Mannar Archives - Oruvan.com

பார்வை தடையல்ல – பாக் நீரிணையை நீந்தி கடந்த மாற்றுத்திறனாளி
பார்வை தடையல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான பாக் நீரிணை கடலை ஈஸ்வரி என்ற மாற்றுத்திறனாளி 11 மணி நேரம் 15 நிமிடங்களில் நீந்தி கடந்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த கமலேஷ் விட்டல்ராவ் பாண்டே மற்றும் அருணா கமலேஷ் பாண்டே தம்பதியினரின் மகள் ஈஸ்வரி (17). 11ம் வகுப்பு பயின்று வருகிறார்.

இவர் பிறவியிலேயே முழுமையாக பார்வையற்றவராக இருந்த போதிலும், தனது விடாமுயற்சி, துணிவு மற்றும் திறமையால் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

மேலும், இதற்கு முன்பு கடலில் நீந்தி தனது திறனை நிரூபித்துள்ளார்.

இந்நிலையில் நீந்துவதற்கு பார்வை தடையல்ல என்பதை வலியுறுத்துவதற்காக இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலுமான சுமார் 30 கி.மீ தொலைவிலான பாக் நீரிணை கடலை நீந்துவதற்கு இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தனர்.

அனுமதி கிடைத்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இரண்டு படகில் மற்றும் அவரது பெற்றோர், பயிற்சியாளர், மருத்துவர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினருடன் தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றனர்.

திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் தலைமன்னாரிலிருந்து ஈஸ்வரி நீந்தத் தொடங்கி, பிற்பகல் 03.15 மணியளவில் அரிச்சல்முனை கடற்பகுதிக்கு வந்தடைந்தார்.

தொடர்ந்து 11 மணி , 15 நிமிடங்களில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் வரை நீந்தி உள்ளார். இதன் மூலம் பார்வை திறன் அற்ற மாற்றுத்திறனாளியாக கடலில் அதிக தூரமும், அதிக நேரமும் தனியாக நீந்திய சாதனையை ஈஸ்வரி படைத்துள்ளார்.

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் பாக் நீரிணை கடலை நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளியான ஈஸ்வரிக்கு இந்திய கடலோர காவல் படையினரால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக தலைமன்னார், தனுஷ்கோடி இடையிலான பாக் நீரிணை கடற்பகுதியை 20.03.2022 அன்று மும்பையைச் சேர்ந்த ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி ஜியா ராய் தனது 13 வயதில் நீந்திக் கடந்துள்ளார்.

மேலும், சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான புவி ஆற்றல் என்பவர் கடந்த 05.10.2025 அன்று பாக் நீரிணையை நீந்தி கடந்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பார்வை தடையல்ல – பாக் நீரிணையை நீந்தி கடந்த மாற்றுத்திறனாளி appeared first on Oruvan.com.

இந்தியாவில் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் மன்னர்கள் பயன்படுத்திய நெல்லின அறுவடை விழா யாழில்
இந்தியாவில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் மன்னர்களால் பயன்படுத்தப்பட்ட கறுப்பு கவணி என்ற நெல்லும், மாப்பிள்ளை சம்பா என்ற நெல்லும், கரு இழை என்ற நெல்லும் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் விதைக்கப்பட்டு அறுவடை செய்யப்பட்டு இன்று பொங்கல் விழா முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நெல்லினங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு இவ்வாறு பயிரிடப்பட்டு நேற்றையதினம் அறுவடை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் வயலில் பொங்கல் விழா முன்னெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் பாரம்பரிய முறைப்படி உழப்பட்டு சிறுதானிய பயிரான பயறு விதைக்கப்பட்டது.

பின்னர் அனைவருக்கும் பொங்கல் பரிமாறப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழ். இந்திய துணை தூதரகத்தால் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கலாநிதி சிதம்பரமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ். இந்திய துணை தூதுவர் சாய்முரளி, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கொஸ்தா மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேற்குறித்த நெல்லினங்கள் முதல் தடவையாக இலங்கையில் பயிரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The post இந்தியாவில் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் மன்னர்கள் பயன்படுத்திய நெல்லின அறுவடை விழா யாழில் appeared first on Oruvan.com.

மன்னாரில் கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி பலி
மன்னார் பேசாலை கடலில் நேற்றைய தினம் வியாழன் (15) மாலை நீராடச் சென்ற 4 பேரில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளடங்களாக மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.

தைப் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து குறித்த நான்கு பேரும் கடலில் நீராடுவதற்காக சென்றுள்ளனர்.

