love Archives - Oruvan.com

காதல் விவகாரம்: மதுரையில் காரை ஏற்றி வாலிபர் கொலை
காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் – மதுரையில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பூதமங்கலத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் வயது 21. இவர் ராகவி (24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ராகவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் வாகன விபத்தில் இறந்த நிலையில், கணவரை இழந்த ராகவியை சதீஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டு திருச்சியில் வசித்து வந்தார்.

எனினும், சதிஷுக்கு ராகவியை விட வயது குறைவு என்பதால் இவர்களின் திருமணத்திற்கு ராகவியின் பெற்றோர், உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து வீட்டில் இருந்த நகையை எடுத்துச் சென்று விட்டதாக ராகவி மீது பெற்றோர் மேலூர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இரு தரப்பினரையும் பொலிஸார் விசாரணைக்கு அழைத்தனர்.

இதன் பேரில் நேற்று இரு தரப்பினரும் விசாரணைக்கு வந்தனர். நள்ளிரவு 11:30 மணி வரை விசாரணை தொடரவே இரு தரப்பினரையும் பொலிஸார் நாளை (அதாவது இன்று) விசாரணைக்கு வருமாறு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சதீஷ்குமார் இருசக்கர வாகனத்தில் மனைவி ராகவியை அழைத்துச் சென்றார். அய்யாபட்டி விலக்கு அருகே சென்றபோது ராகவியின் உறவினர்கள் பின்னால் காரில் சென்று இருசக்கர வாகனம் மீது மோதினர்.

இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி ராகவி படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து தகவலறிந்த பொலிஸார் விரைந்து சென்று சதீஷ்குமார் உடலை மீட்டனர்.

சடலம்பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராகவியும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து மேலூர் பொலிஸார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post காதல் விவகாரம்: மதுரையில் காரை ஏற்றி வாலிபர் கொலை appeared first on Oruvan.com.

விரைவில் அருண் – அர்ச்சனாவுக்கு டும் டும் டும்
சின்னத்திரை பிரபலங்களான அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா இருவரும் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வந்தன.

இந்நிலையில் கடந்த சீசனில் பிக்பொஸ்ஸில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆனார் அர்ச்சனா.

பின்னர் இந்த வருட பிக்பொஸ்ஸில் போட்டியாளராக உள்ளே சென்றார் அருண். அப்போது குடும்பத்தினர் வந்து பார்க்கும் போது அர்ச்சனாவும் வந்திருந்தார்.

அப்போது அனைவர் முன்னிலையிலும் இவர் தான் என் காதலி என்று அருண் அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில் எவிக்ட் ஆகி வெளியில் சென்ற அருண் சில தினங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் எங்கள் திருமணத்தை விரைவில் நடத்த பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஆண்டுக்குள் திருமணத்தை முடிக்க திட்டமிட்டு வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

The post விரைவில் அருண் – அர்ச்சனாவுக்கு டும் டும் டும் appeared first on Oruvan.com.