leader Archives - Oruvan.com

சுயநினைவற்ற நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஈரானின் புதிய உச்ச தலைவர் – ‘தி டைம்ஸ்’
அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் காயமடைந்த ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி,

தற்போது சுயநினைவற்ற நிலையில் புனித நகரமான கோமில் (Qom) மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொஜ்தபா கமெனி சுயநினைவின்றி இருப்பதாகவும்,  தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தூதரகக் குறிப்பொன்றை மேற்கோள் காட்டி, ‘தி டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானின் உச்ச தலைவர் தலைமறைவாகியுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அவரது இருப்பிடம் வெளிப்படுத்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.

தலைநகர் தெஹ்ரானுக்குத் தெற்கே 87 மைல் தொலைவில் உள்ள கோம் நகரம், ஷியா இஸ்லாமியர்களின் புனிதத் தலமாகவும், மதத் தலைநகராகவும் கருதப்படுகிறது.

உச்ச தலைவர் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகளுக்குத் தெரிந்திருந்த அவரது இருப்பிடம் தற்போதுதான் முதன்முறையாக பொதுவெளியில் கசிந்துள்ளது.

மொஜ்தபா கமெனி பதவிக்கு வந்தது முதல் இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை. ஈரான் அரசு ஊடகங்கள் அவர் கூறியதாகச் சில செய்திகளை வெளியிட்டாலும், அவரது நேரடி வீடியோ காட்சிகளோ புகைப்படங்களோ வெளியாகவில்லை என்பது இந்தத் தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இதனிடையே, மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா கமெனியின் உடலை கோம் நகரில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post சுயநினைவற்ற நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஈரானின் புதிய உச்ச தலைவர் – ‘தி டைம்ஸ்’ appeared first on Oruvan.com.

தந்தையின் பாதையில் மகன் – திரைமறைவிலிருந்து ஈரானின் அதிகார உச்சிக்குச் சென்ற மொஜ்தபா
ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின் ஆரம்ப தாக்குதலில் தெஹ்ரான் நகரில் உள்ள தனது வளாகத்தில் உயிரிழந்த அவரது தந்தை அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) க்கு பதிலாக அவர் பதவி ஏற்றுள்ளார்.

மொஜ்தபா ஹொசைனி கமேனி (Mojtaba Hosseini Khamenei), அந்நாட்டின் அடுத்த உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்ட நிலையில் இந்த நியமனம் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் மேலதிக விபரங்களும் ஈரானிய அரசாங்கத்தினால் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கமைய 80 பேர் கொண்ட நிபுணர்கள் சபை புதிய அதி உயர் தலைவரை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்த நிலையில், நேற்று இந்த முடிவை இறுதி செய்துள்ளதாக ஈரானிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

56 வயதான மொஜ்தபா கமேனி, திரைமறைவில் பெரும் செல்வாக்கு செலுத்தும் நபர் ஒருவராகக் கருதப்பட்டார்.

பாசிஜ் துணை இராணுவப் படையை வழிநடத்தியது மற்றும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தது போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.

எனினும் இவ்வாறான யூகங்கள் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்த போதிலும், அவர் இதுவரை இஸ்லாமிய குடியரசில் எந்தவொரு அதிகாரப்பூர்வ பதவியையும் வகிக்கவில்லை.

கடந்த காலத்தில் மொஜ்தபா கமேனியின் பெயர் இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமது செல்வாக்கை வளர்த்தெடுத்த அவரது தந்தையைப் போன்ற ஒரு தலைவராக உருவெடுப்பதற்கு சில காலம் எடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆட்சியின் உயர்மட்டப் பிரிவுகளுக்கு இடையே நிலவும் பல்வேறு பிளவுகளைச் சரிசெய்யும் ஒரு மத்தியஸ்தராகச் செயல்படுவதே இப்போது அவரது முக்கியப் பணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

The post தந்தையின் பாதையில் மகன் – திரைமறைவிலிருந்து ஈரானின் அதிகார உச்சிக்குச் சென்ற மொஜ்தபா appeared first on Oruvan.com.