நீராடச் சென்றவர்களில் இருவர் உயிரிழந்ததுடன் மற்றைய இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஒருவர் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் காணாமல் போயிருந்த ஒரு இளைஞனின் சடலம் நேற்று வியாழக்கிழமை (15) இரவு கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்கள் 16 முதல் 18 வயதுடைய பேசாலை, வசந்தபுரம், உதயபுரம் கிராமங்களை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post மன்னாரில் கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி பலி appeared first on Oruvan.com.

மன்னார் நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேக நபர் கைது
மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளடங்களாக இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி 16ஆம் திகதி இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்படி கிடைத்த தகவலின் அடிப்படையில், மன்னார் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவும், மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவும் இணைந்து நேற்று தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன.

இதன்போது, மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஒரு விடுதியில் மறைந்திருந்த நிலையில், சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (28) கைது செய்யப்பட்டனர்.

மேலும், அவர்களிடம் இருந்து ஒரு உயிருள்ள கையெறி குண்டும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது சந்தேக நபர்கள் 22 மற்றும் 38 வயதுடைய உயிலங்குளத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மன்னார் நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேக நபர் கைது appeared first on Oruvan.com.

குஞ்சுக்குளம் தேக்கம் பகுதியில் சிக்கித் தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீட்பு
புயல் மற்றும் மல்வத்து ஓயா ஆற்று வெள்ளம் காரணமாக கடந்த மூன்று நாட்களாக குஞ்சுக்குளம் தேக்கம் அணைக்கட்டு அருகில் சிக்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (30) காலை மீட்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தொடர் முயற்சியின் பலனாக இலங்கை விமானப்படையின் உதவியுடன் இன்று காலை கணவன், மனைவி மற்றும் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் உள்ளடங்களாக மூவர் வானூர்தி மூலம் மீட்கப்பட்டனர்.

குறித்த மூவரும் சுமார் இரண்டு மணி நேர போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டு வவுனியா ஜோசப் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து வவுனியா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தின் ஏனைய பல இடங்களில் சிக்கி தவிப்பவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை விமானப்படை முன்னெடுத்து வருகின்ற போதும் சீரற்ற வானிலை காரணமாக மீட்பு பணிகள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குஞ்சுக்குளம் தேக்கம் பகுதியில் சிக்கித் தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீட்பு appeared first on Oruvan.com.

மன்னாரில் இருந்து தமிழகம் நோக்கிச் சென்ற டொல்பின்கள் கூட்டம்
மன்னார் இலுப்பைக்கடவை கடற்பகுதிக்கு கூட்டமாக வருகை தந்த டொல்பின்கள் தற்போது ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி கடலோரப் பகுதிகளுக்கு சென்றுள்ளது.

இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை முதல் குறித்த டொல்பின்கள் கூட்டம் கூட்டமாக கரையோர பகுதிகளில் துள்ளி குதித்து விளையாடி வருகிறது.

இந்த அற்புதமான காட்சி அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.

பொதுவாக அரிதாகவே நிகழும் இத்தகைய நிகழ்வு, இன்று பல டொல்பின்கள் ஒரே நேரத்தில் துள்ளி குதித்து நீந்துவது, காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

இந்த அரிய காட்சியை அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர்.

இத்தகைய ஒரு நிகழ்வு, அதாவது இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான டொல்பின்கள் ஒரே நேரத்தில் கடலோர பகுதிக்கு வந்து துள்ளி குதிப்பது, இதுவே முதல்முறை என்று அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் தெரிவித்தனர்.

இந்த இயற்கை நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

The post மன்னாரில் இருந்து தமிழகம் நோக்கிச் சென்ற டொல்பின்கள் கூட்டம் appeared first on Oruvan.com.

மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நிறைவு
மன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் திட்டம் மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் 105ஆவது நாளான இன்றைய தினம் (15) மாலை நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் இன்றைய தினம் (15) மாலை போராட்டக் களத்தில் விசேட ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தார்.

அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் கருத்து தெரிவிக்கையில்,

“மக்களின் வாழ்விடங்களையும், வாழ்வாதாரத்தையும், இருப்பையும் பாதிப்புக்குள்ளாக்கி வரும் காற்றாலை மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் இன்றைய தினம் 105ஆவது நாளைக் கடக்கின்றது.”

