london Archives - Oruvan.com

பிரித்தானியாவில் நாளை முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்
இங்கிலாந்தில் நாளை செவ்வாய்க்கிழமை முதல் குப்பை சேகரிப்புக்கான புதிய விதிகள் நடைமுறைக்கு வருகின்றன.

இதன்படி, பல்வேறு வகையான கழிவுகளுக்காக நான்கு தனித்தனி குப்பைத் தொட்டிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இந்தப் புதிய விதிகள் நடைமுறைக்கு வருவதால் ​​நாடு முழுவதும் உள்ள வீடுகளில் குறிப்பிட்ட பொருட்களைத் தவறான முறையில் குப்பைத் தொட்டிகளில் போட்டால் 400 பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குப்பைத் தொட்டிகளைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் குடியிருப்பாளர்களை எச்சரித்து வருகின்றனர்.

புதிய கட்டாயக் கழிவு சேகரிப்பு முறை நாளை முதல் நடைமுறைக்கு வருவதால நாடு முழுவதும் உள்ள குப்பை சேகரிப்பாளர்கள் கழிவுகளைத் தனித்தனியாகச் சேகரிக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, உணவு மற்றும் தோட்டக் கழிவுகள், காகிதம் மற்றும் அட்டை, உலர்ந்த மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள், மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகள் என்று வகைப்படுத்தப்பட்டு கழிவுகள் சேகரிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post பிரித்தானியாவில் நாளை முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம் appeared first on Oruvan.com.

லண்டனில் தொலைபேசி திருட்டுக்காக நூற்றுக்கணக்கானோர் கைது
லண்டனில் கையடக்க தொலைபேசி திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் 200க்கும் மேட்டபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நான்கு வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கையடக்க தொலைபேசிகளை திருடியதற்காக 248 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 770 சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பரந்த இந்த நடவடிக்கையின் போது ஏனைய குற்றங்களில் ஈடுபட்ட 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

“சந்தேக நபர்களை விரைவாகக் கண்டறிந்து கைது செய்ய” ட்ரோன்கள், இ-பைக்குகள் மற்றும் நேரடி முக அங்கீகாரம் போன்ற “அதிநவீன” தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

The post லண்டனில் தொலைபேசி திருட்டுக்காக நூற்றுக்கணக்கானோர் கைது appeared first on Oruvan.com.

வடக்கு லண்டனில் கத்திக்குத்து தாக்குதல் – 15 வயது சிறுவன் உயிரிழப்பு
வடக்கு லண்டன் பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் 15 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இஸ்லிங்டனில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், பிரதான சந்தேகநபர் தலைமறைவாக இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் ஒரு மணியளவில் வடக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்போர்ன் வீதியில் கத்திக்குத்து சம்பவம் நடந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து, மெட்ரோ பொலிஸார்விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இஸ்லிங்டனில் உள்ள செயிண்ட் மேரி மாக்டலீன் பாடசாலைக்கு அருகில் இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து அதிகாரிகள் அவசர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவத்தைப் பார்த்தவர்கள் அல்லது ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு விசாரணைகளை முன்னெடுத்துள்ள தலைமை கண்காணிப்பாளர் ஜேசன் ஸ்டீவர்ட் தெரிவித்துள்ளார்.

The post வடக்கு லண்டனில் கத்திக்குத்து தாக்குதல் – 15 வயது சிறுவன் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

வடமேற்கு லண்டனில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – சந்தேகநபர் மீது வழக்கு பதிவு
வடமேற்கு லண்டனில் இடம்பெற்ற பயங்கர விபத்தை தொடர்ந்து ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டிசம்பர் மூன்றாம் திகதி வில்லெஸ்டனில் உள்ள சேப்பல் க்ளோஸ் பகுதியில் பாதசாரிகள் மீது கார் ஒன்று மோதியுள்ளது. இது குறித்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்திருந்தனர்.

