Landslide Archives - Oruvan.com

மண்சரிவு அபாயம் – மீளக்குடியமர்த்தும் திட்டத்திற்கான கொடுப்பனவு 25 இலட்சமாக உயர்வு
மண்சரிவு மற்றும் மண்சரிவு அதி அபாய நிலை காரணமாக குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் திட்டத்தின் கீழ், வீடொன்றை நிர்மாணிப்பதற்காக வழங்கப்படும் நிதியை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட அல்லது மண்சரிவு அதி அபாயப் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களை பாதுகாப்பான இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன்படி, பயனாளர்களே வீடுகளை நிர்மாணிக்கும் முறையின் கீழ் அந்த குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பதற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

இதுவரை இத்திட்டத்தின் கீழ் ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்காக அதிகபட்சமாக 1.6 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டதுடன், அதனை 2.5 மில்லியன் ரூபா வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இணங்க இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

The post மண்சரிவு அபாயம் – மீளக்குடியமர்த்தும் திட்டத்திற்கான கொடுப்பனவு 25 இலட்சமாக உயர்வு appeared first on Oruvan.com.

பதுளை , மீகஹாகியுல்ல பிரதேசத்தில் மீளவும் மண் சரிவு
பதுளை , மீகஹாகியுல்ல பிரதேச பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று காலை மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக மீகஹாகியுல்ல பிரதேச செயலாளர் நிர்மலா குமுதுனி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த மண்சரிவு காரணமாக உயிர் அல்லது சொத்து இழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பாதுகாப்பு மையங்களுக்குச் செல்லாத ஒரு சில குடும்பங்கள் தொடர்ந்து இங்கேயே தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, பதுளை – மஹியங்கனை வீதியின் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளர்.

இந்நிலையில், போக்குவரத்தை சரிசெய்ய வீதி அபிவிருத்தி அதிகாரசபை மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, குறித்த வீதியில் வாகனங்களைச் செலுத்துபவர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

The post பதுளை , மீகஹாகியுல்ல பிரதேசத்தில் மீளவும் மண் சரிவு appeared first on Oruvan.com.

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நீட்டித்துள்ளது.

நான்கு மாவட்டங்களிலும் உள்ள 40 மாவட்ட செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நடைமுறையில் உள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, டிசம்பர் 06 – 09 வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது பெரும்பாலும் தென் மாகாணத்தை பாதிக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி கலாநிதிவசந்த சேனாதீர தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர், டிசம்பர் 09-13 வரை மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது மத்திய மாகாணத்தை, பெரும்பாலும் மாத்தளை, பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களை பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் பின்னர் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், டிசம்பர் 16-19 திகதிகளில் மீண்டும் மழை பெய்யும் என்றும், மத்திய மாகாணத்தை மீண்டும் பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கலாநிதி வசந்த சேனதீரா சுட்டிக்கவிளக்கினார், மேலும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தினார்.

The post நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு appeared first on Oruvan.com.

மழை குறைந்தாலும் மண் சரிவு அபாயம் நீங்கவில்லை – பொது மக்களுக்கு எச்சரிக்கை
மழையுடனான காலநிலை குறைவடைந்த போதும் மத்திய மலைப்பகுதிகளில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் நீர் படிப்படியாக கீழ்நோக்கி நகர்ந்து வருகிறது.

எனவே வெள்ள அச்சுறுத்தல் தொடர்பாக நீர்ப்பாசனத் திணைக்கள அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனத்தில் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்பொழுது நாட்டிலுள்ள சகல இடங்களிலும் மண் ஈரப்பதமாக இருப்பதால், சில சமயங்களில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே மக்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லும்போது இது குறித்துக் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு,திருகோணமலை முதல் காங்கேசன்துறை வரையிலான கரையோரப் பகுதியில் மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் மீனவர் சமூகத்திற்கு அறிவித்துள்ளார்.

சூறாவளியின் நேரடித் தாக்கம் நீங்கியுள்ள போதிலும், அதன் மறைமுகத் தாக்கம் இன்னும் நீடிக்கிறது. காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும் எனவும் கடல் அலைகள் 2-3 மீட்டர் வரை உயரும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஏனைய கடல் பகுதிகளில் காற்றின் வேகம் குறைந்துள்ளதால், மீன்பிடி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து மீன்பிடித் திணைக்களத்துடன் கலந்தாலோசித்து பொருத்தமான முடிவுகளை எடுக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

The post மழை குறைந்தாலும் மண் சரிவு அபாயம் நீங்கவில்லை – பொது மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Oruvan.com.

