meet Archives - Oruvan.com

ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்கத் திட்டமிடவில்லையென தகவல்
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) பாகிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்கத் திட்டமிடவில்லையென, ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மோதலை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில், இஸ்லாமாபாத் ஒரு இடைநிலை பாலமாக செயல்பட முடியும் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையெ, நேரடி பேச்சுவார்த்தையை விரும்பும் ஈரானின் நிலைப்பாட்டை முன்னிட்டு, அமெரிக்கா தனது தூதுவர்களான ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) ஆகியோரை இஸ்லாமாபாத்திற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை முன்னதாக அறிவித்திருந்தது.

அப்பாஸ் அராக்சி வெள்ளிக்கிழமை மாலை பாகிஸ்தான் சென்றடைந்தார். ஈரான்–பாகிஸ்தான் இருதரப்பு விவகாரங்களை மீளாய்வு செய்வதே இந்த பயணத்தின் நோக்கம் என பாகிஸ்தானிலுள்ள ஈரானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க மற்றும் ஈரானிய தரப்புகளின் பிரதிநிதிகள் இந்த வார இறுதியில் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தனித்தனியாக சந்திப்புகளை நடத்தவுள்ளதாக ஏபிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சந்திப்புகள் சுமூகமாக இடம்பெற்றால், ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா மற்றும் ஈரான் அதிகாரிகள் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

The post ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்கத் திட்டமிடவில்லையென தகவல் appeared first on Oruvan.com.

எகிப்தில் ஒன்று கூடும் மத்தியஸ்தர்கள் – கடந்த 24 மணித்தியாலங்களில் 70 பலஸ்தீனியர்கள் பலி
காசா மீதான சுமார் இரண்டு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு

முன்னதாக, எகிப்தில் மத்தியஸ்தர்கள் ஒன்று கூடியுள்ளனர்.

காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சில நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்

நெதன்யாகு நம்பிக்கை வெளியிட்டுள்ள நிலையில்,இஸ்ரேலிய இராணுவம் காசா மீது தொடர்ந்து குண்டு தாக்குதல் மேற்கொண்டு

வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 70 பலஸ்தீனியர்கள் இந்த தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையை இடைமறித்ததாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

அங்கு இருந்து ஹவுதிகள் காசாவில் இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதிலடியாக அடிக்கடி தாக்குதல்களை மேற்கொள்ளவதாக

தெரிவிக்கப்படுகிறது.

The post எகிப்தில் ஒன்று கூடும் மத்தியஸ்தர்கள் – கடந்த 24 மணித்தியாலங்களில் 70 பலஸ்தீனியர்கள் பலி appeared first on Oruvan.com.

வின்ட்சர் கோட்டையில் மன்னர் சார்லஸைச் சந்திக்க உள்ள ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் முதல் நாளின் ஒரு பகுதியாக, வின்ட்சர் கோட்டையில் மன்னர் சார்லஸைச் சந்திக்க உள்ளார்.

ட்ரம்ப் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு லண்டனை சென்றடைந்தார்.

இதேவேளை பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் ட்ரம்ப் இடையே

இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

இதன்போது அமெரிக்கா- பிரித்தானியா இடையே தொழில்நுட்ப ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானிய – அமெரிக்க உறவு உலகிலேயே மிகவும் வலிமையானது என ஸ்டார்மரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

The post வின்ட்சர் கோட்டையில் மன்னர் சார்லஸைச் சந்திக்க உள்ள ட்ரம்ப் appeared first on Oruvan.com.

இன்றும் நாளையும் சிறைக் கைதிகளை சந்திக்க வாய்ப்பு
வெசாக் போயா தினத்தை முன்னிட்டு சிறைச்சாலை கைதிகளுக்கு பார்வையாளர்களை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்றும் நாளையும் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைதிகளின் உறவினர்களால் கொண்டு வரப்படும் உணவுப் பொதிகள், இனிப்புகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஆகியவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவிக்கிறது.

இந்த பார்வையாளர்கள் சந்திப்பு நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கமைய இடம்பெறவுள்ளன.

