largest Archives - Oruvan.com

இலங்கை வரலாற்றில் அதிஷ்ட இலாப சீட்டில் மிகப்பெரிய பரிசு தொகை வெல்லப்பட்டுள்ளது
இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய அதிஷ்ட இலாப சீட்டு பரிசு தொகை வெல்லப்பட்டுள்ளது.

மெகா பவர் 2210 ஆவது சீட்டிழுப்பில், 47 கோடியே 45 லட்சத்து 99 ஆயிரத்து 422 ரூபா சூப்பர் பரிசுடன் கூடிய வெற்றி பெற்ற லொட்டரி சீட்டை, கோகரெல்லா பகுதியைச் சேர்ந்த விற்பனை முகவரான எச்.ஏ. ஜானகி ஹேமமாலா விற்பனை செய்துள்ளார்.

எனினும் வெற்றியாளர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை.

முன்னதாக, தேசிய லொட்டரி சபையின் மெகா பவர் லொட்டரி, லொட்டரி வரலாற்றில் மிகப்பெரிய பரிசான 230 மில்லியன் ரூபா பரிசை வென்று சாதனை படைத்தது.

The post இலங்கை வரலாற்றில் அதிஷ்ட இலாப சீட்டில் மிகப்பெரிய பரிசு தொகை வெல்லப்பட்டுள்ளது appeared first on Oruvan.com.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரம் -மாஸ்கோ மீது அதிக அழுத்தம் கொடுக்குமாறு செலன்ஸ்கி மீண்டும் நட்பு நாடுகளுக்கு வலியுறுத்தல்
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில் ஒரே இரவில் அதிக எண்ணிக்கையிலான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 48 மணி நேரத்தில் உக்ரைன் மீது நடத்தப்பட்ட இரண்டாவது பெரியளவிலான தாக்குதல் இதுவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரியளவான தாக்குதலை எதிர்கொண்டதைத் தொடர்ந்து 30 இற்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களில் மீட்புப் பணியாளர்கள் பணியாற்றி வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும் போர் நிறுத்தத்தில் ஈடுபட மாஸ்கோ மீது அதிக அழுத்தம் கொடுக்குமாறு உக்ரைன் மீண்டும் அதன் நட்பு நாடுகளை வலியுறுத்துகிறது.

அமெரிக்காவின் மௌனம் புடினை ஊக்குவிக்கும் எனவும் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஆர்வமாக இருப்பதாகக் கூறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு வெளிப்படையான முயற்சியாகவும் செலென்ஸ்கியின் கூற்று அமைந்துள்ளது.

The post உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரம் -மாஸ்கோ மீது அதிக அழுத்தம் கொடுக்குமாறு செலன்ஸ்கி மீண்டும் நட்பு நாடுகளுக்கு வலியுறுத்தல் appeared first on Oruvan.com.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்
உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்களில் ஒன்றான MSC MARIELLA கப்பல், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு சர்வதேச சரக்கு முனையத்திற்கு செயல்பாட்டு நடவடிக்கைகளுக்காக வந்தடைந்துள்ளது.

இதன்படி, இலங்கையின் சரக்கு முனையம் ஒன்றுக்கு வந்த மிகப்பெரிய சரக்குக் கப்பலாக இந்தக் கப்பலை அடையாளப்படுத்த முடியும் என இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவிக்கின்றது.

கொழும்பு துறைமுகம், கடல்சார் பிராந்தியத்தில் முதன்மையான மைய துறைமுகமாக மாறி வருவதுடன், உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்களை இயக்கும் திறன், MSC MARIELLA கப்பலின் வருகையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த சபை அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு கட்டப்பட்ட MSC MARIELLA சரக்குக் கப்பல், 399.90 மீற்றர் நீளமும் 61.30 மீற்றர் அகலமும் உடையது.

இதன் சுமை திறன் 240,739.0 தொன்கள் என்பதுடன் கப்பலால் சுமக்கக்கூடிய சரக்கு அளவு 24,24 சரக்கு பெட்டிகளாகும்.

இந்தக் கப்பல் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான கிழக்கு சர்வதேச சரக்கு முனையத்திற்கு வந்தடைந்ததன் மூலம், கிழக்கு முனையத்தின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்களை இயக்கும் திறன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, கிழக்கு சரக்கு முனையம் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்ப உத்திகளால் பொருத்தப்பட்ட (STS) கிரான்டி கிரேன்கள் மூலம் திறமையாகவும் பாதுகாப்பாகவும் சரக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியளிக்கப்பட்டுள்ளது.

இது, மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான இலங்கை துறைமுக அதிகார சபையின் திறன் மற்றும் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

The post கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல் appeared first on Oruvan.com.