Kurunagale Archives - Oruvan.com

குருணாகலை பகுதியில் கேபிள் கார் விபத்து – ஏழு பேர் உயிரிழப்பு
குருணாகலை – மெல்சிரிபுரவின் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

மெல்சிரிபுர, பன்சியாகமவில் அமைந்துள்ள பௌத்த வன ஆசிரமமான நா உயன ஆரண்ய சேனாசனத்தில் (na Uyana Aranya Senasanaya) இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் இவர்கள் பலியாகியுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் இருவர் வெளிநாட்டு பிரஜைகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களின் உடல்கள் கொகருல்ல மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. ஏனைய பிக்குகளின் உடல்கள் குருணாகலை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்து இடம்பெற்ற வேளையில் 13 பிக்குகள் கேபிள் காரில் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

படுகாயமடைந்த பிக்குகள் தற்போது குருணாகலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களில் இந்தியா, ருமேனியா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த தலா ஒரு பௌத்த பிக்கு உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விகாரையில் பிக்குகள் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும் கம்பித் தடத்தில் இயங்கும் வண்டி, கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்திற்கான காரணம் குறித்த மேலதிக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

The post குருணாகலை பகுதியில் கேபிள் கார் விபத்து – ஏழு பேர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

யானை தாக்கியதில் தாயும், மகளும் உயிரிழப்பு
குருணாகல் பிரதேசத்தில் பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கச் சென்ற தாயும் மகளும் யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மஹாவ, நிகவலயாய மதியாவ பகுதியை சேர்ந்த 28 வயதான தக்ஷிலா சுபாஷினி என்ற இளம் பெண் மற்றும் 53 வயதுடைய அவரது தாயார் இனோகா குமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யானை தாக்கியதில் தாயும் மகளும் அம்பன்பொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், மகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலத்த காயமடைந்த தாய், மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட போதிலும் அவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அந்த பிரதேச மக்கள் விரைந்து செயப்பட்ட போதிலும் இருவரையும் காப்பாற்ற முடியாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post யானை தாக்கியதில் தாயும், மகளும் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

தங்க நகைகள், பணத்திற்கா ஆசைப்பட்ட முன்னாள் ஊழியர் – கொடூரமாக கொலை செய்யப்பட்ட தொழிலதிபர்
“வீடு கட்டும் ஒப்பந்தத்தை பார்வையிட வேண்டும் என கூறி அழைத்துச் செல்லப்பட்ட கமல் சம்பத்தின் கழுத்தை நெரித்து கொலைசெய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும், அவரிடம் இருந்த பணத்தையும் கொள்ளையடித்தனர்.

தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்கவே இந்தக் கொலையைச் செய்தோம்,” என்று குருநாகல் தொழிலதிபர் கொலையில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் 29 வயது இளைஞர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

இதன்படி, திருடப்பட்ட 4.8 மில்லியன் மதிப்புள்ள தங்க நகைகள், 1.4 மில்லியன் பணம் மற்றும் ஒரு கையடக்க தொலைபுசி ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குருநாகல் – மில்லாவ பகுதியில் ஒரு கோடீஸ்வர தொழிலதிபரை கடத்தி, கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடலை காரில் வைத்து எரித்து, ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பொருட்களை கொள்ளையடித்த 19 மற்றும் 29 வயதுடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் நேற்று (30) பொலிஸால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

இந்தக் குற்றத்தைச் செய்த 29 வயதுடைய பிரதான சந்தேக நபர், கொலை செய்யப்பட்ட கமல் சம்பத் குருப்புவின் ஹோட்டலின் முன்னாள் ஊழியர் ஆவார்.

தொழிலதிபரின் தங்க நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைக் கொள்ளையடிக்கும் நோக்கில் இந்த கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 29 வயது பிரதான சந்தேக நபர், ஐந்து மாதங்களுக்கு முன்பு சம்பத் குருப்புவுக்குச் சொந்தமான ஹோட்டலில் பணிபுரிந்தார். பின்னர் அங்கிருந்து அவர் வெளியேறியுள்ளார். எனினும் தொழிலதிபருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார்.

பிரதான சந்தேக நபர், மஹாவா பகுதியைச் சேர்ந்த 19 வயது நண்பருடன் சேர்ந்து தொழிலதிபரை கொலை செய்து அவரது தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தார்.

இதன்படி, கடந்த 25ஆம் திகதி காலை, 29 வயதுடைய சந்தேக நபர், தொழிலதிபரின் தொலைபேசியில் அழைத்து, ஒரு நண்பருக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்ட விரும்புவதாகக் கூறி, அதை ஆய்வு செய்ய வருமாறு கேட்டுக் கொண்டார்.