ஜனாதிபதி அவர்களின் அமைச்சரவை அறிவிப்பை நாங்கள் சற்று பரிசோதனைக்கு உட்படுத்தினோம். அதற்கமைவாக 105ஆவது நாளான இன்றைய தினம் சனிக்கிழமை (15) மாலை எமது போராட்டத்தை நிறைவு செய்கிறோம். எமது போராட்டம் எந்த கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டதோ, அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

எங்களுடைய முக்கியமான கோரிக்கை என்னவென்றால், மன்னார் மண்ணிலே கனிம மணல் அகழ்வுக்கான அனைத்து வித அனுமதிகளும் நிறுத்தப்பட வேண்டும். மேலும், மன்னார் தீவில் அகழ்வு செய்யப்படுகின்ற மணல், மண் தீவை விட்டு வெளியில் கொண்டு செல்லப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

கொண்டு செல்லப்படும் மண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். எனவே, அரசாங்கம் கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்காது என்ற நம்பிக்கையுடனே இந்தப் போராட்டத்தை நிறுத்துகிறோம். வெகு விரைவில் அரசாங்கம் கனிம மணல் தொடர்பாக அமைச்சரவை அனுமதியைப் பெற்று தேசிய கொள்கையாக அதனை அறிவிப்பார்கள் என்பதை நம்புகின்றோம்.

எதிர்வரும் காலத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துக் கொள்வதற்காக மக்களை உள்ளடக்கிய ஒரு கண்காணிப்புக் குழுவை அரச அதிபர் தலைமையில் உடனடியாக அமைத்து, குறித்த குழுவினுடைய கண்காணிப்பின் கீழ் அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுப்பது சிறந்ததாக அமையும் என்பதை இப்போராட்ட குழு சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.”

இதைத் தொடர்ந்து அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் தலைமையிலான குழுவினர் மன்னார் மாவட்ட செயலகத்திற்குச் சென்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரனிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.

இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு எஸ்.ஞானப்பிரகாசம் ஆண்டகை கலந்து கொண்டதோடு, போராட்டக் களத்தில் அங்கம் வகித்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

The post மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நிறைவு appeared first on Oruvan.com.

மன்னாரில் போதை பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
20 கிராம் மெத்தம் பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்தமை தொடர்பான வழக்கில், எதிரிக்கு ஆயுள் தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தக் குற்றம், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு, நேற்று புதன்கிழமை (12)மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம். மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவ்வழக்கில், வழக்குத்தொடருநர் தரப்பிற்காக அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் ஆஜராகி, வழக்கினை நெறிப்படுத்தினார். எதிரி தரப்பிற்காக ஜனாதிபதி சட்டத்தரணி யு. ஆர். டி சில்வா ஆஜராகியிருந்தார்.

வழக்கு விசாரணையின் முடிவில், வழக்குத் தொடுநர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில், எதிரி மீதான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதாக மன்றம் ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து, எதிரியை குற்றவாளியாக அறிவித்த நீதிபதி எதிரிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

சமீப காலமாக, மன்னார் பிரதேசத்தில் இடம் பெறும் பாரிய போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் நீண்ட கால கடூழிய சிறை தண்டனைகள் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

The post மன்னாரில் போதை பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு appeared first on Oruvan.com.

இலங்கை கல்வி வெளியீட்டு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சடலமாக மீட்பு
மன்னார்-யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இருந்து இன்று திங்கட்கிழமை (10) காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராகவும், இலங்கை கல்வி வெளியிட்ட பிரிவின் பணிப்பாளராகவும் கடமையாற்றிய திருஞானம் ஜோன் குயின்ரஸ் (வயது-60) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் திங்கட்கிழமை (10) காலை தனது வாகனத்தில் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாட்டில் ஈடுபட்ட நிலையில் உயிரிழந்திருக்கலாம் என தெரிய வருகின்றது.

சடலத்தை கண்ட ஆலய நிர்வாகத்தினர் இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.பிரபானந்தன் சடலத்தை பார்வையிட்டார்.

பின்னர் மேலதிக நடவடிக்கைகளுக்காக சடலத்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

The post இலங்கை கல்வி வெளியீட்டு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சடலமாக மீட்பு appeared first on Oruvan.com.

இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் பொலிஸில் சரண்
தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீண்டும் கடல் வழியாக இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பிய அவர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவர்களை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்களை மன்று பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.

மன்னாரைச் சேர்ந்த இவர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக கடல் வழியாக படகில் சென்று தமிழகத்தில் அடைக்கலம் கோரிய நிலையில் நீண்ட நாட்களாக முகாமில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ் நாட்டில் இருந்து படகில் புறப்பட்டு மன்னார் பேசாலை கடற்பரப்பை வந்தடைந்தவர்கள், தாமாகவே பேசாலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

அதனை அடுத்து அவர்களை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய போது நால்வரையும் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.

The post இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் பொலிஸில் சரண் appeared first on Oruvan.com.