Mannar Wind Farm Project Archives - Oruvan.com

மன்னாரை மீட்டெடுப்பதற்கு எங்களைத் தவிர வேறு யாரும் கிடையாது – அமைச்சர் சந்திரசேகரன்
“போராட்ட காரர்கள் மன்னாரை மீட்டெடுப்போம் என போராட்டத்தை கட்டவிழ்த்து விட்டு இருக்கிறார்கள், மன்னாரை மீட்டெடுப்பதற்கு எங்களைத் தவிர வேறு யாரும் கிடையாது, இந்த போராட்டத்தின் பின் ஓர் அரசியல் காய் நகர்த்தல் இருக்கின்றது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அசராங்கம் முன்னெடுத்துள்ள திட்டத்தினால் மக்களுக்கு பாதிப்பு என நிரூபிக்கப்படுமானால் நாங்களும் கூட உங்களோடு சேர்ந்து போராடுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்” எனவும் அவர் கூறியுள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

மன்னார் காற்றாலை மின் நிலையம் அமைப்பது தொடர்பாக இன்று பாரிய ஒரு பிரச்சனையை ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் அதிகாலை இக்கற்றாலை மின்னிலையம் அமைப்பதற்கான உபகரணங்களை வாகனங்களில் கொண்டு வரும்போது பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதற்கு பொலிஸார் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதாகவும் செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது

இவ் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியுடன் உரிய தரப்புகளுடன் பேசப்பட்டது. தற்போது மின்சார கம்பங்களை நிறுவுவதற்குரிய குழிகள் தோண்டப்பட்டுள்ளது. அவற்றை அமைப்பதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன

எனவே அதனை அமைப்பதற்கு விடுங்கள் என மக்களை நாம் கேட்டுக் கொள்கின்றோம். போராட்டத்தை கட்டவிழ்த்து விட்டவர்களை பார்க்கின்ற போது கடந்த காலத்திலே காற்றாலை மின் நிலையத்தை அமைக்கும் போது அதனை திறந்து வைக்கும் போது நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.

அந்த நிறுவனங்களோடு ஏதோ ஒரு வகையில் கொடுக்கல் வாங்கல்களை செய்தவர்கள் இன்றைக்கு இந்த போராட்டத்தின் பின்னால் இருக்கிறார்கள்

போராட்ட காரர்கள் மன்னாரை மீட்டெடுப்போம் என போராட்டத்தை கட்டவிழ்த்து விட்டு இருக்கிறார்கள். மன்னாரை மீட்டெடுப்பதற்கு எங்களைத் தவிர வேறு யாரும் கிடையாது

மன்னாருக்கு இதன் மூலம் எந்த பாதிப்பும் இல்லை, மன்னாருக்கு அதிகளவான பாதிப்பை ஏற்படுத்துவது கனிய மணல் அகழ்வு அதனை நாம் இப்போது நிறுத்தி இருக்கிறோம்.

மக்களிடம் நாம் கேட்கின்றோம் காற்றாலை மின் நிலையம் அமைக்கும் செயற்பாடு தொடர்பாக உலகம் முழுக்க தேடிப் பார்க்கின்ற போது இலங்கையில் இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட காற்றாலை மின் நிலையங்களை பாருங்கள்.

அந்தப் பிரதேசங்களை பாருங்கள், அந்தக் கடற் பகுதிகளை பாருங்கள், அங்கே மீன் இனங்கள் வரவில்லையா, பறவை இனங்கள் வரவில்லையா, உயிரினங்கள் வரவில்லையா? இயற்கைக்கு எந்தவிதமான மாசு ஏற்பட்டு இருக்கின்றதா? என்பதை தேடி பாருங்கள்.

அவ்வாறு மாசு ஏற்பட்டிருந்தால் அவ்வாறான தாக்கங்கள் ஏற்பட்டிருந்தால் அவை நிரூபிக்கப்படுமானால் நாங்களும் கூட உங்களோடு சேர்ந்து போராடுவதற்கு தயாராக இருக்கிறோம்.

கடந்த காலங்களில் மன்னாரில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கின்ற போது எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் தற்போது எதிர்ப்பை தெரிவிப்பது இவர்களுக்கு பின்னால் ஓர் அரசியல் காய் நகர்த்தல் இருக்கின்றது என்பது நமக்கு புலப்படுகின்றது

மன்னாரில் வாழ்கின்ற மக்களிடம் நாங்கள் அன்பாக கேட்டுக் கொள்கின்றோம் இன்று விரிக்கப்பட்டுள்ள பொறியியல் நீங்கள் சிக்க வேண்டாம், இந்த பொறியானது உங்களுக்கு மட்டுமல்ல எதிர்கால சந்ததிக்கும் வைக்கப்பட்டுள்ள பொறி.

உங்கள் பிரதேசத்துக்கான பொறி உங்கள் பிரதேசத்துக்கு எந்த அபிவிருத்திகளையும் வராமல் தடுக்கின்ற பொறி எனவே மன்னார் மக்கள் இவ்விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விஞ்ஞான ரீதியாகவும் தர்கரீதியாகவும் மக்களை பாதிக்கின்ற எந்த செயல் திட்டத்தையும் நாம் ஒருபோதும் செய்ய மாட்டோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

The post மன்னாரை மீட்டெடுப்பதற்கு எங்களைத் தவிர வேறு யாரும் கிடையாது – அமைச்சர் சந்திரசேகரன் appeared first on Oruvan.com.

