Lionel Messi Archives - Oruvan.com

உலக கால்பந்து வரலாற்றில் 900 கோல்களை அடித்து மெஸ்ஸி சாதனை
உலக கால்பந்து வரலாற்றில் 900 கோல்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஆர்ஜென்டீனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி பெற்றுள்ளார்.

இன்டர் மியாமி அணியின் நட்சத்திர வீரரான மெஸ்ஸி , நாஷ்வில் எஸ்சீ அணிக்கு எதிரான் போட்டியில் இந்த அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்தில் மெஸ்ஸியின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோல் அடிக்கப்பட்டது. 38 வயதான மெஸ்ஸி, மியாமி அணியில் இணைந்ததிலிருந்து 92 போட்டிகளில் 81 கோல்களை அடித்துள்ளார்.

மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக 778 போட்டிகளில் 672 கோல்களையும்,  பிஎஸ்ஜி அணிக்காக 75 போட்டிகளில் 32 கோல்களையும் அடித்துள்ளார்.

மேலும், அவர் அர்ஜென்டினா அணிக்காக 196 சர்வதேசப் போட்டிகளில் 115 கோல்களை அடித்துள்ளார்.

அவர் அடித்த மொத்த 900 கோல்களில், 755 கோல்கள் அவரது இடது காலால் அடிக்கப்பட்டவை. தனது வலது காலால் 111 கோல்களையும், தலையால் முட்டி 30 கோல்களையும் அடித்துள்ளார்.

பெனால்டி மூலம் 112 கோல்களும், ஃப்ரீ கிக் மூலம் 70 கோல்களும் அடித்துள்ளார்.

ஸ்பானிய கழகங்களான செவில்லா, அத்லெடிக் கழகம் மற்றும் அத்லெடிகோ மெட்ரிட் ஆகியவற்றுக்கு எதிராகவே மெஸ்ஸி அதிக கோல்களை அடித்துள்ளார்.

கால்பந்து வரலாற்றில் மெஸ்ஸியைத் தவிர, 900 கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரே வீரர் போர்த்துகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆவார்.

ரொனால்டோ இந்தச் சாதனையை 1,236 போட்டிகளில் நிகழ்த்தியுள்ளார்.

41 வயதான ரொனால்டோ தற்போது 959 கோல்களுடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post உலக கால்பந்து வரலாற்றில் 900 கோல்களை அடித்து மெஸ்ஸி சாதனை appeared first on Oruvan.com.

இந்தியா வருகிறார் மெஸ்ஸி
அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து கொல்கத்தா, மும்பை, அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியையும் மெஸ்ஸி சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெஸ்ஸி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்காக மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தை முன்பதிவு செய்வது உட்பட அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மெஸ்ஸியிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் காத்திருப்பததாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.

பயணத்​திட்​டத்​தின்​படி, லியோனல் மெஸ்ஸி டிசம்​பர் 12ஆம் திகதி இரவு 10 மணி​யள​வில் கொல்​கத்​தாவுக்கு வருகை தருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியா வருகிறார் மெஸ்ஸி appeared first on Oruvan.com.

பெனால்டி இல்லாமல் அதிக கோல்கள் அடித்து மெஸ்ஸி உலக சாதனை
கால்பந்து விளையாட்டில் பெனால்டி இல்லாமல் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அர்ஜென்டினா அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி படைத்துள்ளார்.

இதன் மூலம் போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை மெஸ்ஸி தன்வசப்படுத்தியுள்ளார்.

மேஜர் லீக் கால்பந்து தொடரில் New York Red Bulls அணிக்கு எதிரா நேற்று இடம்பெற்ற போட்டியில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மியாமி அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றிருந்தது.

இந்தப் போட்டியில் 60 மற்றும் 75வது நிமிடங்களில் மெஸ்ஸி கோல் அடித்திருந்தார். இதன் மூலம், லியோனல் மெஸ்ஸி, பெனால்டி இல்லாமல் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் போர்த்துகல் அணியின் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை முந்தினார்.

இந்த இரட்டை கோல்கள் மூலம் மெஸ்ஸி தனது பெனால்டி அல்லாத கோல்களின் எண்ணிக்கையை 764 ஆக உயர்த்தியதுடன், இது ரொனால்டோவை விட ஒரு கோல் அதிகமாகும்.

மேலும், ரொனால்டோவை விட 167 போட்டிகள் குறைவாக விளையாடியுள்ள மெஸ்ஸி மைல்கல்லை எட்டியுள்ளார்.

தற்போது 38 வயதாகும் புகழ்பெற்ற அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி 874 கோல்களை அடித்துள்ளார். எனினும், ரொனால்டோ 938 கோல்களை அடித்துள்ளார் என்பதும் குறிப்பித்தக்கது.

The post பெனால்டி இல்லாமல் அதிக கோல்கள் அடித்து மெஸ்ஸி உலக சாதனை appeared first on Oruvan.com.