பதுளையில் மண் சரிவு காரணமாக நால்வர் உயிரிழப்பு – பலர் காணாமல் போயுள்ளனர்
நிலவும் சீரற்ற வானிலை காணமாக பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒன்பது பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலை காரணமாக மாவட்டத்தில் ஆறு இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த அனர்த்தங்களில் சிக்கி இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் ஒன்பது பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் பதிவாகியுள்ளன. காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நாட்டின் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பதுளை, கேகாலை ,குருநாகல், மாத்தளை , இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கையும், தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post பதுளையில் மண் சரிவு காரணமாக நால்வர் உயிரிழப்பு – பலர் காணாமல் போயுள்ளனர் appeared first on Oruvan.com.

கடுகன்னாவ மண்சரிவு – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 04 ஆக அதிகரிப்பு
பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் மண்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 04 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, காயமடைந்த நால்வர் தற்போது மாவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மீது மண் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து காரணமாக, குறித்த வீதியின் கனேதென்ன சந்தியிலிருந்து கடுகன்னாவ வரையான பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கண்டி – கொழும்பு

கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் வாகனங்கள் ரம்புக்கனை – கலகெதர ஊடாக கண்டிக்கும், கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் இதே மாற்று வீதி ஊடாகவும் பயணிக்க முடியும்.

கம்பளை – கொழும்பு

கம்பளையிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் கொழும்பிலிருந்து கம்பளை செல்லும் வாகனங்கள் மாவனெல்ல – ஹெம்மாத்தகம ஊடான மாற்று வீதியைப் பயன்படுத்த வேண்டும்.

அதிவேக நெடுஞ்சாலை

கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் வாகனங்கள் இயலுமானவரை அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post கடுகன்னாவ மண்சரிவு – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 04 ஆக அதிகரிப்பு appeared first on Oruvan.com.

10 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை இன்றிரவு 8.30 வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலையில் ரம்புக்கன, தெஹியோவிட்ட, கேகாலை, அரநாயக்க, யட்டியந்தோட்டை மற்றும் மாவனெல்ல உள்ளிட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் உடபலாத்த, தொலுவ, பஹத்ததும்பர, உடுநுவர, தெல்தோட்ட மற்றும் பஸ்பாகே கோரலே போன்ற பகுதிகளுக்கும், கேகாலையில் வரகாபொல, ருவன்வெல்ல, புலத்கொஹுபிட்டிய மற்றும் கலிகமுவ ஆகிய பகுதிகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ் நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

The post 10 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை appeared first on Oruvan.com.

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 04 மணி முதல் நாளை மாலை 04 மணி வரை எச்சரிக்கை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளை, காலி. கம்பஹா, கண்டி, கேகாலை, நுவரெலியா, மாத்தளை, மொனராகலை, நுவரெலியா, இரத்தினபுரி

ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை appeared first on Oruvan.com.

பசறை-லுணுகல வீதியில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு
பதுளை மாவட்டதின் பசறை-லுணுகல வீதியில் 13ஆம் தூணுக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

மேலும் ஒரு பாதையை மட்டும் திறந்து வைப்பதற்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்பு இதே இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் வீதியை விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே பசறை, ஹெலபொல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, அங்கு வசிக்கும் மூன்று குடும்பங்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப பசறை பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பசறை-லுணுகல வீதியில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு appeared first on Oruvan.com.

சீரற்ற வானிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 05 மாவட்டங்களின் 10 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளை மாவட்டத்தில் பதுளை, எல்ல, ஹாலி எல, பசறை, மொனராகலை மாவட்டத்தில் பிபில, படல்குபுர, நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை, குருநாகல் மாவட்டத்தில் நாரம்மல, மற்றும் மாத்தளை மாவட்டத்தில் உக்குவெல, ரத்தோட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று பிற்பகல் பெய்த பலத்த மழை காரணமாக மின்னல் தாக்குதலுக்கு இலக்கான ஹாலி எலவின் உடுகம பகுதியில் இரண்டு பசுக்கள் உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

The post சீரற்ற வானிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை appeared first on Oruvan.com.