இந்த விபத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை தொடங்கப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வில்லெஸ்டனைச் சேர்ந்த 29 வயதான சந்தேகநபர் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், சந்தேகநபர் இன்று திங்கட்கிழமை ஹைபரி கார்னர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

எவ்வாறாயினும், சந்தேகநபருக்கு உதவி குற்றச்சாட்டில் கடந்த நான்காம் திகதி சந்தேகத்தின் பேரில் 32 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post வடமேற்கு லண்டனில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – சந்தேகநபர் மீது வழக்கு பதிவு appeared first on Oruvan.com.

தென்கிழக்கு லண்டனில் கடையொன்றில் தீ விபத்து
தென்கிழக்கு லண்டனில் கடையொன்றில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் கட்டிடம் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்கேயில் உள்ள ஹை ஸ்ட்ரீட்டில் இரண்டு மாடி கடையின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து மதியம் 04:30 மணியளவில் பதினைந்து இயந்திரங்களும் 100 தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

தரைத்தளத்தின் ஒரு பெரிய பகுதி தீப்பிடித்து எரிந்ததாக லண்டன் தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.

இதன்போது அருகில் இருந்து கட்டடங்களில் இருந்த 25 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புகை வராமல் இருக்க ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்குமாறு உள்ளூர்வாசிகள் வலியுறுத்தப்பட்டனர்.

எவ்வாறாயினும், பெக்கன்ஹாம், ஃபாரஸ்ட் ஹில், வுட்சைட், வெஸ்ட் நோர்வுட் மற்றும் சுற்றியுள்ள தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த குழுவினர் காலை 9:00 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post தென்கிழக்கு லண்டனில் கடையொன்றில் தீ விபத்து appeared first on Oruvan.com.

லண்டன் நிலத்தடி ரயில் நிலையம் மீளவும் திறக்கப்பட்டது
ஊதியம் மற்றும் பணி நேரம் தொடர்பான ஐந்து நாள் வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் லண்டன் நிலத்தடி ரயில் நிலையம் வெள்ளிக்கிழமை மீண்டும் சேவையைத் தொடங்கியுள்ளது.

எவ்வாறாயினும், ஸ்தம்பிதமடைந்துள்ள தொழிற்சங்கப் பேச்சுவார்த்தைகள் வேலை நிறுத்தத்திற்கான ஐயப்பாட்டை மேலும் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய ஊடகங்களின்படி, லண்டன் பெரும்பாக போக்குவரத்து துறை, ரயில், கடல்சார் போக்குவரத்து தொழிற்சங்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

இந்த சலுகையை ஏற்றுக்கொள்வதா என்பதை தொழிற்சங்கம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பதுடன் வேலைநிறுத்தங்கள் தொடரக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாராந்திர வேலை நேரத்தைக் குறைத்து, சோர்வு பிரச்சினைகளைத் தீர்க்க தொழிற்சங்கம் முயற்சிப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், அத்தகைய கோரிக்கைகள் நடைமுறைக்கு மாறானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று லண்டன் பெரும்பாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது

ஊதியம் மற்றும் குறைந்த வேலை வாரம் தொடர்பாக ரயில், கடல்சார் போக்குவரத்து சங்கம் மற்றும் லண்டன் பெரும்பாக போக்குவரத்து துறை இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post லண்டன் நிலத்தடி ரயில் நிலையம் மீளவும் திறக்கப்பட்டது appeared first on Oruvan.com.

குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மாபெரும் பேரணி – எலான் மஸ்க் ஆதரவு
பிரித்தானியாவின் லண்டனில் புலம்பெயர்வோருக்கு எதிராக மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது.

தீவிர வலதுசாரி ஆர்வலர் Tommy Robinson ஏற்பாடு செய்த லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் 26 பொலிஸார் காயமடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து 25 பேரை பொலிஸார்கைது செய்தனர்.

லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட மிகப்பெரிய பேரணிக்கு உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில்,

“வாக்காளர்களை இறக்குமதி செய்கிறார்கள். தங்கள் நாட்டில் உள்ளவர்கள் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று தெரிந்தவுடன் அவர்கள் ஏனைய நாடுகளிலிருந்து மக்களை இறக்குமதி செய்து தங்களுக்கு வாக்களிக்கச் செய்வார்கள்.

