Medagama Archives - Oruvan.com

மெதகம பகுதியில் மனைவினை சுட்டுக் கொலை செய்த கணவன் – சந்தேகநபர் தப்பியோட்டம்
மெதகம, பலகசரவில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

நபர் ஒருவர் தனது மனைவியை இவ்வாறு சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகின்றது. நீண்ட கால குடும்ப தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலகசர வீதிக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் ஒரு பெண் காயமடைந்து கிடப்பதாக மெதகம பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், குறித்தப் பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர். எனினும்,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அந்தப் பெண் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இறந்தவர் மெதகம, மகந்தவின்னவில் வசிக்கும் 38 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணைகளில், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சடலம் மெதகம  வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்குப் பிறகு சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபரைக் கைது செய்ய மெதகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post மெதகம பகுதியில் மனைவினை சுட்டுக் கொலை செய்த கணவன் – சந்தேகநபர் தப்பியோட்டம் appeared first on Oruvan.com.