license Archives - Oruvan.com

சாரதி உரிம அட்டைகளின் பற்றாக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும் – அமைச்சர் பிமல்
சாரதி உரிம அட்டைகளின் பற்றாக்குறை எதிர்வரும் 18 ஆம் திகதிக்குள் நிவர்த்தி செய்யப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“மோட்டர் போக்குவரத்துத் துறைக்குத் தெரியாமல் சுமார் 28 ஆண்டுகளாக அதே குழு சாரதி உரிமத் தொழிலில் ஈடுபட்டுள்ளது.

இதன் காரணமாக நிதி துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் பெரிளவில் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இராணுவத்தைப் பயன்படுத்தி இதற்கு தீர்வு காண முயன்றார்.

ஆனால் அது இன்னும் பலனளிக்கவில்லை. எனவே, இதனை நிறுத்தி புதிய முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் தீர்வு காண

நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

சாரதி உரிமம் அச்சிடும் இயந்திரங்களை நிறுவும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது.

அரசாங்கத்திடம் தற்போது 800,000 சாரதி உரிம அட்டைகள் உள்ளது. ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல் விநியோகிக்க எதிர்பார்த்துள்ளோம்.

தற்போதுள்ள அட்டைகள் முடிவடைவதற்கு முன்னர் மேலும் 01 மில்லியன் அட்டைகளை முன்பதிவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

புதிய அட்டைகள் மோட்டார் போக்குவரத்துத் துறை மூலம் அரசாங்கத்தால் அச்சிடப்படும் , இதன் மூலம் அச்சிடும் போது அட்டையொன்றுக்கு 167 ரூபா சேமிக்க முடியும்” என்றார்.

The post சாரதி உரிம அட்டைகளின் பற்றாக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும் – அமைச்சர் பிமல் appeared first on Oruvan.com.

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் – இடைநிறுத்தப்பட்ட பஸ்ஸொன்றின் உரிமம்
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட வாகன பரிசோதனையின் போது, பாணந்துறை – கெசல்வத்தை பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு சென்ற பஸ்ஸின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை குறித்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநரின் கடமைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து நேற்றையதினம் பாணந்துறை பழைய பாலத்திற்கு அருகில் போக்குவரத்து சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில் பஸ்ஸொன்றின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

The post க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் – இடைநிறுத்தப்பட்ட பஸ்ஸொன்றின் உரிமம் appeared first on Oruvan.com.

தாமதமான சாரதி அனுமதிப் பத்திரங்களை விரைவில் வழங்க நடவடிக்கை
அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 1,30,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் இந்த மாதத்திற்குள் வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார்.

போக்குவரத்து பிரதி அமைச்சர் மற்றும் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு ஆகியோர் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர வளாகத்திற்கு மேற்கொண்ட அவசர பரிசோதனை விஜயத்தின் போதே இதனைத் தெரிவித்துள்ளனர்.

இணையவழி முறையின் ஊடாக நிறுவனத்தில் சேவைகளை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார்.

இதன்போது, ​​நிறுவனத்தின் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

தற்போதைய தொழில்நுட்ப முறைகளை நவீன, மிகவும் பயனுள்ளவிதமாக மாற்றுவதன் மூலம் அதனை மிகவும் திறமையான, சேவை சார்ந்த பொது நிறுவனமாக மாற்றுவதற்கான திட்டங்களை அறிவித்தனர்.

புதிய அரசாங்கத்தின் கொள்கையானது 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு வரலாற்று மாற்றத்தை அடைவதாகும் என்றும் அமைச்சர்கள் வலியுறுத்தினார்கள்.

இந்த அபிலாஷைகளை நனவாக்க தேவையான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கான தமது அர்ப்பணிப்பை அவர்கள் எடுத்துரைத்தனர்.

கட்டிடங்கள் கட்டுவது போன்ற பௌதீக உட்கட்டமைப்பு மேம்பாட்டில் மட்டும் கவனம் செலுத்தாமல், சேவை வழங்கலின் திறனை மேம்படுத்த மனித வளம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

The post தாமதமான சாரதி அனுமதிப் பத்திரங்களை விரைவில் வழங்க நடவடிக்கை appeared first on Oruvan.com.

மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் – வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை
மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரிப்பதற்காக கடந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை மதுபான அனுமதிப்பத்திரம் வைத்திருப்போர் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து ஏ.எச்.எம்.டி நவாஸ், குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இலங்கை மதுபான உரிமதாரர்கள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் பிரதிவாதிகளாக நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 1/2024 மதுபான அனுமதிப்பத்திரத்துக்கான வருடாந்தக் கட்டணத்தை 20 மில்லியன் ரூபாவாக உயர்த்தியதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

வருடாந்த உரிமக் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் தமக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டதாகவும், தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் கூறி இந்த மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி, 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி உரிமக் கட்டணத்தை வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

The post மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் –  வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை appeared first on Oruvan.com.