The post இன்றும் நாளையும் சிறைக் கைதிகளை சந்திக்க வாய்ப்பு appeared first on Oruvan.com.

சிறைக் கைதிகளை சந்திக்க வாய்ப்பு
வெசாக் போயா தினத்தை முன்னிட்டு சிறைச்சாலை கைதிகளுக்கு பார்வையாளர்களை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை (12) மற்றும் நாளை மறுதினம் (13) ஆகிய இரு தினங்களும் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைதிகளின் உறவினர்களால் கொண்டு வரப்படும் உணவுப் பொதிகள், இனிப்புகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஆகியவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவிக்கிறது.

இந்த பார்வையாளர்கள் சந்திப்பு நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கமைய இடம்பெறவுள்ளன.

The post சிறைக் கைதிகளை சந்திக்க வாய்ப்பு appeared first on Oruvan.com.

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடவுள்ளது
தேர்தல்கள் ஆணைக்குழு நாளை திங்கட்கிழமை (21.04.2025) கூடவுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மன்னார் பிரதேசத்தில் வெளியிட்ட கருத்தொன்று தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்

குறித்து விசாரணை நடத்துவதற்காக ஆணைக்குழு கூடவுள்ளது.

ஜனாதிபதி கடந்த நாளொன்றில் மன்னார் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு, தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு விசேடமாக நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்தப் முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக ஆணைக்குழு நாளை கூடவுள்ளது.

எவ்வாறாயினும் தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கப்படாது என்று தான் ஒருபோதும் கூறவில்லையென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று சனிக்கிழமை தெரிவித்தார்.

The post தேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடவுள்ளது appeared first on Oruvan.com.

சர்வதேச நாணயநிதிய நிறைவேற்று சபை அடுத்த வாரம் கூடுகிறது
இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான மூன்றாவது மீளாய்வு தொடர்பில் பரிசீலிப்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை எதிர்வரும் 28 ஆம் திகதி கூடவுள்ளது.

நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழான மூன்றாவது மீளாய்வின் பின்னர் சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி பணியாளர்கள் மட்ட இணக்கப்பாட்டை எட்டியது.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை மூன்றாவது மீளாய்வைப் பரிசீலித்து அங்கீகரிக்குமாயின் இலங்கைக்கு நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் நான்காவது தவணையாக மேலும் 333 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post சர்வதேச நாணயநிதிய நிறைவேற்று சபை  அடுத்த வாரம் கூடுகிறது appeared first on Oruvan.com.

சஜித் பிரேமதாச மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் இடையே சந்திப்பு
எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களை ஒருங்கிணைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சித்

தலைவர் சஜித் பிரேமதாச இன்று புதன்கிழமை எதிர்க்கட்சித் தலைவர்களுடனான முக்கிய கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கினார்.

நாடாளுமன்றத்தை வலுப்படுத்தவும், நன்மை பயக்கும் அரசாங்க முயற்சிகளை ஆதரிக்கவும், தீங்கு விளைவிக்கும் கொள்கைகளை

எதிர்ப்பதற்கும் ஒன்றுபட்ட எதிர்க்கட்சியின் அவசியத்தை சஜித் பிரேமதாச இதன்போது வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கூட்டு நடவடிக்கை தொட்பில் ஒருமித்த கருத்தை எட்டுவதே கூட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

நாடாளுமன்றக் குழுக்களின் முக்கியத்துவத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் எடுத்துரைத்து, அதற்கேற்ப எதிர்கால நடவடிக்கைகளை

எடுப்பதற்கும் ஒப்புக்கொண்டார்.

கடந்த மாதம் 29 ஆம் திகதி சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலைத்

தொடர்ந்து இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களான கயந்த கருணாதிலக, ஜே.சி. அலவத்துவல, அஜித் பி பெரேரா, ரிஷாத் பதியுதீன்,

நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, தயாசிறி ஜயசேகர, ரவி கருணாநாயக்க, ஜீவன் தொண்டமான், சிவஞானம் ஸ்ரீதரன், ப.சத்தியலிங்கம்,

ஏ. காரியப்பர், வி. ராதாகிருஷ்ணன், அனுராதா ஜயரத்ன, டி.வி. சானகா, மற்றும் காதர் மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

The post சஜித் பிரேமதாச மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் இடையே சந்திப்பு appeared first on Oruvan.com.

