medicines Archives - Oruvan.com

நாட்டில் சில மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சர் தெரிவிப்பு
கடந்த அரசாங்கத்தில் முறையான விலைமனுக்கோரல் முறைக்கு வெளியே மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதால், நாட்டில் தற்போது சில மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஆண்டு விலைமனுக்கோரல் இல்லாததன் விளைவாகவே சில மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு விலைமனுக்கோரப்பட்டிருந்தால், மருந்துகள் சரியாக கிடைத்திருக்கும். அடுத்த ஆண்டுக்கு விலைமனுக்கோரப்பட்டுள்ளது.

தற்போதைய மருந்து பற்றாக்குறையை சமாளிக்க, பிராந்திய கொள்முதல்களுக்காக வைத்தியசாலைகளுக்கு 3,500 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளோம்.

மேலும் அவ்வப்போது சில நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மருந்துகளை நன்கொடையாகப் பெறுகிறோம்.

சில நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிலையை அடைந்துவிட்டோம், எனவே இந்தப் பிரச்சினையை நாம் எதிர்கொள்ள முடியும்.” என கூறியுள்ளார்.

The post நாட்டில் சில மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சர் தெரிவிப்பு appeared first on Oruvan.com.

மருந்துகளின் விலையை குறைப்பதில் சிக்கல்
மருந்துகளின் விலை குறைப்பதற்கான சாத்தியம் காணப்படுகின்ற போதிலும் மருந்து இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்றினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு காரணமாக விலையை குறைக்க முடியாதுள்ளதாக தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தடை உத்தரவு நீக்கப்பட்ட பின்னர், மருந்து விலை குறைப்பு முறைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டு, மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் எதிர்கொண்ட நெருக்கடியிலிருந்து மீண்டு தற்போது ஸ்திரமான நிலையை எட்டியுள்ளது.

விரைவில் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக இந்த அதிகாரசபை மாறும் சாத்தியம் காணப்படுகிறது.

மக்களுக்கு பாதுகாப்பான, தரமான மற்றும் நியாயமான விலையில் மருந்துகளை வழங்குவதே தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் முதன்மை பொறுப்பும் நோக்கமும் ஆகும்.அண்மைக்காலமாக மருந்துகள் தொடர்பான நம்பிக்கை பலவீனமடைந்துள்ளது” என்றார்.

The post மருந்துகளின் விலையை குறைப்பதில் சிக்கல் appeared first on Oruvan.com.

அத்தியாவசிய மருந்துகளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
2025 ஆம் ஆண்டில் வைத்தியசாலைகளில் அத்தியாவசிய தடுப்பூசிகள் உள்ளிட்ட மருந்துகளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான முறையான கொள்முதல் நடைமுறையை பின்பற்றாததன் காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடும் என அதன் செயலாளர் நிபுணர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், முன்னர் வைத்தியசாலைகளில் சுமார் 300 மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்ட போதிலும், தற்போது அதனை குறைக்க முடிந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

The post அத்தியாவசிய மருந்துகளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் appeared first on Oruvan.com.