Land acquisition Archives - Oruvan.com

முல்லைத்தீவில் கடற்படை முகாமிற்கான காணி சுவீகரிப்பு – மக்கள் எதிர்ப்பினால் இடைநிறுத்தம்
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சிலாவத்தை பகுதியில் மக்களுக்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்ட இரண்டு ஏக்கர் காணியில் கடற்படையினர் தளம் அமைத்துள்ளார்கள்.

இந்த காணி சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகள் இன்று 17.06.2025 மேற்கொள்ள அதிகாரிகள் சென்ற நிலையில் மக்கள் மற்றும் காணியின் உரிமையாளர்கள் எதிர்ப்பினை தெரிவித்தமையினால் காணி அளவீட்டு பணிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரினால் காணி உரிமையாளர்களுக்கு காணி சுவீகரிப்பு தொடர்பிலான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

(சிலாவத்தை கிராம அலுவலகர் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் இலங்கை கடற்படைத்தளம் அமைந்திருக்கும் காணியானது காணி கையகப்படுத்தல் சட்டத்தின் அத்தியாயம் 460 இன் 5ஆவது பிரிவின் கீழ் இன்று நிலஅளவை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை அரச நில அளவையாளர் கி.கிருஸ்ணராசா அவர்கள் அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்)

இந்த நிலையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகள், அரச நிலஅளவையாளர் கி.கிருஸ்ணராசா, சிலாவத்தை கிராம சேவையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குறித்த இடத்திற்கு வருகை தந்த போது காணியின் உரிமையாளர்கள் மக்கள் ஒன்றிணைந்து தங்கள் எதிர்ப்பு நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இதனால் காணி அளவீட்டுப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சிலாவத்தை கிராமத்தில் சிலாவத்தை கடற்படை முகாம் 2009 ஆண்டு போருக்கு பின்னர் நீண்ட காலமாக அமைந்துள்ளது.

இந்த காணியானது நான்கு மக்களுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் என மக்கள் தெரிவித்துள்ளார்கள் (0.7964ஹக்டயர்)

1981 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த காணியில் தங்கள் வசித்து வந்துள்ளதாகவும் 2004 ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது காணிக்கான ஆவணங்கள் அனைத்தும் அழிந்துள்ளதாகவும் அதன் பின்னர் தமக்கான எந்த ஆவணமும் இல்லாத நிலையில் 2009 ஆம் ஆண்டு போருக்குப் பின்னர் குறித்த காணியில் கடற்படையினர் முகாமைத்து வசித்து வந்துள்ள நிலையில் இந்த காணியினை உரிய உரிமையாளர்களுக்கு வழங்க கோரி பல தடவைகள் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு கோரிக்கை விடுத்தும் எதுவும் பலனளிக்காத நிலையில் இந்த காணியை சுவீகரிக்க உள்ளதாக வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் காணிக்கான அளவீட்டு பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் மக்கள் எதிர்ப்பினை தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது

The post முல்லைத்தீவில் கடற்படை முகாமிற்கான காணி சுவீகரிப்பு – மக்கள் எதிர்ப்பினால் இடைநிறுத்தம் appeared first on Oruvan.com.