ஒப்பந்த வீடு கட்டும் தொழிலை நடத்தி வந்த சம்பத் குருப்பு, அன்று காலை தனது தலைமுடியை வெட்டிக் கொண்டு 29 வயது இளைஞரை சந்திக்க சென்றுள்ளார்.

கந்துபோடா பகுதியில், இரண்டு சந்தேக நபர்களும் தொழிலதிபரின் ஜீப்பில் ஏறி, வெறிச்சோடிய காணி உள்ள ஒரு பகுதிக்குச் சென்றிருந்தனர்.

அந்த நேரத்தில், ஜீப்பின் பின்னால் இருந்த 19 வயது இளைஞர் தொழிலதிபரின் கழுத்தில் நைலான் கயிற்றைக் கட்டியுள்ளார். மேலும் முக்கிய சந்தேக நபர் அவரை கழுத்தை நெரித்து கொலைசெய்துள்ளார்.

அதே பிற்பகலில், தொழிலதிபரின் உடலை ஜீப்பில் வைத்து மஹாவா பகுதிக்கு கொண்டு சென்று, அவர் அணிந்திருந்த தங்க நகைகள், பணம் மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியவற்றை கொள்ளையடித்து, அவரது உடலை வாகனத்தில் வைத்து எரித்துவிட்டுத் தப்பி சென்றுள்ளனர்.

இந்த மர்ம மரணம் தொடர்பான விசாரணைகள் வடமேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி திரு. அஜித் ரோஹனவின் முழு மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

விசாரணைகளின் அடிப்படையில் இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கொலை செய்யப்பட்டவரிடம் இருந்து திருடப்பட்ட தங்க நகைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன, மேலும் அடகு வைக்கப்பட்ட தங்க நகையும் மீட்கப்பட்டுள்ளது.

திருடப்பட்ட சுமார் 1.4 மில்லியன் ரூபாய் பணமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. கொலையில் பயன்படுத்தப்பட்ட கயிற்றையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தக் கொலையில் தொடர்புடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விசாரணைக்காக 48 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

The post தங்க நகைகள், பணத்திற்கா ஆசைப்பட்ட முன்னாள் ஊழியர் – கொடூரமாக கொலை செய்யப்பட்ட தொழிலதிபர் appeared first on Oruvan.com.

காரில் எரிந்த நிலையில் உணவக உரிமையாளர் ஒருவர் சடலமாக மீட்பு
மஹவ – தியபெடே பகுதியில் உள்ள காட்டில் காருக்குள் எரிந்த நிலையில் ஒரு நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த உடல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் முன்னெடுத்திருந்த முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் குருநாகல், மில்லேவ பகுதியைச் சேர்ந்த 49 வயதான ஹோட்டல் தொழிலதிபர் ஒருவர் என தெரியவந்தது.

குறித்த நபர் கடந்த 25ஆம் திகதி தலைமுடி வெட்டுவதற்காக வீட்டை விட்டுச் சென்றிருந்ததாகவும், எனினும், அவர் வீடு திரும்பாத நிலையில் அவரின் மனைவி தொரடியாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாக கூறப்படுகின்றது.

பொலிஸார் விசாரணைக்காக அவரது மனைவியை அழைத்து விசாரித்தபோது, கண்டு பிடிக்கப்பட்ட உடல் அவரது கணவருடையது என அடையாளம் காணப்பட்டது.

இதனையடுத்து, குருநாகல் பொது வைத்தியசாலையில் இன்று (27) பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இச்சம்பவம் குறித்து மஹவ தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post காரில் எரிந்த நிலையில் உணவக உரிமையாளர் ஒருவர் சடலமாக மீட்பு appeared first on Oruvan.com.

கலேவெல-குருநாகல் பிரதான வீதியில் விபத்து – கணவனும் மனைவியும் பலி
கலேவெல-குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

நாயொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் குழந்தை காயமடைந்த நிலையில் தம்புள்ள வைத்தியசாலையில்

அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்னர்.

தெஹியத்த கண்டிய பகுதியைச் சேர்ந்த 31 வயது கணவனும் 28 வயதான மனைவியுமே உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்திலேயே நாயும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு பெறுவதற்காக அவர்கள் தெஹியத்தகண்டியிலிருந்து குருநாகலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post கலேவெல-குருநாகல் பிரதான வீதியில் விபத்து – கணவனும் மனைவியும் பலி appeared first on Oruvan.com.