Mannar News Archives - Oruvan.com

மன்னாரில் போதை பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
20 கிராம் மெத்தம் பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்தமை தொடர்பான வழக்கில், எதிரிக்கு ஆயுள் தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தக் குற்றம், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு, நேற்று புதன்கிழமை (12)மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம். மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவ்வழக்கில், வழக்குத்தொடருநர் தரப்பிற்காக அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் ஆஜராகி, வழக்கினை நெறிப்படுத்தினார். எதிரி தரப்பிற்காக ஜனாதிபதி சட்டத்தரணி யு. ஆர். டி சில்வா ஆஜராகியிருந்தார்.

வழக்கு விசாரணையின் முடிவில், வழக்குத் தொடுநர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில், எதிரி மீதான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதாக மன்றம் ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து, எதிரியை குற்றவாளியாக அறிவித்த நீதிபதி எதிரிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

சமீப காலமாக, மன்னார் பிரதேசத்தில் இடம் பெறும் பாரிய போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் நீண்ட கால கடூழிய சிறை தண்டனைகள் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

The post மன்னாரில் போதை பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு appeared first on Oruvan.com.

ஜனாதிபதி சாதகமாக பதில் வழங்க வேண்டும் – மன்னாரில் 11வது நாளாக தொடரும் போராட்டம்
மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி இரண்டாவது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மன்னார் பஜார் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இன்றைய தினம் புதன்கிழமை (13) மாலை ஜனாதிபதிக்கும், மன்னாரில் இருந்து சென்ற குழுவினருக்கும் இடையில் விசேட சந்திப்பு இடம் பெற உள்ள நிலையில், குறித்த பிரச்சனைக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இன்றைய தினம் புதன்கிழமை காலை மன்னாரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் தீவு பகுதியில் இரண்டாவது கட்டமாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (3) பாரிய காற்றாலைகளின் பாகங்கள் வாகனங்களில் மன்னார் நகர பகுதியை நோக்கி எடுத்து வரப்பட்ட நிலையில் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக சுழற்சி முறையில் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, எதிர்ப்பு ஊர்வலமும் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இன்றைய தினம் 11 வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு ஆதரவாக சிறுத்தோப்பு மற்றும் அதனை அண்டிய கிராம மக்களும் வருகை தந்து ஆதரவு வழங்கி உள்ளனர்.

மேலும் யாழ் மறைமாவட்ட குருக்கள் மற்றும் அருட்சகோதரிகள் வருகை தந்து ஆதரவு வழங்கியுள்ளனர்.

குறிப்பாக மன்னார் தீவு பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்ட காற்றாலை மின் கோபுரங்களினால் மீனவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு, காற்றாலைகள் காணப்படும் பகுதிகளில் வசித்து வருகின்ற மக்கள், குறிப்பாக வயோதிபர்கள், சிறுவர்கள், கர்ப்பினித்தாய்மார்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

மன்னார் காற்றாலை அமைப்பு விவகாரம் பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக தற்போது மாறியுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக சம்பந்தப்பட்ட தரப்புகள் இன்று (13) பிற்பகல் 3.30 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து பேச உள்ளன.

போராட்டம் நடத்தும் பொது அமைப்புகளின் ஐந்து பிரதிநிதிகள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிபர், பிரதேச செயலாளர் போன்றோர் இந்தக் கூட்டத்தில் பங்கு பற்றுகின்றனர்.

குறித்த பேச்சு வார்த்தையின் போது போராட்டத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், தமக்கு சாதகமான பதில் ஜனாதிபதியிடம் இருந்து கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மன்னாருக்கு பிரசாரத்துக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மன்னாரில் அந்தப் பிரதேச மக்களின் அனுமதியும் இணக்கமும் இல்லாமல் இத்தகைய திட்டங்கள் முன்னெடுக்கப்படமாட்டாது என்று வாக்குறுதி அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஜனாதிபதி சாதகமாக பதில் வழங்க வேண்டும் – மன்னாரில் 11வது நாளாக தொடரும் போராட்டம் appeared first on Oruvan.com.

