Local Government Election Archives - Oruvan.com

உள்ளூராட்சி மன்ற தொடக்கக் கூட்டங்களைக் கூட்டுவதில் சிக்கல்
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெற்ற கூடுதல் உறுப்பினர் பதவிகளுக்கு பெயர்களை (போனஸ்) தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, உள்ளூராட்சி மன்ற தொடக்கக் கூட்டங்களைக் கூட்டுவதில் நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளன.

உள்ளூராட்சி நிறுவனங்களை நிறுவும் பணிகள் அடுத்த மாதம் இரண்டாம் திகதிக்குள் முடிக்கப்பட வேண்டும், மேலும் உள்ளூராட்சி மன்ற கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலை புதிய உறுப்பினர்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும்.

இருப்பினும், பெயர்களைப் பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, தாமதமாகப் பெறப்பட்ட ஆவணங்களை அச்சிடும் பணி அடுத்த வாரத்தின் முதல் பாதியில் நடைபெறும், இதனால் உள்ளூராட்சி வழக்கமான நடவடிக்கைகள் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பல முக்கிய கட்சிகள் கொழும்பு மாநகர சபைக்கான வேட்பாளர்களின் துணைப் பட்டியலை இன்னும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

The post உள்ளூராட்சி மன்ற தொடக்கக் கூட்டங்களைக் கூட்டுவதில் சிக்கல் appeared first on Oruvan.com.

மே 28 வரை அரசாங்கத்திற்கு காலகெடு – மக்கள் ஆணையுடன் பெரும் போராட்டத்திற்கு தயாராகும் தமிழரசு கட்சி
வடக்கிலே ஆறாயிரம் ஏக்கர் காணி பறிபோகும் அபாயம் காணப்படுவதாகவும், அது குறித்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக மீள பெறவேண்டும் என இலங்கை தமிழரசு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் 28ஆம் திகதிக்குள் குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறவேண்டும் எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் தற்போது கிடைத்துள்ள மக்கள் ஆணையுடன் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் வடக்கு கிழக்கில் இலங்கை தமிழரசு கட்சி பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்தக் கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி பெரும் வெற்றியீட்டியிருக்கின்றது. மக்கள் தந்த இந்த வெற்றியை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கின்றோம்.

வடக்கு மற்றும் கிழக்கில் சுமார் 58 சபைகளில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிட்டது. இதில் குறைந்தது 40 சபைகளில் நிர்வாகங்களை நடத்துவதற்கு மக்கள் எங்களுக்கு ஆணை வழங்கியுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஆறு மாத காலத்தில் தமிழ் மக்கள் இலங்கை தமிழரசு கட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலின் போது ஒரு பிம்பம் உருவாகியிருந்தது.

யாழ் தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி வென்று விட்டது, மக்கள் ஆணை கிடைத்துவிட்டது என்றெல்லாம் கூறப்பட்டது. எனினும், ஆறு மாத காலத்தில் தற்போது மக்கள் ஆணை எங்களுக்கு கிடைத்துள்ளது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் மட்டக்களப்பில் இலங்கை தமிழரசு கட்சி பெரு வெற்றியை பதிவுசெய்துள்ளது. வடக்கிலும் வவுனியாவை தவிர்ந்து அனைத்துப் பகுதிகளிலும் தமிழரசு கட்சி பெரிய வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இந்நிலையில், தமிழ் தரப்புகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். விசேடமாக எங்கள் பகுதிகளில் ஆறாயிரம் ஏக்கர் காணி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள மக்கள் ஆணையுடன் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் கோரிக்கை விடுக்கின்றோம். இதன்படி, கடந்த மார்ச் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிப்பை உடன் மீளப் பெறவேண்டும்.

உடனடியாக இந்த வர்த்தமானி அறிவிப்பு மீளப் பெறப்பட வேண்டும். மக்கள் ஆணையுடன் இந்த கோரிக்கையை நாங்கள் விடுக்கின்றோம். எதிர்வரும் 28ஆம் திகதி வரை நாங்கள் அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கியுள்ளோம்.

அரசாங்கம் இந்த வர்த்தமானியை மீளப் பெறாமல் இருந்தால் எதிர்வரும் 29ஆம் திகதி இதற்கு எதிராக பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படும். இதற்கு அனைத்து தமிழ் கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

The post மே 28 வரை அரசாங்கத்திற்கு காலகெடு – மக்கள் ஆணையுடன் பெரும் போராட்டத்திற்கு தயாராகும் தமிழரசு கட்சி appeared first on Oruvan.com.

