losses Archives - Oruvan.com

மத்தள சர்வதேச விமான நிலையத்தால் பெரும் நட்டம்
மத்தள சர்வதேச விமான நிலையத்தால் வருடாந்தம் 3 தசம் 2 பில்லியன் ரூபா நட்டத்தை தொடர்ச்சியாக எதிர்நோக்குவதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நட்டத்தைக் குறைப்பதற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

மத்தள விமான நிலையத்திற்கு வரும் விமானங்களுக்கு தரையிறங்கும் கட்டணத்திலிருந்து விலக்களிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் ஊடாக 06 விமான நிறுவனங்கள் மத்தள விமான நிலையத்தில் தமது விமானங்களை தரையிறக்க இணங்கியுள்ளன.

மத்தள விமான நிலையத்தின் ஊடாக வருடாந்தம் ஒரு லட்சம் பயணிகள் மாத்திரமே வருகைத் தருகின்றனர்.

இந்த வருடம் அந்த எண்ணிக்கையை இரண்டு லட்சமாக அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

மத்தள விமான நிலையத்தைச் சுற்றியுள்ள 17 கிலோமீற்றர் நீளமான பாதுகாப்பு வேலியும் பாவனைக்கு உகந்த நிலையில் இல்லை.

இதனால் விமான நிலையத்தை நவீனமயமாக்கவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்

The post மத்தள சர்வதேச விமான நிலையத்தால் பெரும் நட்டம் appeared first on Oruvan.com.

அனல் மின் உற்பத்தியால் வருடாந்தம் 56 பில்லியன் ரூபாய் இழப்பு
இலங்கை மின்சார சபையானது, எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யும் அனல் மின் உற்பத்திற்காக சில்லறை விலையில் எரிபொருளை வாங்குவதால் வருடாந்தம் 56 பில்லியன் ரூபாய் இழக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றிடம் கருத்து தெரிவித்தார்.

அனல் மின் உற்பத்திக்காக சலுகை விலையில் எரிபொருள் கிடைக்குமாக இருந்தால் மின்சாரக் கட்டணத்தை 11 வீதத்தால் குறைக்க முடியும் எனவும் குறித்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆறு மாதங்களுக்கு 28 பில்லியன் ரூபாய் எனும் அடிப்படையில் 56 பில்லியன் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆலோசனை அறிக்கையொன்றின் மூலம் மின்சார சபைக்கு அறிவித்துள்ளதாகவும் அதற்கு இது வரையில் எதுவித பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

அனல் மின் உற்பத்திக்காக டீசல், நெப்தா மற்றும் எரிபொருள் எண்ணெயை பயன்படுத்துவதாக கூறிய அதிகாரி மின் உற்பத்திக்காக அதிகளவிலான டீசல் தொகையை பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களில் பெற்றுக் கொள்ளும் விலைக்கு மின்சார சபை பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் , மின்சார உற்பத்திக்கான எரிபொருளை செலவுகளை ஈடுசெய்யும் விலையில் வழங்கினால் மின்சார சபைக்கு ஆண்டுதோறும் 56 பில்லியன் ரூபாயை சேமிக்க வாய்ப்பு உள்ளது என்றும், இது நாட்டின் மின்சார நுகர்வோருக்கு வழங்கப்படலாம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

The post அனல் மின் உற்பத்தியால் வருடாந்தம் 56 பில்லியன் ரூபாய் இழப்பு appeared first on Oruvan.com.