‘எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதியான உங்கள் கணவர்’!! பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எழுதிய கடிதத்தால் சர்ச்சை
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் அண்மையில் மாவட்டத்தில் சுகாதார உத்தியோகத்தர் ஒருவருக்கு எழுதிய கடிதம் பரவலாக எதிர்ப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கடிதமானது குடும்ப நல சுகாதார அலுவலரான இன்பராசா விஜயலட்சுமி என்பவருக்கு எதிராக எழுதப்பட்டுள்ளது.

அதில், அவரது கணவர் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியாக உள்ள நிலையில் அவரை குறித்த கடிதத்தில் இணைத்து ‘எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதி’ என குறிப்பிட்டு கடிதத்தை எழுதி அனுப்பியுள்ளார்.

அநத் கடிதத்தில் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதி என குறிப்பிட்டுள்ளமை விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எதிராக அவருடைய பணியாளர்கள் தொடர்ந்தும் பல்வேறு குற்றச் சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

பலரை பலி வாங்கும் நோக்குடன் அவர்களுக்கு இடமாற்றம் வழங்குதல், மாதாந்த சம்பளத்தை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இவரால் சுமார் 10க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பணியாளர்கள் வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளிநாடு சென்றுள்ளமையினால் அவர் நாட்டிற்கு திரும்பிய நிலையில் அவருக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வட மாகாண ஆளுநர் தெரிவித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post ‘எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதியான உங்கள் கணவர்’!! பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எழுதிய கடிதத்தால் சர்ச்சை appeared first on Oruvan.com.

சிந்துஜா,வேனுஜா ஆகியோரின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம் – பல மாதங்களுக்கு பின்னர் மூவர் கைது
மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற மகப்பேற்று சிகிச்சைகளின் போது மரணமடைந்த சிந்துஜா மற்றும் பட்டி தோட்டத்தை சேர்ந்த வேணுஜா மற்றும் அவரின் சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி இடம்பெற்ற போராட்டத்தில் பொதுமக்கள் சார்பாக முன்னின்று போராடியவர்கள் மூவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(8) மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சட்ட விரோதமாக பொது மக்களை ஒன்று கூட்டியமை மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியமை உள்ளிட்ட பல பிரிவுகளில் சம்பந்தப்பட்ட மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக பொது அழைப்பின் பெயரில் ஒன்று கூடிய பொதுமக்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் இடம் பெறும் பல்வேறு சீர்கேடுகளுக்கு எதிராக அமைதியான போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் போராட்டக்காரர்களின் கோரிக்கை தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகளை அதிகாரிகளால் வழங்கப்பட்ட போதிலும் அதை ஏற்க மறுத்த சில போராட்டக்காரர்களால் போராட்டம் வன்முறையாக மாற்றம் அடைந்தது.

இந்த நிலையில் வீதிகளை மறித்தும் டயர்களை கொளுத்தியும் போராட்டகாரர்கள் சிலர் தங்கள் எதிர்ப்புக்களை தெரிவித்த நிலை போராட்டத்தில் சில விசமிகள் புகுந்து பொலிஸார் மீதும் வைத்தியசாலை மீதும் கல் வீச்சுக்களை மேற்கொண்டு போராட்டத்தை திசை திருப்பி இருந்தனர்.

இவ்வாறான நிலையில் போராட்டம் இறுதியில் சுமுகமான நிலையில் நிறைவடைந்த போதிலும் மக்கள் சார்பாக போராட்டத்தில் கலந்து கொண்ட மூவரை பல மாதங்கள் கழித்து மன்னார் பொலிஸார் இன்றைய தினம் (8) கைது செய்துள்ளனர்.

