Magnus Carlsen Archives - Oruvan.com

கார்ல்சனை மீண்டும் தோற்கடித்து பிரக்ஞானந்தா சாதனை
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட் ஸ்லாம் (ரேபிட்) போட்டியில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் முதல்நிலை செஸ் வீரர் மாக்னஸ் கார்ல்சனை நான்காவது சுற்றில் தோற்கடித்து சாதனை படைத்தார்.

வெள்ளை காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 39 நகர்வுகளில் இந்த அற்புதமான வெற்றியைப் பதிவு செய்தார். இந்த வெற்றியின் மூலம், அவர் தனது குழுவில் (வெள்ளை குழு) 4.5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.

இந்த முக்கியமான வெற்றி, கார்ல்சனை குழு நிலை சுற்றில் இருந்து வெளியேற்ற உதவியதுடன், பிரக்ஞானந்தாவை காலிறுதிக்கு முன்னேற்றியது. இந்த சாதனை, இந்திய செஸ் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த 19 வயது இளம் வீரரான பிரக்ஞானந்தா, 16 வயதில் உலகின் நம்பர் முதல் நிலை வீரரான கார்ல்சனை 2022இல் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் தொடரில் முதன்முறையாக வீழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

அப்போது, 39 நகர்வுகளில் கார்ல்சனை தோற்கடித்து, உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவராக பிரக்ஞானந்தா புகழ் பெற்றார். இந்த முறையும், லாஸ் வேகாஸில் நடந்த இந்தப் போட்டியில், அவரது தந்திரமான நகர்வுகள் மற்றும் கூர்மையான மூலோபாயம் கார்ல்சனை திணறச் செய்தது.

இந்தப் போட்டியில், கார்ல்சனின் வழக்கமான ஆதிக்கம் பிரக்ஞானந்தாவின் முன் தோல்வியடைந்தது. கார்ல்சன், செஸ் உலகில் ஒரு ஜாம்பவானாகக் கருதப்படுகிறார், ஏனெனில் அவர் ஐந்து முறை கிளாசிக்கல் செஸ் உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர்.

ஆனால், பிரக்ஞானந்தாவின் சாமர்த்தியமான ஆட்டம், கார்ல்சனின் தவறுகளைப் பயன்படுத்தி, ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

இந்த வெற்றி குறித்து, முன்னாள் உலக சாம்பியன் கேரி காஸ்பரோவ், “பிரக்ஞானந்தாவின் ஆட்டம், இளம் வீரர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைகிறது,” என்று பாராட்டினார்.

இந்தியாவில் செஸ் விளையாட்டு, விஸ்வநாதன் ஆனந்த் மூலம் பிரபலமடைந்தது, இப்போது பிரக்ஞானந்தா, குகேஷ் போன்ற இளம் வீரர்கள் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றனர் எனவும் பாராட்டி பேசியுள்ளார்.

இந்த போட்டியில் வெற்றிபெற்ற பிரக்ஞானந்தாவுக்கு பலரும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

The post கார்ல்சனை மீண்டும் தோற்கடித்து பிரக்ஞானந்தா சாதனை appeared first on Oruvan.com.

மேக்னஸ் கார்ல்ஸனை மீண்டும் தோற்கடித்து குகேஷ் அசத்தல்
சதுரங்கப் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்ஸனை தமிழ்நாட்டு வீரரும் நடப்பு உலக சாம்பியனுமான குகேஷ் மீண்டும் தோற்கடித்து அசத்தியுள்ளார்.

குரோஷியாவில் உள்ள ஜாக்ரெப் நகரில் நடைபெற்று வரும் ரேபிட் செஸ் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் சார்பில் தமிழ்நாட்டு வீரர்களான பிரக்னானந்தா, குகேஷ் விளையாடி வருகின்றனர்.

இப்போட்டியில் சிறப்பாக ஆடி வரும் குகேஷ், நான்காவது சுற்றில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெர்க்கையும், ஐந்தாவது சுற்றில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டன் ஃபேபியானோ கருவானைவை வீழ்த்தி டிரெய்லரை களமிறக்கியிருந்தார் குகேஷ்.

இப்பின்னணியில் உலகின் முதல்நிலை வீரரும், ரேபிட் செஸ்ஸில் கரை கண்டவருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை குகேஷ் எதிர்கொண்டார்.

சமீபத்தில் நார்வேயில் நடந்த போட்டியில் கார்ல்சனை குகேஷ் வீழ்த்தியிருந்த நிலையில் இப்போட்டியில் கருப்புக் காய்களுடன் குகேஷ் ஆடியது பின்னடைவாக பார்க்கப்பட்டது.

ஆனால் வியூப்பூட்டும் வகையில் கார்ல்சனை குகேஷ் வீழ்த்தினார். போட்டியில் தற்போது முதலிடத்தில் உள்ளார் குகேஷ்.

போட்டியை வர்ணனை செய்த 13 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற கேரி காஸ்பரோவ், இம்முறை குகேஷ் வென்றது அதிர்ஷ்டம், கார்ல்சனின் தவறு என்றெல்லாம் சொல்ல முடியாது. இது ஆணித்தரமான வெற்றி என அடித்துக் கூறியிருக்கிறார்.

போட்டிக்கு முன்னர் பேட்டியளித்த கார்ல்சன், குகேஷுக்கு ரேபிட் செஸ்ஸெல்லாம் சரிப்பட்டு வராது எனக் கூறியிருந்தார். OVER CONFIDENCE ஒடம்புக்கு ஆகாது என்பது உலகின் நம்பர் 1 வீரர்களுக்கும் பொருந்தும்.

The post மேக்னஸ் கார்ல்ஸனை மீண்டும் தோற்கடித்து குகேஷ் அசத்தல் appeared first on Oruvan.com.

நோர்வே செஸ் – கார்ல்சனை தோற்கடித்து குகேஷ் அபார வெற்றி
நோர்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான மாக்ன்ஸ் கார்ல்சனை உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ் தோற்கடித்து அபார வெற்றியை பதிவுசெய்துள்ளார்.

நோர்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் உலக சாம்பியன் குகேஷ் மற்றும் அர்ஜூன் எரிகைசி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதன்படி, நேற்று நடந்த போட்டியில் குகேஷ், நோர்வேவின் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார். வெள்ளை நிற காயுடன் ஆட்டத்தை தொடங்கிய குகேஷை விட கார்ல்சனே பெரும்பாலான சமயங்களில் ஆதிக்கம் செலுத்தினார்.

எனினும், மிகவும் சாமர்த்தியமாக விளையாடிய குகேஷ் இறுதியில் வெற்றி பெற்று, கார்ல்சனுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். இதனால், ஏமாற்றம் அடைந்த கார்ல்சன் மேஜையை கையால் ஓங்கி அடித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் நோர்வே செஸ் போட்டியின் புள்ளிகள் பட்டியலில், குகேஷ் 8.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post நோர்வே செஸ் – கார்ல்சனை தோற்கடித்து குகேஷ் அபார வெற்றி appeared first on Oruvan.com.