Kurunegala Archives - Oruvan.com

குருநாகல், நாரம்மல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தைகள் உட்பட மூவர் பலி
குருநாகல், நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகனவிபத்தில் இரண்டு கைக்குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

நாரம்மல – கிரிஉல்ல வீதியில் நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரொன்று வீதியை விட்டு விலகி வலது பக்கத்தின் எதிர் திசையில் பயணித்த பேருந்து ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களில் மஹவ, திவுல்லாவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய காரின் சாரதியும், 09 மாதங்கள் மற்றும் 11 மாதங்களுடைய இரண்டு பெண்குழந்தைகளும் அடங்குவர்.

விபத்தில் காயமடைந்த பேருந்து சாரதி, நடத்துனர் மற்றும் பயணி ஒருவரும் காயமடைந்து தம்பதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, வெல்லவ பொலிஸ் பிரிவின் வாரியப்பொல – கும்புக்கெடே வீதியில் உள்ள கபுஹேன பகுதியில் இடம்பெற்ற

மற்றொரு விபத்தில் நபரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குருநாகல் கும்புக்கெடே நோக்கிச் சென்ற லொறியே வீதியில் சென்றவர் மீது மோதியுள்ளது.

The post குருநாகல், நாரம்மல பகுதியில் இடம்பெற்ற  விபத்தில் குழந்தைகள் உட்பட மூவர் பலி appeared first on Oruvan.com.

குருநாகல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிவாயு தொட்டி வெடித்ததில் நான்கு பேர் பலி
கொழும்பு – குருநாகல் வீதியின் வெஹெரா சந்திப்புக்கு அருகிலுள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் மேலாளர், இரண்டு தொழிலாளர்கள் மற்றும் ஒரு லொறி ஓட்டுநர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, மேலும் நான்கு பேர் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எரிபொருள் நிரப்ப லொறி வந்தபோது இரவு 11 மணியளவில் இந்த வெடிப்பு ஏற்பட்டது.

சுமார் 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு பெரிய எரிபொருள் தொட்டிகளில் ஒன்று – நிரப்பும் பணியின் போது வெடித்து தீப்பிடித்தது என்று ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன.

பயிற்சி பெறாத ஒரு தொழிலாளி எரிபொருள் பரிமாற்றத்தை முறையற்ற முறையில் கையாள்வதால் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

தொட்டி வெடித்தபோது பாதிக்கப்பட்டவர்கள் நிரப்பும் செயல்முறையை நிர்வகிக்க முயன்றதாகவும், இதன் விளைவாக உயிருக்கு ஆபத்தான தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

குருநாகல் நகராட்சி மன்ற தீயணைப்புத் துறை, குருநாகல் பொலிஸார் மற்றும் அருகிலுள்ள இலங்கை இராணுவ வீரர்களின் அவசரகால குழுவினர் விரைவாக செயல்பட்டனர்.

சுமார் இரண்டரை மணி நேரம் தீயை அணைத்து, தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

வெடிக்காத மற்றொரு 6,000 லீற்றர் வாயு தொட்டியை மாநகர சபை ஊழியர்கள் மிகுந்த முயற்சியுடன் மூடியதால், ஏற்படவிருந்த பாரிய சேதம் ஓரளவு தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தீ அணைக்கப்பட்டவுடன் பாதிக்கப்பட்டவர்களின் எரிந்த உடல்கள் மீட்கப்பட்டன. வெடிப்புக்கான காரணம் குறித்து பொலிஸார் முழு விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

The post குருநாகல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிவாயு தொட்டி வெடித்ததில் நான்கு பேர் பலி appeared first on Oruvan.com.

வெல்லவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
வெல்லவ – மரலுவாவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்தப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த கணவன் மனைவி மீது இனந்தெரியாத ஒருவரால் நேற்று (24) இரவு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரலுவாவ பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த கணவனும் மனைவியும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர் 30 வயதுடைய பெண் எனவும், அவர்கள் அப்பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்த திருமணமான தம்பதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணமோ, சந்தேகநபர்கள் தொடர்பிலான தகவலோ இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post வெல்லவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.