Mawanella Archives - Oruvan.com

கொந்தெனிய பகுதியில் மூவர் படுகொலை!
மாவெனெல்ல – கொந்தெனிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பெண்களும், ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 52, 57 மற்றும் 66 வயதுடையவர்கள் எனவும் அவர் கொந்தெனிய பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் வெவ்வேறு வீடுகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 35 வயதான பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 33 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், முதற்கட்ட விசாரணையில் சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மாவனெல்ல பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post கொந்தெனிய பகுதியில் மூவர் படுகொலை! appeared first on Oruvan.com.

மாவனெல்ல கோவில் கந்த பகுதியில் மண்சரிவு – நால்வரை காணவில்லை
கேகாலை மாவட்டத்தில் உள்ள மாவனெல்லாவின் கோவில் கந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக மாவனெல்ல மேலதிக மாவட்ட செயலாளர் திலிப் நிஷாந்த தெரிவித்தார்.

மேலும் இரண்டு பேரை மீட்பதற்கான நடவடிக்கைகளை இராணுவம் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிலவும் சூழ்நிலை காரணமாக இந்தப் பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும், நேற்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த நான்கு பேர் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

The post மாவனெல்ல கோவில் கந்த பகுதியில் மண்சரிவு – நால்வரை காணவில்லை appeared first on Oruvan.com.

கடுகண்ணாவ மண் சரிவு – அறுவர் உயிரிழப்பு, ஏழு பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை
மாவனெல்ல பொலிஸ் பிரிவின் பஹல கடுகண்ணாவையில் வீடு மற்றும் கடை ஒன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்த சம்பவத்தில் காயமடைந்த ஏழு பேரின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்று மாவனெல்ல வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இந்த அனர்த்தம் காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலை உணவுக்காக வந்த ஏழு பேர் உட்பட 10 பேர் மண் சரிவு ஏற்பட்டபோது ஹோட்டலில் இருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் கடையின் உரிமையாளர் அவசர தேவைக்காக வெளியே வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹோட்டலின் உரிமையாளர் குநாதன் சசிதரன் என்ற நாற்பது வயதுடையவர். அவரது தந்தை ராசலிங்கம் கருணாகரன் (66) மற்றும் மனைவி நிஷாந்தனி கருணாகரன் (39) ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த தாயார் சிகிச்சைக்காக மாவனெல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடையின் உரிமையாளர் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் தப்பித்துவிட்டனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க பொலிஸார், இராணுவம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட குழுவினர் 20 மணி நேர நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வைத்தியசாலைகளுக்கு அனுப்ப பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post கடுகண்ணாவ மண் சரிவு – அறுவர் உயிரிழப்பு, ஏழு பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை appeared first on Oruvan.com.

மாவனெல்லையில் மண் சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு
மாவனெல்லையில் மண் மேடு சரிந்து விழுந்ததில் புதைந்திருந்த மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மாவனெல்ல, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் இன்று (29) காலை சுவர் கட்டும் தொழிலாளர்கள் குழு மீது மண் மேடு சரிந்து விழுந்தது.

அதன்படி, மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது மூவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post மாவனெல்லையில் மண் சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

மாவனெல்லயில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது
மாவனெல்லயில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவனெல்லை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் மூவரும் மாவனெல்லை ஹிந்தெனிய பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, 8, 100 போதை மாத்திரைகள், சந்தேகநபர்கள் சென்ற வேன் மற்றும் மோட்டார் சைக்கிள்

என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 22,24 மற்றும் 25 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post மாவனெல்லயில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது appeared first on Oruvan.com.