அலி கமெனி கொலை – கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை
ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமெனி ( Ayatollah Ali Khamenei) நேற்று (28.02) காலை நடைபெற்ற அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலின்போது அவரது அலுவலகத்தில் கொலை செய்யப்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அயதுல்லா அலி கமெனி “வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவர்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

மேலும் ஈரானியர்கள் “தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுங்கள்” என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இதேவேளை விமானத் தாக்குதல்களில் சுமார் 40 ஈரானிய அதிகாரிகள் உயிரிழந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைவர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், ஈரான் கடுமையான பதிலடி கொடுக்கப் போவதாக எச்சரித்துள்ளது. அமெரிக்க இராணுவத் தளங்கள் உள்ள பகுதிகள் மற்றும் அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்புடைய நாடுகளான டுபாய் (Dubai), தோஹா(Doha), பஹ்ரைன் (Bahrain) குவைட் (Kuwait) ஆகிய இடங்கள் பாதுகாப்பு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஈரான் முழுவதும் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பெண்கள் பாடசாலையொன்றை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 108 பேர் உயிரிழந்ததாகவும் ஈரான் அரசு கூறியுள்ளது.

The post அலி கமெனி கொலை – கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான்  எச்சரிக்கை appeared first on Oruvan.com.

அடக்குமுறைசார் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டு வருவதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
இலங்கையில் அடக்குமுறைசார் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவை வேலைத்திட்டம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிதாக அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம் என்பவற்றின் மற்றுமொரு கட்டம் இன்று மத்துகம நகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இங்கு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இதனை தெரிவித்தார்.

மக்களின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக, நாட்டில் வறுமை தற்போது 50 வீதமாக அதிகரித்து காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

2028 இல் கடனைத் திருப்பிச் செலுத்தும் நடவடிக்கையே பெரும் சவாலாக அமையும் என கூறிய அவர் 5 பில்லியன் டொலர் வருடாந்தம் கடனைத் திருப்பிச் செலுத்த, வெளிநாட்டு கையிருப்புக்களை நாம் உயர் மட்டத்தில் பேணி வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு கிடைக்கும் அந்நிய செலவாணி உயர் மட்டத்தில் காணப்பட வேண்டும் என்பதுடன் இதற்கு மேலதிகமாக குறைந்தபட்சம் 5 வீத பொருளாதார வளர்ச்சி காணப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

The post அடக்குமுறைசார் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டு வருவதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

த.வெ.க. தலைவர் விஜயின் திருச்சி பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு
தமிழகத்தின் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ளிட்ட 04 இடங்களில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் நடத்த திட்டமிட்டிருந்தார்.

ஆனால், தற்போது விஜயின் பிரச்சார கூட்டத்திற்கு பொலிஸார் அனுமதி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் தொண்டர்களிடையே உரையாற்ற உள்ள நிகழ்வை சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பதில் திருச்சி மரக்கடை, உழவர் சந்தை பகுதியில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக

இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

திருச்சியை தொடர்ந்து அரியலூர், குன்னம், பெரம்பலூர் பகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post த.வெ.க. தலைவர் விஜயின் திருச்சி பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு appeared first on Oruvan.com.

பாதாள உலகக் கும்பல் தலைவர் வைத்தியசாலையில் அனுமதி
போதைப்பொருள் கடத்தற்காரரும் பாதாள உலகக் கும்பல் தலைவருமான நதுன் சிந்தக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிக்குன்குன்யா நோய்காரணமாக சிகிச்சை பெறுவதற்காக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் மற்றும் விசேட படையினரின் பாதுகாப்புடன் நதுன் சிந்தக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது ஏராளமான குற்றச்சாட்டுகளில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

கொலை, கொள்ளை, தாக்குதல், வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் நாட்டில் பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை

போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள அவர் மடகாஸ்கரில் இன்டர்போலால் கைது செய்யப்பட்டு மார்ச் 15, 2023 அன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

The post பாதாள உலகக் கும்பல் தலைவர் வைத்தியசாலையில் அனுமதி appeared first on Oruvan.com.

