Local Councils Archives - Oruvan.com

வலி வடக்கு பிரதேச சபையை தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பு
வலி வடக்கு பிரதேச சபைக்கான கன்னி சபை அமர்வு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் வலி வடக்கு பிரதேசசபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.

நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலின் அடிப்படையில் 35 ஆசனங்களைக் கொண்ட வலி வடக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 11 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 9 ஆசனங்களையும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி 06 ஆசனங்களையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 03 ஆசனங்களையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 03 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 02 ஆசனங்களையும், தமாழ் மக்கள் கூட்டணி ஒரு ஆசனத்தையும் வென்றது.

இந்நிலையில் தமிழரசுக் கட்சி சார்பில் தவிசாளர் வேட்பாளராக சோமசுந்தரம் சுகிர்தனும், தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் பத்மநாதன் சாருஜனும் போட்டியிட்டனர்.

தவிசாளர் தெரிவை பகிரங்க வாக்களிப்பு மூலமாக தெரிவு செய்ய 24 உறுப்பினர்களும் இரகசிய வாக்களிப்புக்கு 10 உறுப்பினர்களும்,

நடுநிலையாக ஒரு உறுப்பினரும் பகிரங்கமாக நடைபெற்ற தெரிவில் சோமசுந்தரம் சுகிர்தன் 14 வாக்குகளையும் பத்மநாதன் சாருஜன் 09 வாக்குகளையும் பெற்றனர்.

இந்நிலையில் வலி வடக்கு பிரதேசசபை இலங்கைத் தமிழரசுக் கட்சி வசமானது.

The post வலி வடக்கு பிரதேச சபையை தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பு appeared first on Oruvan.com.

வலி கிழக்கு சைக்கிள் சங்கு கூட்டணி வசம் – தவிசாளரானார் நிரோஷ்
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜனனாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவற்றின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தியாகராஜா நிரோஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான  விசேட அமர்வு இன்றையதினம் மதியம் 11.30 மணிக்கு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

தவிசாளர் தெரிவின் இது மூவர் போட்டியிட்ட முன்மொழியப்பட்ட நிலையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இரகசிய முறையிலான வாக்கெடுப்புக்கு சபையின் 36 உறுப்பினர்களில் 22 உறுப்பினர்கள் வாக்களித்திருந்த நிலையில் முதலாம் சுற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் முதல் நிலை பெற்ற வேட்பாளர் பெரும்பான்மைக்குரிய வாக்கை எட்டாத்தால் இரண்டாம் சுற்று தெரிவு இரகசியமா? பகிரங்கமா என்பது தொடர்பான வாக்கெடுப்பு சமமாக வந்த நிலையில் திருவுளச்சீட்டு முறைமூலம் இரகசிய வாக்கெடுப்பு நடத்துவது என  தீர்மானித்து இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதனடிப்படையில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று சங்கு சைக்கிள் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தியாகராஜா நிரோஷ் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

உபதவிசாளர் தெரிவும் இரகசிய வாக்கெடுப்பு முறைமூலம் நடத்தப்பட்ட நிலையில் சங்க சைக்கிள் கூட்டணியின் உறுப்பினரன ஜனர்த்தனன் 14 க்கு 13 என்ற வாக்குகள் அடிப்படையில் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

The post வலி கிழக்கு சைக்கிள் சங்கு கூட்டணி வசம் – தவிசாளரானார் நிரோஷ் appeared first on Oruvan.com.

உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகப்பூர்வ பதவிக்காலம் இன்று ஆரம்பம்
இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகப்பூர்வ பதவிக்காலம் இன்று திங்கட்கிழமை (2) ஆரம்பமாகிறது.

தலைமைத்துவத்தை நிறுவிய 161 உள்ளூராட்சி மன்றங்கள் செயற்பாடுகளைத் ஆரம்பிக்கவுள்ளன.

கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி ஒரு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டது, புதிய பதவிக்காலம் ஜூன் 02 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக தொடங்கும் என்பதை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

அதன்படி, சர்ச்சை இல்லாமல் அதிகாரம் நிறுவப்பட்ட 161 நிறுவனங்களுக்கான மேயர்கள், துணை மேயர்கள், தவிசாளர்கள் மற்றும் உப தவிசாளர்கள்ஆகியோரின் பெயர்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த அதிகாரிகள் இன்று முதல் தங்கள் கடமைகளை ஆரம்பிக்க அதிகாரம் பெற்றுள்ளனர்.

புதிய பதவிக்காலம் ஆரம்பமான போதிலும், மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்ட மன்றங்களில் ஒன்றான கொழும்பு மாநகர சபை இன்று கூடாது.

339 உள்ளூராட்சி நிறுவனங்களில் 178 இடங்களுக்கு மேயர்கள் அல்லது தவிசாளர்கள் இன்னும் பெயரிடப்படவில்லை.

தேர்தல் முடிவுகளின்படி, 161 உள்ளூராட்சி மன்றங்களில் மாத்திரம் அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்கள் பெரும்பான்மையைப் பெற்றன.

இருப்பினும், மீதமுள்ள 178 நிறுவனங்களில் எந்த ஒரு கட்சியினாலோ அல்லது குழுவினாலோ பெரும்பான்மையைப் பெற முடியவில்லை.

இதற்கமைய கொழும்பு மாநகர சபை உட்பட 14 மாநகர சபைகள், 24 நகர சபைகள் மற்றும் 140 பிராந்திய சபைகளுக்கு நிறுவனத் தலைவர்கள் நியமிக்கப்படவில்லை.

கடந்த மாதம் 06 ஆம் திகதி நடைபெற்ற 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களில் வெற்றியை  தேசிய மக்கள் சக்தி உறுதிப்படுத்தியது.

339 உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி 265 உள்ளூராட்சி மன்றங்களில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய தேசிய மக்கள் சக்தியின் 3927 உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு  செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி 14 உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றியது.  அந்த கட்சியின்  1767 உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தனிப்பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகளில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களுக்கு  உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்களின் வழிநடத்தலின் கீழ் ஆட்சியமைப்பதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

The post உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகப்பூர்வ பதவிக்காலம் இன்று ஆரம்பம் appeared first on Oruvan.com.