உள்ளூராட்சி தேர்தல் – வடக்கு, கிழக்கில் ஆளும் திசைக்காட்டிக்கு ஏமாற்றம், தமிழரசு கட்சி தலைதூக்கியது
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி சார்பில் வடக்கு மாகாணத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

நீண்ட காலமாக பிற்போடப்பட்டிருந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நேற்று நாடு முழுவதும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், நேற்று மாலை முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தற்போது வரை வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் ஆளும் தேசிய மக்கள் சக்தி பெரும்பாலான சபைகளை கைப்பற்றி முன்னிலைப் பெற்றுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

எனினும், வடக்கு மற்றும் கிழக்கில் மாகாணத்தில் ஆளும் கட்சி எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. மாறாக தமிழர் தேசம் தமிழ் கட்சிகளுக்கே மீண்டும் அதிகாரத்தை வழங்கியுள்ளனர்.

கடந்த பொது தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மகாணத்தில் ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு பெருகிய ஆதரவு கிடைத்திருந்தது.

அதற்கு சிறந்த உதாரணம் பொது தேர்தலில் வடக்கு மாகாணத்தில் இருந்து ஐந்து உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்க விஜயம் செய்திருந்த ஜனாதிபதி இதனை சுட்டிக்காட்டி, பிரித்தாளும் அரசியலுக்க முடிவுகட்டப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த காலங்களில் வடக்கு மக்கள் மத்தியில் கிடைத்த பெருகிய ஆதரவு உள்ளூராட்சி சபை தேர்தலிலும் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ஆளும் கட்சிக்கு இருந்தது.

எனினும், முடிவுகள் அதற்கு மாறாக அமைந்துள்ளன. வெளியாகியுள்ள முடிவுகளின்படி, வடக்கு கிழக்கில் இலங்கை தமிழரசு கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக பல்வேறு இடங்களை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உள்ளடங்கிய தமிழ் தேசியப் பேரவை கைப்பற்றியுள்ளது.

யாழ். மாநகர சபையைில் இலங்கை தமிழரசு கட்சி 13 இடங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 இடங்களையும், தேசிய மக்கள் சக்தி 10 இடங்களையும், ஜனநாயக தேசியக் கூட்டணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தலா நான்கு இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபை, பருத்திதுறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை மூன்று சபைகளிலும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உள்ளடங்கிய தமிழ் தேசியப் பேரவை முன்னிலைப் பெற்றுள்ளது.

சாவகச்சேரி நகர சபையில் ஆறு இடங்களையும், வல்வெட்டித்துறை நகர சபையில் ஏழு இடங்களையும், கோப்பாயில் ஒன்பது இடங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

அதேபோல், சாவகச்சேரி நகர சபையில் ஆறு இடங்களையும், கோப்பாயில் 11 இடங்களையும், வல்வெட்டித்துறையில் ஐந்து இடங்களையும் இலங்கை தமிழரசு கட்சி வென்றுள்ளது.

அதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசு கட்சி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. அங்குள்ள பெரும்பாலான சபைகளை தனித்து நிர்வகிக்கும் ஆற்றலை தமிழரசு கட்சி பெற்றுள்ளது.

வவுனியா மற்றும் மன்னாரில் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக் தமிழ் தேசியக் கூட்டணி கணிசமான வெற்றிகளை பதிவுசெய்துள்ளது. மேலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் தமிழ் பிரதேச சபைகளை தமிழரசு கட்சி கைப்பற்றியுள்ளது.

மட்டக்களப்பிலும் தமிழரசு கட்சிய வெற்றிவாகை சூடியுள்ளது. அம்பாறை மாவட்டத்திலும் பல இடங்களில் தமிழரசு கட்சி பெற்றிகளை பதிவுசெய்துள்ளது.

கடந்த பொது தேர்தல் மற்றும் ஜனதிபதி தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் பெரும் ஆதரவை வழங்கியிருந்த நிலையில், உள்ளூராட்சி தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.

The post உள்ளூராட்சி தேர்தல் – வடக்கு, கிழக்கில் ஆளும் திசைக்காட்டிக்கு ஏமாற்றம், தமிழரசு கட்சி தலைதூக்கியது appeared first on Oruvan.com.

வவுனியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு
வவுனியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு இன்று (06.05) காலை ஆரம்பமாகிய நிலையில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், மக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களிப்பதையும் அவதானிக்க முடிகிறது.

வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய ஐந்து சபைகளுக்கும் 103 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 1731 பேர் போட்டியிடுகின்றனர்.

ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 293 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 154 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொலிஸாரின் பாதுகாப்புக்கு அமைதியில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் நடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்காக கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் வாக்கினை பதிவு செய்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வவுனியா மாநகர சபைக்காக வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தமது வாக்கினை பதிவு செய்தனர்.

The post வவுனியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு appeared first on Oruvan.com.

யாழில் 17 சபைகளுக்குமான வாக்களிப்பு ஆரம்பம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான வாக்களிப்பானது, இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் ஒரு மாநகரசபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என்ற கட்டமைப்பில் 17 உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

குறித்த சபைகளில் உள்ள 243 வட்டாரங்களில் இருந்து உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3 ஆயிரத்து 519 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களிலிருந்து போட்டியிடுகின்றனர்.

மக்கள் தமது வாக்குகளை அளிப்பதற்காக 517 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் யாழ்ப்பாணத்தில், 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

The post யாழில் 17 சபைகளுக்குமான வாக்களிப்பு ஆரம்பம் appeared first on Oruvan.com.

ஏழாம் திகதி சில பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக மே ஏழாம் திகதி பல பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும், கீழ்க்கண்ட பாடசாலைகளைத் தவிர, அனைத்துப் பாடசாலைகளும் அன்றைய தினம் வழக்கம் போல் செயல்படும் என்றும் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாளை (06) நடைபெறவுள்ள தேர்தல் காரணமாக, நாட்டின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்றும் (05) நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

The post ஏழாம் திகதி சில பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சு appeared first on Oruvan.com.

முல்லைத்தீவில் வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு
நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் மாவட்ட செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய் , மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான தேர்தலாக இது அமைவதுடன் 41 வட்டாரங்களை உள்ளடக்கி காணப்படுகின்றது.

அதில் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 10 கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும், புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 7 கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்களும், துணுக்காய் பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 6 கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும், மாந்தை கிழக்கு பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 6 ஆறு கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களுமாக மொத்தம் 38 அணிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 87800 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் அவர்கள் வாக்களிப்பதற்குரிய 137 நிலையங்களுக்கும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து இன்று (05.05.2025) காலை 7.30 மணி முதல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் அரசாங்க அதிபருமான , அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எஸ்.சிந்துசாவின் ஏற்பாட்டில் வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த தேர்தலில் 1291 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 274 பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாலநாதன் சதீசன்

The post முல்லைத்தீவில் வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு appeared first on Oruvan.com.

யாழ்ப்பாணத்தில் வாக்கு பெட்டிகள் விநியோகம்
நாடு முழுவதும் நாளை உள்ளூராட்சி சபை தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இன்று காலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து வாக்களிக்கு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் அதிகாரிகளுடன் பேருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post யாழ்ப்பாணத்தில் வாக்கு பெட்டிகள் விநியோகம் appeared first on Oruvan.com.

எதிர்வரும் ஆறாம் திகதி அனைத்து தரப்பினருக்கும் விடுமுறை
எதிர்வரும் ஆறாம் திகதிக்கான விடுமுறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

இதன்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் ஆறாம் திகதி அரச மற்றும் தனியார் துறையினருக்கு வேதன குறைப்பின்றி விடுமுறை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தேர்தல்களை ஆணைக்குழு இந்த விடயத்தினை வலியுறுத்தியுள்ளது.

இதன்படி, பல்கலைக்கழகங்களின் பணிக்குழாமினருக்கும் மாணவர்களுக்கும் விடுமுறை வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

மேலும், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் பணிக்குழாமினருக்கும் மாணவர்களுக்கும் குறித்த தினத்தில் விடுமுறை வழங்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் தேர்தல் அலங்கரிப்பு மற்றும் பிரச்சார நடவடிக்கை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

The post எதிர்வரும் ஆறாம் திகதி அனைத்து தரப்பினருக்கும் விடுமுறை appeared first on Oruvan.com.

உள்ளூராட்சி தேர்தல் – மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மூடப்படுகின்றது
நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மே 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 05, எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள மோட்டார் வாகனத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சாவடியாகப் பயன்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாளான மே 6 ஆம் திகதி நாரஹேன்பிட்டி மோட்டார் போக்குவரத்துத் துறை பொதுப் பணிகளுக்காக மூடப்படும் என்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

The post உள்ளூராட்சி தேர்தல் – மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மூடப்படுகின்றது appeared first on Oruvan.com.