மறைந்த ஹிஸ்புல்லா தலைவருக்கு இன்று இறுதி அஞ்சலி
லெபான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த உள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் இவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சுமார் 04 மாதங்களுக்குப் பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை

அவரது இறுதிக் கிரியையகள் (23) நடைபெறுகின்றன.

பாதுகாப்பு காரணங்களுக்காக தாமதமான பொது இறுதிச் சடங்கு பெய்ரூட்டின் கேமில் சாமூன் ஸ்போர்ட்ஸ் சிட்டி ஸ்டேடியத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான தனிநபர்கள் மற்றும் ஆர்வலர்கள் தவிர 65 நாடுகளைச் சேர்ந்த சுமார் 800 பிரமுகர்கள் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார்கள் என ஹிஸ்புல்லா அதிகாரி அலி தாமோஷ் தெரிவித்துள்ளார்.

The post மறைந்த ஹிஸ்புல்லா தலைவருக்கு இன்று இறுதி அஞ்சலி appeared first on Oruvan.com.

நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்கள், சிறப்புரிமைகள் மீறப்பட்டு வருவதாக எதிர்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்கள், சிறப்புரிமைகள், நிலையியற் கட்டளைகள் என சகலதும் இன்று மீறப்பட்டு வருவதாக

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சிறப்புரிமை பிரச்சினையொன்றிற்காக, சபாநாயகர், சபை முதல்வர் மற்றும் ஜனாதிபதியை சந்தித்தும் தொலைபேசி வாயிலாகவும் கலந்துரையாடினோம்.

பிரச்சினைக்கு இதுவரை தீர்வு கிடைக்காத பட்சத்திலேயே சபையில் கேள்வி எழுப்புகிறோம்

நிலையியற் கட்டளைகள், சம்பிரதாயங்கள், ஒழுங்குவிதிகள் குறித்து சபாநாயகர் பேசினாலும், இந்த சம்பிரதாய ஒழுங்குகள் பின்பற்றப்படுவதில்லை.

சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் Erskine May மற்றும் கவுலன் ஷட்லர் போன்ற விதிகள் மற்றும் மரபுகளைக் கொண்ட புத்தகங்களைப் படிக்குமாறு

பரிந்துரைக்கிறேன்.

வெளிநாட்டு தூதுவர்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற நட்புறவுச் சங்கங்களிலும் வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.

இது நாடாளுமன்ற சம்பிரதாயம் அல்ல. முற்போக்காக நடந்து, நாடாளுமன்ற குழுக்களில் எதிர்க்கட்சிக்குத் தேவையான

பிரதிநிதித்துவ எண்ணிக்கையை பெற்றுத் தருமாறு கோருகிறோம்.

தற்போது கூட்டுறவு சங்கத் தேர்தல்களிலும் அடக்குமுறை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கம்புறுப்பிட்டியிலும் அடக்குமுறையே நடந்தது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கூட சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிராக பேசியதால் அங்கும் அடக்குமுறை முன்னெடுக்கப்பட்டது.

இந்த அடக்குமுறைப் போக்குக்கு இடமளிக்க முடியாது” என்றார்.

The post நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்கள், சிறப்புரிமைகள் மீறப்பட்டு வருவதாக எதிர்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றத்திற்கான குழு தலைவரானார் ஜீவன் தொண்டமான்
பொதுத் தேர்தலில் சிலிண்டர் மற்றும் யானை சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள்

குழுவின் தலைவராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி நுவரெலியா மாவட்டத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான ஒரேயொரு நாடாளுமன்ற

உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஆவார்.

46,438 அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரான ஜீவன் தொண்டமான் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

இந்தநிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றத்திற்கான குழு தலைவராக ஜீவன் தொண்டமான் இன்று வெள்ளிக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முதலில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்னவை குழுவின் தலைவராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் பின்னர் இந்த தீர்மானத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றத்திற்கான குழு தலைவரானார் ஜீவன் தொண்டமான் appeared first on Oruvan.com.