் துன்பங்கள் மற்றும் பெருமூச்சுகளுக்கு மத்தியிலேயே அதனை நாம் அடைந்தோம்.

எனினும், நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தத்தை மனதிற் கொண்டு, இயேசுவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, எமது நாட்டு மக்கள், அனைத்து வேறுபாடுகளையும் மறந்து, ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் ஒன்றுபட்டு, பாதிக்கப்பட்ட தங்கள் சக குடிமக்களுக்காக அன்பு, கருணை மற்றும் இயேசு போதித்த ’மற்றவர்களை நேசித்தல்’ என்ற மகத்தான நன்னெறியினை உலகுக்கு எடுத்துக்காட்டியிருக்கின்றனர்.

நாட்டை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் பணிக்காக அனைத்து இனங்களும் ஒரே குறிக்கோளுடனும் கூட்டுப் பொறுப்புடனும் தேசத்தின் எதிர்காலத்திற்காக ஒன்றுபட வேண்டிய ஒரு காலகட்டத்தை நாம் இப்போது அடைந்திருக்கின்றோம்.

உண்மையான மாற்றத்தினை எதிர்பார்த்த இலட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைகள் எந்த வகையிலும் வீண் போகாத வகையில் அவர்கள் எதிர்பார்க்கும் “வளமான நாடு – அழகான வாழ்க்கையை” உருவாக்கும் ஒரே நோக்கத்திற்காக நாம் தொடர்ந்தேர்ச்சையாக பாடுபட்டு வருகிறோம்.

சிறந்ததோர் எதிர்காலத்தை நோக்கிய எம் எல்லோருடையவும் அந்த கனவிற்காக, குடிமக்கள் என்ற வகையில் ஒற்றுமை, அன்பு மற்றும் பரிவுணர்வுடனும் பொறுப்புடனும் ஒன்றிணைந்து செயற்பட நாம் அனைவரும் இந்த நத்தார் தினத்தில் உறுதிபூணுவோம்.

இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் இனிய நத்தார் நல்வாழ்த்துக்கள்” – என்றார்.

The post பிரதமரின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி! appeared first on Oruvan.com.

ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி!
சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழ வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று (25) கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இலங்கையர்களாகிய நாம், ஒரு நாடாக, மிகவும் வேதனையான இயற்கை பேரழிவை எதிர்கொண்ட பிறகு உறுதியுடன் மீண்டுவரும் சந்தர்ப்பத்திலேயே இந்த நத்தார் பண்டிகையை கொண்டாடுகிறோம் என்பது அனைவரும் அறிந்த விடயம்.

அன்பு, அமைதி, மகிழ்ச்சி, பகிர்வு மற்றும் தியாகம் ஆகியவையே நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தங்கள் ஆகும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சகோதர உணர்வுடன் ஆதரவு வழங்குதல் மற்றும் மனிதகுலத்தின் விடுதலைக்கான அர்ப்பணிப்பு என்பன இவற்றில் முதன்மையானதாகும்.

கிறிஸ்தவம் உட்பட அனைத்து மதங்களின் போதனையான, இக்கட்டான காலங்களில் அயல் வீட்டாரை கைவிடாமல் சகோதரத்துவத்துடன் அரவணைக்கும் உன்னதமான மனிதப் பண்பையும், அசைக்க முடியாத உறுதியையும் கடந்த அனர்த்த நிலைமையில் இந்நாட்டு மக்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

அமைதி, நல்லிணக்கம், தியாகம் மற்றும் இரக்க குணம் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க அழைப்பு விடுக்கும் புனித நத்தாரின் அர்த்தத்தை உண்மையில் புரிந்துகொண்டதனாலேயே, ஒருபோதும் பயணிக்க எதிர்பார்க்காத வீதிகளில் கூட தமது சகோதர மக்களுக்காக அத்தியாவசியப் பொருட்களை மக்கள் சுமந்து சென்றார்கள் என்று நான் நம்புகிறேன்.

இருள் நீங்க வேண்டுமானால், ஒளியின் பிரகாசம் பரவ வேண்டும்.

பெத்லகேமில் ஒரு ஏழை தொழுவத்தில் பிறந்து, கல்வாரி மலைப் பகுதியில் மனித சமூகத்தை பாவத்திலிருந்து மீட்க சிலுவையில் தன்னை அர்ப்பணித்த இயேசு, மிகுந்த உறுதியுடனும், நம்பிக்கையுடனும், ஞானத்துடனும் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார் என்று கிறிஸ்தவம் கூறுகிறது.

யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொண்டு, சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்து, அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம், இரக்கம் மற்றும் கருணை ஆகியவற்றால் நிறைந்த இனிய நத்தார் பண்டிகையாக அமைய வேண்டும் என்று அனைவரையும் வாழ்த்துகிறேன்.

The post ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி! appeared first on Oruvan.com.