Liverpool Archives - Oruvan.com

கார் விபத்து – லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் டியோகோ ஜோட்டா மரணம்
ஸ்பெயினில் இடம்பெற்ற கார் விபத்தில் லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் டியோகோ ஜோட்டா உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

28 வயதான அவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரே திருமணம் செய்து கொண்டதாகவும், தனது சகோதரருடன் காரில் பயணித்த போது இந்த விபத்தில் சிக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த விபத்தில் டியோகோவின் சகோதரரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தி கார் தீப்பற்றி எரிந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஸ்பானிஷ் ஊடகங்களில் வந்த செய்திகளின்படி, ஜோட்டா தனது சகோதரர் ஆண்ட்ரேவுடன் ஒரு காரில் பயணித்ததாகவும், அவரும் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து ஜமோராவின் A-52 மாகாணத்தில் நடந்தது.

காஸ்டில்லாவில் உள்ள அவசர சேவைகள் விபத்தை உறுதிப்படுத்தியுள்ளன.

விபத்து குறித்து காஸ்டில்லா ஒய் லியோன் செயல்பாட்டு அறைக்கு பல அழைப்புகள் வந்தன. ஒரு கார் விபத்தில் சிக்கியதாகவும், கார் தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது,” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“இந்த விபத்து குறித்து ஜமோரா போக்குவரத்து காவல்துறை, ஜமோரா மாகாண சபை தீயணைப்பு படை மற்றும் சசில் அவசர ஒருங்கிணைப்பு மையம் (CCU) ஆகியவற்றிற்கு தகவல் அளித்தது.

இதனையடுத்து சுகாதார மையத்திலிருந்து மருத்துவ அவசர பிரிவு (UME) மற்றும் முதன்மை பராமரிப்பு மருத்துவ ஊழியர்கள் (MAP) அனுப்பப்பட்டனர், அவர்கள் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் இறந்ததை உறுதிப்படுத்தினர்,” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

The post கார் விபத்து – லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் டியோகோ ஜோட்டா மரணம் appeared first on Oruvan.com.

பிரீமியர் லீக்கை வென்றது லிவர்பூல்
ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு, ஆன்ஃபீல்டில் மைதானத்தில் லிவர்பூல் அணி இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளது.

லீக்கில் இன்னும் நான்கு போட்டிகள் மீதமுள்ள நிலையில் லிவர்பூலின் வெற்றி உறுதியாககியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற டோட்டன்ஹாமுக்கு எதிரான போட்டியை சமன் செய்தாலே லிவர்பூல் அணி சம்பியன் ஆவதற்கு அது போதுமானதாக இருந்தது.

இருப்பினும், லிவர்பூல் 5-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிகாரப்பூர்வமாக சம்பியன்களாக முடிசூட்டியது. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் டோட்டன்ஹாம் அணி டொமினிக் சோலங்கே மூலம் முதல் கோலைப் பதிவு செய்தது.

ஆனால் 16வது நிமிடத்தில், லூயிஸ் டயஸ் கோல் அடித்து லிவர்பூல் அணியை சமன் செய்தார். 24வது நிமிடத்தில் மிட்ஃபீல்டர் மேக் அலிஸ்டரின் அழகான கோல் மூலம் லிவர்பூல் முன்னிலை பெற்றது.

முதல் பாதி ஆட்டம் 3-1 என முடிந்தது, 34வது நிமிடத்தில் டச்சு வீரர் காக்போவும் கோல் அடித்தார். 63வது நிமிடத்தில் முகமது சாலா அடித்த கோலால் லிவர்பூல் அணி முன்னிலையை மூன்றாக அதிகரித்தது.

69வது நிமிடத்தில் டோட்டன்ஹாம் அடித்த சொந்த கோல், அந்த அணியின் கோல் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தியது.

முப்பது வருட இடைவெளிக்குப் பிறகு 2020 ஆம் ஆண்டில் லிவர்பூல் பிரீமியர் லீக் பட்டத்தை மீண்டும் வென்றபோது, ​​ஆன்ஃபீல்ட் மைதானம் காலியாக இருந்தது.

கோவிட் கட்டுப்பாடுகள் அன்று ரசிகர்களை ஒதுக்கி வைத்தன. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, உள்ளூர் அணியின் ஆட்டத்தைக் காண ஆயிரக்கணக்கானோர் ஆன்ஃபீல்டில் குவிந்தனர்.

இதன் மூலம், லிவர்பூல் மான்செஸ்டர் யுனைடெட்டின் 20 இங்கிலீஷ் லீக் பட்டங்களின் சாதனையையும் சமன் செய்தது.

The post பிரீமியர் லீக்கை வென்றது லிவர்பூல் appeared first on Oruvan.com.