சிந்துஜா மற்றும் வேணுஜா வின் மரணம் தொடர்பில் விசாரணைகள் இதுவரை முடிவுறுத் தப்படாத நிலையில் அவர்களுக்கு, அவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்காத நிலையில் அவர்கள் சார்பாக போராடிய மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது ,

The post சிந்துஜா,வேனுஜா ஆகியோரின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம் – பல மாதங்களுக்கு பின்னர் மூவர் கைது appeared first on Oruvan.com.

மன்னாரில் வைத்தியர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம்
மன்னார் பேசாலை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ஈற்றன் பீரிஸ் தனக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கும் பழிவாங்கல் நடவடிக்கைக்கும் நீதி கோரி உண்ணாவிரத போராட்டம் ஒன்றை நேற்று வியாழக்கிழமை (5) ஆரம்பித்துள்ளார்.

குறித்த உண்ணாவிரத போராட்டம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த ஏழு வருடங்களாக மன்னார் பேசாலை வைத்தியசாலையில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வருகின்றேன். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் தொடர்ச்சியாகப் பழி வாங்கப்பட்டு வருகின்றேன்.

அவர் என்னை ஒரு வைத்தியராக மதிப்பதில்லை. நான் அவரை விட 10 வருடங்களுக்கு மூத்தவன். எனினும் அவரது படிப்புக்கு மரியாதை கொடுத்து நடந்து கொண்டேன்.

இந்த வைத்தியசாலையில் பணிபுரியும் சில பணியாளர்களை என்னை வேவு பார்ப்பதற்கு அவர் பயன்படுத்துகின்றார். அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு என்னை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்.

அதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். இங்கு வேலை செய்வது மிகவும் சிரமமாக உள்ளது. இந்த வைத்தியசாலையில் நான் நிர்வாகத்தை மாத்திரம் அல்ல நோயாளிகளையும் பார்வையிட்டு வருகின்றேன்.

இந்த வைத்தியசாலையில் பணிபுரியும் எனக்குத்தான் தெரியும் நோயாளிகளை எவ்வாறு பார்த்துக் கொள்வது பணியாளர்களை எவ்வாறு நடத்துவது என்பது.

ஆனால் அவர் மன்னார் வைத்தியசாலையில் இருந்து கொண்டு இங்கே இந்த வைத்தியசாலையை நடத்துகின்றார். இது மிகவும் அநீதியான ஒரு செயல். அவரது மேலதிகாரிகள் இவரை இவ்வாறு நடத்தினால் இவருக்கு எப்படி இருக்கும்?

அவரும் வைத்தியர், நானும் வைத்தியர். அவர் என்னை மதிப்பதே இல்லை. அவரது இந்த நடவடிக்கையினால், என்னால் தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை.

என் மீது சில பழிகளும் அவதூறுகளும் சுமத்தப்பட்டது. இருந்தபோதிலும் அது பொய் என்று நிரூபிக்கப்பட்டது.

மின்சாரக் கட்டணங்கள் இவ்வைத்தியசாலையில் உயர்ந்து வருவதாக வைத்திய அதிகாரி எனக்கு சுட்டிக் காட்டி அதைத் தொடர்ந்து தான் இது தொடர்பாக கவனம் செலுத்தி பணியாளர்களிடம் சுட்டிக்காட்டி தேவையற்ற முறையில் ஏசி பாவனையில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்பட்டு அதை இந்த வைத்திய அதிகாரிக்கு தெரியப்படுத்திய போதிலும் அது தொடர்பில் கவனம் செலுத்தாது என் மீதே இந்த அதிகாரி நடவடிக்கை எடுக்க முற்பட்டுள்ளார்.