இது வெற்றி பெறுவதற்கான ஒரு உத்தி. இதை நிறுத்தவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

The post குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மாபெரும் பேரணி – எலான் மஸ்க் ஆதரவு appeared first on Oruvan.com.

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி லண்டனில் பாரிய போராட்டம்
“செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு. பாதிக்கப்பட்ட தரப்பாக தமிழர்களுக்கு சர்வதேச விசாரணையொன்று இங்கு இடம்பெறுவதன் ஊடாகவே நீதியை பெற முடியும்.

இந்த விடயத்தில் மனித உரிமைகளை நிலைநாட்ட பிரித்தானிய அரசாங்கம் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும்” என பிரித்தானியாவாழ் புலம்பெயர் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை லண்டன் டவுனிங் ஸ்ட்ரீட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

‘இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு, கண்ணீரால் நினைவுக்கூரப்படும் உயிர்கள்’ என்ற தொனிப்பொருளில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதுடன், இலங்கையில் காணாமலாக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியை வழங்க முடியும் என வலியுறுத்தினர்.

செம்மணி மனித புதைகுழியில் பல 50 இற்கும் அதிகமான எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எனவே, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெறுவதன் ஊடாகவே செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிகளில் கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியும்.

பிரித்தானிய அரசாங்கம் இந்த விவகாரத்தில் சர்வதேச விசாரணை முன்னெடுக்க இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட புலம்பெயர் தமிழர்கள் வலியுறுத்தினர்.

The post செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி லண்டனில் பாரிய போராட்டம் appeared first on Oruvan.com.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்து லண்டனில் போராட்டம்
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்து ஈழத்தமிழ் இன அழிப்பு நாளான கறுப்பு யூலைக்கு எதிராக பிரித்தானியா வாழ் மக்களால் பாரிய போராட்டம் ஒன்று நேற்றையதினம் பிரித்தானியாவில் இடம்பெற்றிருந்தது.

இலங்கை அரசினால் 1993 ஆம் ஆண்டு யூலை மாதம் 10 நாட்களுக்குள் இடம்பெற்ற 3000 அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதோடு 150,000 மேற்பட்ட தமிழ் மக்களின் சொத்துக்கள் இழக்கப்பட்ட கறுப்பு யூலைக்கு எதிராக லண்டனில் உள்ள Parliment square,sw1p 3jx இல் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை தொடர்ந்து இடம்பெறுகின்றதுஎன்ற தொனிப்பொருளோடு லண்டன் தமிழீழத்தின் சுயநிர்ணய இயக்கம் [MSDTE], தமிழீழ சுயநிர்ணய அமைப்பு மற்றும் ஏனைய தமிழ் அமைப்பின் ஏற்பாட்டில் பல நூற்றுக்கணக்கான மக்களின் பங்கெடுப்புடன் கறுப்பு யூலைக்கெதிரான போராட்டம் இடம்பெற்றிருந்தது.

The post இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்து லண்டனில் போராட்டம் appeared first on Oruvan.com.

லண்டனில் இடம்பெற்ற விமான விபத்து – நால்வர் பலி
பிரித்தானியாவில் லண்டன் சவுத்தெண்ட் (Southend) விமான நிலையத்தில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

சவுத்தெண்ட் விமான நிலையத்தில் இருந்து அந்நாட்டு நேரப்படி நேற்று மாலை 04 மணிக்கு சிறிய ரக விமானம் நெதர்லாந்து புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதன்போது விமானம் தீப்பற்றி ஏரிந்து வெடித்து சிதறுவதை காணமுடிந்தது.

விமான விபத்தில் இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு பயணிகள் என நால்வர் உயிரிழந்ததாக 24 மணி நேரத்தின் பின்னர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

The post லண்டனில் இடம்பெற்ற விமான விபத்து – நால்வர் பலி appeared first on Oruvan.com.