மன்னாரில் 15வது நாளாக தொடரும் போராட்டம்
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (17) 15வது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு இன்றைய தினம் ஆதரவு வழங்கும் வகையில் பள்ளிமுனை மற்றும் பெரிய கரிசல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த போராட்டத்தில் இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மன்னாரைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களும் பங்கேற்றனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தலையில் கருப்பு பட்டி அணிந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இன்றைய போராட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்களும் மத தலைவர்களும்,அருட் சகோதரிகளும் ஒன்றிணைந்துள்ளனர்.

காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த போராட்டமானது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

The post மன்னாரில் 15வது நாளாக தொடரும் போராட்டம் appeared first on Oruvan.com.

ஜனாதிபதி சாதகமாக பதில் வழங்க வேண்டும் – மன்னாரில் 11வது நாளாக தொடரும் போராட்டம்
மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி இரண்டாவது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மன்னார் பஜார் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இன்றைய தினம் புதன்கிழமை (13) மாலை ஜனாதிபதிக்கும், மன்னாரில் இருந்து சென்ற குழுவினருக்கும் இடையில் விசேட சந்திப்பு இடம் பெற உள்ள நிலையில், குறித்த பிரச்சனைக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இன்றைய தினம் புதன்கிழமை காலை மன்னாரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் தீவு பகுதியில் இரண்டாவது கட்டமாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (3) பாரிய காற்றாலைகளின் பாகங்கள் வாகனங்களில் மன்னார் நகர பகுதியை நோக்கி எடுத்து வரப்பட்ட நிலையில் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக சுழற்சி முறையில் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, எதிர்ப்பு ஊர்வலமும் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இன்றைய தினம் 11 வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு ஆதரவாக சிறுத்தோப்பு மற்றும் அதனை அண்டிய கிராம மக்களும் வருகை தந்து ஆதரவு வழங்கி உள்ளனர்.

மேலும் யாழ் மறைமாவட்ட குருக்கள் மற்றும் அருட்சகோதரிகள் வருகை தந்து ஆதரவு வழங்கியுள்ளனர்.

குறிப்பாக மன்னார் தீவு பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்ட காற்றாலை மின் கோபுரங்களினால் மீனவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு, காற்றாலைகள் காணப்படும் பகுதிகளில் வசித்து வருகின்ற மக்கள், குறிப்பாக வயோதிபர்கள், சிறுவர்கள், கர்ப்பினித்தாய்மார்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

மன்னார் காற்றாலை அமைப்பு விவகாரம் பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக தற்போது மாறியுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக சம்பந்தப்பட்ட தரப்புகள் இன்று (13) பிற்பகல் 3.30 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து பேச உள்ளன.

போராட்டம் நடத்தும் பொது அமைப்புகளின் ஐந்து பிரதிநிதிகள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிபர், பிரதேச செயலாளர் போன்றோர் இந்தக் கூட்டத்தில் பங்கு பற்றுகின்றனர்.

குறித்த பேச்சு வார்த்தையின் போது போராட்டத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், தமக்கு சாதகமான பதில் ஜனாதிபதியிடம் இருந்து கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மன்னாருக்கு பிரசாரத்துக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மன்னாரில் அந்தப் பிரதேச மக்களின் அனுமதியும் இணக்கமும் இல்லாமல் இத்தகைய திட்டங்கள் முன்னெடுக்கப்படமாட்டாது என்று வாக்குறுதி அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஜனாதிபதி சாதகமாக பதில் வழங்க வேண்டும் – மன்னாரில் 11வது நாளாக தொடரும் போராட்டம் appeared first on Oruvan.com.

மன்னார் பஸார் பகுதியில் பதற்ற நிலை
மன்னார் பஜார் பகுதியில் இன்று அதிகாலை (செவ்வாய்க்கிழமை) பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை மின் திட்டத்திற்கான காற்றாலை கோபுரங்கள் அமைப்பதற்கான பாரிய பொருட்கள் ஏற்றி வரப்பட்ட நிலையில் மக்களின் எதிர்ப்பால் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது

எனினும் குறித்த வாகனம் மன்னார் நீதி மன்ற பிரதான வீதியில் பொலிஸ் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

மக்கள் பொது அமைப்பினர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளடங்களாக பொது மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் இந்த போராட்டத்தில் இணைந்திருக்கின்றார்கள்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிஸார் குறித்த வாகனத்தை மன்னார் நகருக்குள் கொண்டு செல்ல முயற்சித்த போதும் மக்களின் பலத்த எதிர்ப்பினால் இந்த வாகனம் கொண்டு செல்ல முடியவில்லை .

தொடர்ந்தும் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில் குறித்த காற்றாலைக்கான உதிரி பாகங்களை ஏற்றிவந்த பாரிய வாகனம் சுமார் 50க்கும் மேற்பட்ட பொலிஸாரின் பாதுகாப்புடன் மன்னார் நீதிமன்ற பிரதான வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

The post மன்னார் பஸார் பகுதியில் பதற்ற நிலை appeared first on Oruvan.com.