ஜனவரி 7 முதல் மூன்று நாட்கள் கூடவுள்ள நாடாளுமன்றம்
நாடாளுமன்றம் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்படுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கடந்த 31ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி 7ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 9.30 முதல் 10.30 வரை வாய்மொழி பதிலுக்கான கேள்வி நேரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

பின்னர் ​​காலை 10.30 முதல் மாலை 5.30 வரை, அரசு தரப்பில், “2024ம் ஆண்டு மத்திய நிதி நிலை அறிக்கை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

ஜனவரி 8ஆம் திகதிபுதன்கிழமை காலை 9.30 – 10.00 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

பின்னர் 10.00 காலை 10.30 நேரம் வாய்மொழி பதிலுக்கான கேள்வி நேரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, காலை 10.30 முதல் மாலை 5.00 மணி வரை இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் விதிமுறைகள், அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் ஆணை, பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறை சட்டத்தின் கீழ் ஒழுங்குமுறைகள், கேசினோ வணிக (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் விதிமுறைகள், துறைமுகம் மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரி சட்டத்தின் கீழ் உத்தரவு, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்குமுறைகள் குறித்து விவாதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாலை 5.00 மணி முதல் 5.30 வரை சபை ஒத்திவைப்பின் போது கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 9ஆம் திகதி வியாழன் காலை 9.30 – 10.30 வரை வாய்மொழி பதிலுக்கான கேள்வி நேரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

பின்னர் காலை 10.30 முதல் 11.30 வரை இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு சட்டத்தின் கீழ் உத்தரவு, சிறப்பு சரக்கு வரி சட்டத்தின் கீழ் உத்தரவு மற்றும் நலன்புரி சலுகைகள் சட்டத்தின் கீழ் அறிவிப்புகள் விவாதிக்கப்பட உள்ளன.

எதிர்க்கட்சிகள் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம் சபை ஒத்திவைப்பு தொடர்பான விவாதத்தை மாலை 5.30 வரை நடத்துவதற்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

ஜனவரி 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை முழு நாளும், மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அன்றைய தினம் காலை 9.30 முதல் மாலை 5.30 வரையில் உயிரிழந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, எச்.நந்தசேன மற்றும் டியூடர் குணசேகர ஆகியோருக்கு அனுதாபப் பிரேரணைகளுக்கு நேரம் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

The post ஜனவரி 7 முதல் மூன்று நாட்கள் கூடவுள்ள நாடாளுமன்றம் appeared first on Oruvan.com.

நாளை கூடவுள்ள நாடாளுமன்றம்
நாடாளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை (17) கூடவுள்ளது

அதன்படி, தற்போது வெற்றிடமாக உள்ள சபாநாயகர் பதவிக்கு புதிய சபாநாயகர் நாளை தேர்வு செய்யப்படவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து வழமை போன்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

நாளை காலை 9.30 முதல் 10.30 வரையான நேரமானது வாய்வழி பதில்களை எதிர்பார்க்கும் கேள்விகளுக்கு முன்னதாகவே ஒதுக்கப்பட்டிருந்தது.

எனினும் புதிய சபாநாயகர் தெரிவு, அமர்வின் ஆரம்பத்தின் போதே இடம்பெறவுள்ளதால் அதற்கு சிறிது நேரம் எடுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சபாநாயகராக செயற்பட்ட, அசோக ரன்வலவின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதையடுத்து, 10வது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவி தற்போது வெற்றிடமாகவுள்ளது.

சபாநாயகர் பதவிக்கு ஆளுங்கட்சி சார்பில் ஏற்கனவே 3 பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ள நிலையில் புதிய சபாநாயகர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

இதேவேளை, எனினும் எதிர்க்கட்சியில் இருந்து சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரை முன்மொழியவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரை முன்மொழிவது பொருத்தமானதல்ல என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

The post நாளை கூடவுள்ள நாடாளுமன்றம் appeared first on Oruvan.com.