கடந்த (11.05.2025) எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் சடுதியானதும் நியாயமற்றதுமான மின் பாவனை அதிகரிப்பு ஏற்படும் பட்சத்தில் அதற்கான மேலதிக கட்டணம் பொறுப்பதிகாரி இடமே அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நான் எவ்வாறு தொடர்ந்து வேலை செய்வது. நான் ஓய்வூதியம் பெறுவதா? அல்லது வேறு வைத்தியசாலைக்கு மாறிச் செல்வதா? எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

எனவே இந்த விடயத்தில் எனக்கு நியாயம் வழங்குமாறு மன்னார் மாவட்ட செயலாளர், வடமாகாண ஆளுநர், சுகாதார பணிப்பாளர் வடமாகாணம், மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இணைந்து நியாயம் கோரி போராடும் எனக்கு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

The post மன்னாரில் வைத்தியர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம் appeared first on Oruvan.com.

மன்னாரில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாள் நினைவு அனுஷ்டிப்பு
தமிழினப் படுகொலையின் (மே-18) 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் நினைவு கூறப்பட்டு வரும் நிலையில் மன்னாரிலும் நினைவு கூறப்பட்டது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாள் இன்றைய தினம் (18) நினைவு கூறப்பட்டது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் பஜார் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை(18) காலை 9 மணியளவில் குறித்த நினைவேந்தல் இடம் பெற்றது.

இதன் போது இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி பகிரப்பட்டது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் உள்ளடங்களாக சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

The post மன்னாரில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாள் நினைவு அனுஷ்டிப்பு appeared first on Oruvan.com.

மன்னாரில் டிப்பர் வாகனம் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு – இருவர் கைது
மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை கடமையில் ஈடுபட்டிருந்த அடம்பன் பொலிஸார் இடை மறித்த போது  சமிக்கை கட்டமைப்பை மீறி  பொலிஸார் மீது வாகனத்தால் மோதிச் செல்ல முற்பட்ட போது குறித்த டிப்பர் வாகனத்தை நோக்கி பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சுட்டு சம்பவத்தை தொடர்ந்து போது குறித்த டிப்பர் வாகனம் நிறுத்தப்பட்டது.

இதன் போது குறித்த டிப்பர் வாகனத்தில் சட்ட விரோதமான முறையில் ஏற்றிச் செல்லப்பட்ட மண் மற்றும் உபகரணங்கள் காணப்பட்டதோடு அவை மீட்கப்பட்டதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் அடம்பன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு நபர்கள் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், கைது செய்யப்பட்ட நபர்கள் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுளள்தோடு, மீட்கப்பட்ட பொருட்களும் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)

The post மன்னாரில் டிப்பர் வாகனம் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு – இருவர் கைது appeared first on Oruvan.com.

சிறப்பாக இடம்பெற்று வரும் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி நிகழ்வுகள்
வரலாற்றுப் புகழ் பெற்ற நாயன்மார்கள் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்று வருகின்றJ.

இந்நிலையில், உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தி வருவதுடன் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை மாத்திரம் இன்றி உலகம் முழுவதும் இருந்து வருகை தந்த சிவ பக்தர்கள் மன்னார் பாலாவியில் நீராடி பாலாவி தீர்த்த நீரை திருக்கேதீஸ்வர ஆலயத்தில் உள்ள மகா சிவலிங்கத்திற்கு நீர் வார்த்து, நெய் விளக்கு ஏற்றி வேண்டுதல்கள் மற்றும் நேர்த்திக்கடனை இன்று (26) அதிகாலை தொடக்கம் செலுத்தி வருகின்றனர்.

மேலும் மகா சிவராத்திரி நிகழ்வையொட்டி விசேட போக்குவரத்து சேவைகள், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் சிவராத்திரி நிகழ்வுகளை முன்னிட்டு திருக்கேதீஸ்வர திருப்பணி சபையின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட இந்து கலாசார நிகழ்வுகள் அறநெறி சொற்பொழிவு நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

அதே நேரம் இம்முறை சிவராத்திரி நிகழ்வுக்கு என விசேட பொலிஸ், இராணுவ அதிரடி படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து சுமார் எட்டு இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)

The post சிறப்பாக இடம்பெற்று வரும் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி நிகழ்வுகள் appeared first on Oruvan.com.

