Manmohan Archives - Oruvan.com

மறைந்த மன்மோகன் சிங்கிற்கு மஹிந்த ராஜபக்ச அஞ்சலி
மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு, முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தனது 92 ஆவது வயதில்

கடந்த 26 ஆம் திகதி காலமானார்.

திடீர் உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் வயது மூப்பு, உடல்நலக் குறைவு, மூச்சு திணறல் ஆகிய காரணங்களால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

The post மறைந்த மன்மோகன் சிங்கிற்கு மஹிந்த ராஜபக்ச அஞ்சலி appeared first on Oruvan.com.

கலாநிதி மன்மோகன் சிங் மறைவிற்கு நாமல் அஞ்சலி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, முன்னாள் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு இன்று சனிக்கிழமை புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இலங்கை சார்பாக தனது இரங்கலைத் தெரிவித்த நாமல் ராஜபக்ச இந்திய-இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதில் கலாநிதி மன்மோகன் சிங்கின் பங்களிப்பை எடுத்துரைத்தார்.

இதனிடையே, மன்மோகன் சிங்குக்கு ஜனாதிபதி உட்பட நாட்டின் பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தனது 92 ஆவது வயதில் நேற்று முன்தினம் காலமானார்.

திடீர் உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் வயது மூப்பு, உடல்நல குறைவு, மூச்சு திணறல் ஆகிய காரணங்களால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அஞ்சலிக்கு பின் மன்மோகன் சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை தொடர்ந்து தேசிய அளவில் 07 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

The post கலாநிதி மன்மோகன் சிங் மறைவிற்கு நாமல் அஞ்சலி appeared first on Oruvan.com.

மன்மோகன் சிங் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

எனது சார்பிலும், இலங்கை மக்கள் சார்பிலும் இந்தியக் குடியரசுக்கும், கலாநிதி மன்மோகன் சிங் குடும்பத்தாருக்கும், உலகெங்கிலும் அவர் மீதான பற்றை வௌிப்படுத்தும் எண்ணற்றவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன் என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது,

தொலைநோக்கு கொண்ட தலைவரான கலாநிதி மன்மோகன் சிங்கின் வழிகாட்டல் இந்தியாவிற்குள் மாத்திரம் மட்டுப்படவில்லை. 2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக அவர் செயல்படுத்திய கல்வி உரிமைச் சட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய கிராமிய  வேலைவாய்ப்பு  செயல்திட்டம் போன்ற மாற்றத்துக்கான திட்டங்கள் என்பன சமத்துவம், தலையீடு தொடர்பிலான அவரது உறுதியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன.

சர்வதேச ஒத்துழைப்புக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய காலாநிதி மன்மோகன் சிங்,  நீண்டகால கூட்டுறவு கூட்டணிகளை ஆரம்பிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியதுடன் BRICS போன்ற அமைப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.

இந்தியா, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்கள் மூலம் அவரது சிறந்த இராஜதந்திரம் தெரிகிறது. அவரது தன்னடக்கம், அறிவாற்றல் மற்றும் அரச சேவைக்கான அர்ப்பணிப்பு ஆகியன நிச்சயமாக எதிர்கால சந்ததியினருக்கு ஒரு நிலையான முன்மாதிரியாகவும் ஊக்குவிப்பாகவும் அமையும். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்” என தெரிவித்துள்ளார்.

The post மன்மோகன் சிங்  மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்  appeared first on Oruvan.com.

மன்மோகன் சிங் மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள் இரங்கல்
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தனது 92 ஆவது வயதில்

நேற்றிரவு காலமான நிலையில் இலங்கை அரசியல் பிரமுகர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கலாநிதி மன்மோகன் சிங் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவராக இருந்துள்ளதாக தெரிவித்த எதிர்கட்சித் தலைவர்

சஜித் பிரேமதாச அவருடைய பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவை மாற்றியமைத்ததுடன் பிராந்தியத்தை ஊக்கப்படுத்தியது என தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இதனைப் பதிவிட்டுள்ளார். அவரது இரங்கலில்,

“ கலாநிதி மன்மோகன் சிங்கின் மறைவு மிகவும் கவலையளிக்கிறது. முன்னேற்றம் மற்றும் நேர்மைக்கான அவரது அர்ப்பணிப்பு எமக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.

இந்த இழப்பின் போது எங்களின் எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் இந்திய மக்களுடனும் உள்ளன” என பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, மன்மோகன் சிங் ஒரு தொலைநோக்கு பொருளாதார நிபுணர் என்றும், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலின் சிற்பி என்றும், அவரது பங்களிப்புகள் இந்தியாவிற்கு ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் பதிவிட்டிருப்பதாவது,

“முன்னாள் இந்தியப் பிரதமர் டொக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு பெரும் கவலையில் ஆழ்த்துகிறது.

அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இந்திய மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் சிறந்து விளங்கிய கலாநிதி மன்மோகன் சிங் நேர்மையாகச் செயற்பட்டார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.

“ இந்திய மக்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். நவீன இந்தியாவின் பொருளாதார மறுமலர்ச்சியின் சிற்பியான ஒரு சிறந்த மனிதர், இலங்கையில் தமிழ்த் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உண்மையாக உழைத்தவர் ” என சுமந்திரனும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங் சுமார் 33 ஆண்டுகள் மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார்.

ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தியைத் தொடர்ந்து இந்திய வரலாற்றில் மூன்றாவது மிக நீண்டகாலம் பிரதமர் பதவியில் இருந்தவர் என்ற பெருமையும் அவரையே சேரும்.

The post மன்மோகன் சிங் மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள் இரங்கல் appeared first on Oruvan.com.