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பணிகளை பொறுப்பேற்றார்
மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்ட அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை மடு திருத்தலத்தில் வைத்து ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்ட நிலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (23) மன்னார் மறைமாவட்ட ஆயராக பணி பொறுப்பேற்றுக் கொண்டார்.

நேற்று (23) மாலை மடு திருத்தலத்தில் இருந்து மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை மாலை 4 மணியளவில் மன்னார் தள்ளாடி அந்தோனியார் ஆலய பகுதியை வந்தடைந்தார்.

அதனைத் தொடர்ந்து ஆயர் அவர்களை மன்னார் பிரதான பாலத்தடி வரை மோட்டார் சைக்கிள் பவனியுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட வாகனத்தில் ஏற்றப்பட்டு அங்கிருந்து பவனியாக மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்திற்கு இன்னிசை வாத்தியங்களுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் பணிப் பொறுப்பு ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு, மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் பி.கிறிஸ்து நாயகம் அடிகளாரினால் திருத்தூது மடல் வாசிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட ஆயராக கடந்த ஏழு வருடங்களாக பணியாற்றிய மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களினால் புதிய ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையிடம் புனித செபஸ்தியார் பேராலயத்தின் திறவுகோல் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து புனித செபஸ்தியார் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை சுரேந்திரன் றெவல் அடிகளாரினால் புதிய ஆயருக்கு நற்கருணை பேழைக்கான திறவு கோள் வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஆயர் பேரருட்திரு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினால் மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயரிடம் செங்கோல் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மன்னார் மறைமாவட்டத்தின் நான்காவது ஆயரான மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதன் போது குருக்கள், துறவியர்கள், அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள் உள்ளடங்களாக பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)

The post மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பணிகளை பொறுப்பேற்றார் appeared first on Oruvan.com.

மன்னார் பொது வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணர் திடீரென பணியில் இருந்து விலகல்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய சிறுவர்களுக்கான விசேட வைத்திய நிபுணர் எவ்வித முன் அறிவித்தல் இன்றி பணியில் இருந்து விலகி உள்ளமையினால் தமது குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் உரிய முறையில் வைத்திய சேவையினை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான நோயாளர் விடுதி இலக்கம்-07 மற்றும் பிரசவிக்கின்ற குழந்தைகளுக்கான விசேட சிறுபிள்ளை வைத்திய நிபுணர் கடமையாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த வைத்திய நிபுணர் எவ்வித முன் அறிவித்தல் இன்றி பணியில் இருந்து விலகியுள்ளார்.

இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான நோயாளர் விடுதி இலக்கம் 7 இல் அனுமதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான சிகிச்சைகள் தாமதம் அடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட தமது குழந்தைகளை யாழ்ப்பாணம் அல்லது வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே இவ் விடயத்தில் வடமாகாண ஆளுநர் உடனடியாக தலையிட்டு குறித்த வைத்திய நிபுணருக்கு பதிலாக மாற்று ஒருவரை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஆஸாத் எம்.ஹனிபா வை தொடர்பு கொண்டு வினவிய போது,

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த சிறு பிள்ளைகளுக்கான வைத்திய நிபுணர் திடீரென கடமைக்கு சமூகமளிக்காது இருந்தார்.

அவர் தொடர்ச்சியாக கடமைக்கு வருகை தராத நிலையில் அவருடன் தொடர்பை ஏற்படுத்தினோம்.

எனினும் தான் வெளிநாடு செல்ல உள்ளதாகவும், இதனால் கடமைக்கு சமூகமளிக்கவில்லை என தொலைபேசி வாட்சப் ஊடாக கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக நாங்கள் உறிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

இந்த நிலையில் தற்காலிகமாக வவுனியாவில் இருந்து ஒரு வைத்திய நிபுணரை கடமைக்கு அமர்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)

The post மன்னார் பொது வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணர் திடீரென பணியில் இருந்து விலகல் appeared first on Oruvan.com.